இலங்கையின் சட்டமா அதிபர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கை சட்டமா அதிபர்
AGdepartmentSL.png
தற்போது
சஞ்சய் இராசரத்தினம்

மே 26, 2021 (2021-05-26) முதல்
சட்டமா அதிபர் திணைக்களம்
பரிந்துரையாளர்அரசுத்தலைவர்
நியமிப்பவர்அரசுத்தலைவர்
நாடாளுமன்றப் பேரவையின் ஆமோதிப்பு
பதவிக் காலம்குறிப்பிட்ட கால எல்லை இல்லை
உருவாக்கம்பெப்ரவரி 19, 1801; 223 ஆண்டுகள் முன்னர் (1801-02-19)
முதலாமவர்யேம்சு டங்கின்
(இலங்கை நிதித்துறை வழக்கறிஞராக)
துணை சட்டமா அதிபர்இலங்கை மன்றாடியார் நாயகம்
இணையதளம்www.attorneygeneral.gov.lk

இலங்கையின் சட்டமா அதிபர் (Attorney General of Sri Lanka) என்பவர் இலங்கை அரசின் தலைமை சட்ட ஆலோசகரும், இலங்கை மீயுயர் நீதிமன்றத்தில் இலங்கை அரசின் முதன்மை வழக்கறிஞரும் ஆவார். இவரே சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைவர்ம் ஆவார். இப்பதவிக்குத் தகுந்தவரை ஆளும் கட்சியே நியமனம் செய்கிறது. இலங்கையின் தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆவார். இலங்கையின் அரசுத்தலைவருக்கு சட்டமா அதிபருக்கு ஆணைகள் வழங்க எந்த அதிகாரமும் இல்லை.

சட்டமா அதிபருக்கு செயலாட்சி அதிகாரம் எதுவும் இல்லை. இவ்வதிகாரம் நீதி அமைச்சருக்கே உள்ளது. சட்டமா அதிபருக்குத் துணை புரிய அரசுத் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) மற்றும் கூடுதல் தலைமை வழக்குரைஞர் (Additional Solicitor Generals) பலர் உள்ளனர்.

சட்டமா அதிபர்களின் பட்டியல்

# சட்டமா அதிபர் பதவியில் பதவியில் இருந்து விலகல்
1 பிரான்சிஸ் பிளெமிங்கு 1884 1892
2 சார்ல்சு சாமுவேல் கிரெனியர் 1892 1892
3 சார்ல்சு பீட்டர் லாயார்ட் 1892 1902
4 ஆல்பிரட் ஜோர்ஜ் லாசெலசு 1902 1911
5 அண்டன் பேட்ரம் 1911 1918
6 என்றி கோலன் 1918 1925
7 லான்சிலட் என்றி எல்பின்ஸ்டன் 1925 1929
8 எட்வர்ட் சென். ஜோன் ஜாக்சன் 1929 1936
9 ஜோன் வில்லியம் ரொனால்ட் இலங்கக்கூன் 1936 1942
10 மனிக்கு வதுமேஸ்திரி எண்ட்ரிக் டி சில்வா 1942 1946
11 செ. நாகலிங்கம் 1946 1947
12 எட்வர்ட் பெர்சிவல் ரோஸ் 1947 1951
13 ஏமா என்றி பஸ்நாயக்க 1951 1956
14 எட்வர்ட் பிரெட்ட்ரிக் நொயல் கிராட்டியன் 1956 1957
15 டக்லசு சென். கிளைவ் பட் ஜான்சி 1957 1966
16 அப்துல் கபூர் முகமது அமீர் 1966 1972
17 விக்டர் தென்னக்கூன் 1972 1975
18 சிவா பசுபதி 1975 1988
19 பண்டிகோரலலகே சுனில் சந்திரா டி சில்வா 1988 1992
20 திலக் ஜானக மாரப்பன 1992 1995
21 சிப்லி அசீஸ் 1995 1996
22 சரத் என். சில்வா 1996 1999
23 கே. சி. கமலசபேசன் 1999 2007
24 சி. ஆர். டி. சில்வா 2007 2008
25 மொகான் பீரிஸ் 2008 2011
26 சாந்தி ஈவா வனசுந்தர 2011 2012
27 பாலித பெர்னாண்டோ 2012

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  • "Permanent Holders of the Office of Attorney General". சட்டமா அதிபர் திணைக்களம். Archived from the original on 2016-11-10. பார்க்கப்பட்ட நாள் 2013-10-26.

வெளி இணைப்புகள்