அண்ணாமலை சுவாமிகள்
Jump to navigation
Jump to search
அண்ணாமலை சுவாமிகள் என்பவர் திருச்சுழிக்கு அருகே சமாதியடைந்த சித்தராவார்.[1] இவர் விருதுநகரைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொற்கொல்லர் சமூகத்தில் பிறந்தவர். இல்லறத்தையும், தொழிலையும் துறந்து துறவியாக ஆனார்.[1]
திருச்சுழிக்கு அருகே பெ. புதுப்பட்டி என்ற ஊரில் ஒரு சோலையில் குடியிருந்தார். இவரைச் சுற்றி எப்போதும் உயிரினங்கள் இருந்து கொண்டே இருக்கும். காலையில் பறவைகள் இவரைத் தேடி வந்து உணவினைப் பெற்றுக் கொள்ளும். குழந்தைகளுக்கு அண்ணாமலை தரிசனத்தை காட்டுதல் போன்ற சித்துகளை செய்துள்ளார்.[1]
சமாதியாகும் முன்பு ஒரு லிங்கத்தினைப் பிரதிஸ்டை செய்து வழிபட்டுள்ளார். அவ்விடத்தில் தற்போது சிவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.[1]