இலங்கை அரசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கை அரசாங்கம்
சிங்களம்: ශ්‍රී ලංකා රජය
தமிழ்: இலங்கை அரசாங்கம்
படிமம்:Emblem of Sri Lanka.svg
உருவாக்கம்1978; 46 ஆண்டுகளுக்கு முன்னர் (1978)
(தற்போதைய அரசியலமைப்பின் கீழ்)
நிறுவப்பட்ட ஆவணம்இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம்
வலைத்தளம்www.gov.lk
சட்டம்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
கூடும் இடம்புதிய நாடாளுமன்றக் கட்டடம்
செயல்
ஆட்சியாளர்இலங்கை சனாதிபதி
தலைமையகம்ஜனாதிபதி செயலகம்
முக்கிய உறுப்புஅமைச்சரவை
நீதி
நீதிமன்றம்இலங்கை மீயுயர் நீதிமன்றம்
இருக்கைகொழும்பு மற்றும் சிறீ ஜெயவர்தனபுர கோட்டை,
கொழும்பு மாவட்டம்

இலங்கை அரசு (Government of Sri Lanka) என்பது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கபட்ட ஒரு அரை சனாதிபதி குடியரசு ஆகும். இந்த்த் தீவு நாட்டானது இதன் வணிகத் தலைநகரான கொழும்பு மற்றும் நிர்வாகத் தலைநகரான சிறீ ஜெயவர்தனபுர கோட்டை ஆகிய இரண்டிலிருந்தும் நிருவகிக்கப்படுகிறது.[1]

அரசு செயலகம், கொழும்பு 1

அரசியலமைப்பு

இலங்கையின் அரசியலமைப்பு 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி தேசிய அரசுப் பேரவையால் முதலில் பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து தீவு நாடான இலங்கையின் அரசியலமைப்பாக இருந்து இது இருந்து வருகிறது. இது இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு மற்றும் 1948 இல் நாடு விடுதலை பெற்றதிலிருந்து இதன் மூன்றாவது அரசியலமைப்பு ஆகும். அக்டோபர் 2020 நிலவரப்படி, இது 21 முறை திருத்தப்பட்டுள்ளது.

நிருவாகம்

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் சனாதிபதி, நாட்டுத் தலைவர், தலைமை நிருவாகி, ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாக இருப்பார். நிகழ்தகவு வாக்குகளின் இலங்கை வடிவத்தின் கீழ் தேர்தல் நடைபெறுகிறது. அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின் அடிப்படையில் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்திற்கு பொறுப்பானவராக சனாதிபதி உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளால் பதவியில் இருந்து சனாதிபதியை நீக்கலாம்.

பாராளுமன்றத்திற்கு பொறுப்பாக இருக்கும் அமைச்சரவையை சனாதிபதி நியமித்து தலைமை தாங்குகிறார். அரசுத் தலைவராகவும், சனாதிபதியின் சார்பாக தலைமை அமைச்சர், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியை வழிநடத்துகிறார். சனாதிபதி எந்த நேரத்திலும் அமைச்சரவையை கலைத்து புதிய அமைச்சரவையை நியமிக்க முடியும்.

முதன்மைப் பதவியை வைத்திருப்பவர்கள்
அலுவலகம் பெயர் கட்சி பதவி ஏற்பு
சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க[2] ஐக்கிய தேசியக் கட்சி 21 யூலை 2022
பிரதமர் தினேஷ் குணவர்தன மகாஜன எக்சத் பெரமுன 20 யூலை 2022

தேர்தல்கள்

இலங்கை தேசிய மட்டத்தில் அரசு தலைவரை - சனாதிபதியை - சட்டமன்றத்தை தெர்ந்தெடுக்கிறது. ஐந்தாண்டு பதவிக் காலம் கொண்ட ஜனாதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகளாகும். 196 உறுப்பினர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறை மூலம் பல இருக்கை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறனர். அங்கு ஒவ்வொரு கட்சிக்கும் மொத்த விகிதத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்டத்தில் கட்சி பெறும் வாக்குகளின் அடிப்படையில் பல இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட 225 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதில் 196 உறுப்பினர்கள் பல ஆசனங்கள் கொண்ட தொகுதிகளிலும், 29 பேர் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஜனாதிபதி நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டலாம், நிறுத்தி வைக்கலாம் அல்லது முடிக்கலாம். தேர்ந்தெடுக்கபட்ட நாடாளுமன்றத்தை ஒரு ஆண்டுக்குப் பிறகு எந்த நேரத்திலும் கலைக்கலாம். சட்டங்கள் அனைத்தையும் உருவாக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றம் கொண்டுள்ளது.

முதன்மையான மாற்றம் என்னவென்றால், ஒவ்வொரு தொகுதியிலும் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும் கட்சி ஒரு தனித்துவமான "போனஸ் இருக்கை" பெறுகிறது (பார்க்க ஹிக்மேன், 1999). 1948 இல் விடுதலைப் பெற்றதிலிருந்து, இலங்கை பொதுநலவாய நாடுகளின் உறுப்பினராக இருந்து வருகிறது.

நீதித்துறை

உச்சநீதிமன்ற வளாகம், புதுக்கடை

நீதித்துறை என்பது நாட்டில் சட்டத்தின்படி நீதிதரும் அமைப்பாகும். இது அரசியலமைப்பால் அமைக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்றங்களை அதிகாரப் பிரிவினையில் பாரம்பரிய கட்டமைப்பிற்குள் சுயாதீன நிறுவனங்களாக வரையறுக்கபட்டுள்ளது. இலங்கை நீதிமன்றங்கள் தொழில்முறை நீதிபதிகளின் தலைமையில் உள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராளுமன்ற அவையின் நியமனத்துடன் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள், மற்றவர்கள் நீதிச் சேவை ஆணையத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.[3]

இலங்கையில் ஒரு சட்ட அமைப்பு உள்ளது, இது இங்கிலாந்து பொதுச் சட்டம், ரோமன்-டச்சு சிவில் சட்டம் மற்றும் வழக்கமான சட்டம் ஆகியவற்றின் கலவையாகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பொது
சட்டம்
நிருவாகத் துறை
நாடாளுமன்றத் துறை
நீதித்துறை
மற்றவை
"https://tamilar.wiki/index.php?title=இலங்கை_அரசு&oldid=25183" இருந்து மீள்விக்கப்பட்டது