ஈசான்ய ஞானதேசிகர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஈசான்ய ஞானதேசிகர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார்.[1] இவரே திருவண்ணாமலையில் வாழ்ந்த முதல் ஞானி என்று கூறுகின்றார்கள். இவரை கந்தப்ப தேசிகர் என்றும், திருவண்ணாமலையின் ஈசான்ய திசையில் வசித்தமையால் ஈசான்ய ஞான தேசிகர் என்று அழைக்கப்பட்டார்.

இளமையும் வாழ்வும்

பாலாற்றின் அருகேயுள்ள வேலூர் என்ற இடத்தில் வாழ்ந்த திருநீலகண்டர் - உமைய பார்வதி தம்பதியினருக்கு மகனாக 1750 ல் பிறந்தார். [2]இவருக்கு பெற்றோரி கந்தப்பன் என்று பெயரிட்டனர். இள வயதில் துறவரம் பூண்டார், மௌனகுரு சுவாமிகளிடம் தீட்சை பெற்றார். [3]

பல்வேறு இடங்களுக்குச் சென்ற இவர், இறுதியில் திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கு ஈசான்ய இடத்தில் தவமிருந்தார். இவருடைய தவத்திற்கு இடையூறு நேராமல் இருக்க அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் புலிகளாக மாறி, காவல் இருந்ததாக கூறப்படுகிறது.

அற்புதங்கள்

  • தென்னாற்காடு மாவட்டத்தின் கலெக்டரான ஐடன் துரையின் காசநோயை குணப்படுத்தியவர்.
  • பெண்ணை ஆற்றில் வெள்ளம் வந்த போதும், ஐடன் துரையை குதிரையின் மூலமாகவே ஆற்றை கடக்க செய்தவர்.
  • தனக்கு நிலம் எழுதிக் கொடுக்க வந்த ஐடன் துரையை அண்ணாமலையாருக்கு எழுதித் தர செய்ததமை.

நூல்கள்

  • தோத்திரப்பாமாலை
  • அண்ணாமலைவெண்பா
  • அண்ணாமலையார் வெண்பா
  • அண்ணாமலையார் கன்றி

ஈசான்ய மடம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஈசான்ய லிங்கத்திற்கு அருகே ஞானதேசிகரின் சமாதி உள்ளது. [4] இவ்விடமானது தேசிகர் அண்ணாமலையாரை, தரிசிக்க செல்லும் இடமாகும். இவ்விடத்தினை வேட்டவலம் ஜமீன்தார் குடும்பம் மடமாக மாற்றியது. இவ்விடத்தினை ஈசான்ய மடம் என்கிறார்கள்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

  • www.dinamalar.com/supplementary_detail.asp?id=5982&ncat=19 சித்தி, முக்தி, சன்னிதி! மகான்களை தேடி.... - ஈசான்ய ஞானதேசிகர்
"https://tamilar.wiki/index.php?title=ஈசான்ய_ஞானதேசிகர்&oldid=27938" இருந்து மீள்விக்கப்பட்டது