இரு சகோதரிகள்
இரு சகோதரிகள் | |
---|---|
இயக்கம் | வேதாந்தம் ராகவையா |
தயாரிப்பு | வி. எல். நரசு |
திரைக்கதை | தஞ்சை இராமையா தாஸ் |
இசை | எஸ். ராஜேஸ்வர ராவ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சாவித்திரி கிரிஜா எம். என். நம்பியார் டி. எஸ். துரைராஜ் வி. கே. ராமசாமி டி. பி. முத்துலட்சுமி சி. கே. சரஸ்வதி பத்மினி பிரியதர்சினி |
கலையகம் | நரசு ஸ்டூடியோஸ் |
வெளியீடு | செப்டம்பர் 6, 1957(இந்தியா) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இரு சகோதரிகள் ஒரு இந்திய தமிழ் திரைப்படமாகும். 1957-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, எம். என். நம்பியார் முதலியோர் பிரதான பாத்திரங்களில் நடித்தனர்.[1][2][3]
திரைக்கதை
சரோஜா, லலிதா இரு சகோதரிகள். ஒருவருக்கொருவர் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பது அவர்கள் வழக்கம். இவர்களை ஒற்றுமைப்படுத்த முடியாமல் தாயார் இறந்துவிடுகிறாள்.
பஞ்சரத்தின பாகவதர் என்ற ஒரு நடன, சங்கீத ஆசிரியர் சகோதரிகளுக்கு உதவுகிறார். லலிதாவை காலேஜில் படிக்க சென்னைக்கு அனுப்புகிறார். சரோஜாவுக்கு பூபதியாபிள்ளை வீட்டில் வேலை வாங்கிக் கொடுக்கிறார்.
பூபதியாபிள்ளையின் மகன் டாக்டர் சுந்தரம் சிற்றன்னையின் கொடுமை தாங்காது வீட்டை விட்டு வெளியேற முற்படுகிறான். சரோஜா அவனைச் சமாதானப்படுத்தி வீட்டில் தங்க வைக்கிறாள். சுந்தரத்துக்கு சரோஜாவைத் தன் வாழ்க்கைத் துணையாக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு அதற்கு முயற்சி செய்கிறான்.
சென்னைக்கு படிக்கச் சென்ற லலிதா அங்கு பணத்தைப் பறிகொடுக்கிறாள். வாசுதேவன் என்பவன் அவளுக்கு உதவுகிறான். ஆனால் அவன் அவளை ஏமாற்றி அவளை ஒரு குழந்தைக்குத் தாயாக்கிவிட்டு தப்பி விடுகிறான்.
லலிதா குழந்தையுடன் ஊருக்கு வந்து சரோஜாவிடம் செல்கிறாள். சரோஜா லலிதாவின் நிலையைக் கண்டு மானம் மரியாதையைக் காப்பாற்றத் தன் வேலையையும் சுந்தரத்தின் அன்பையும் துறந்து லலிதாவுடன் செல்கிறாள்.
சுந்தர் சரோஜாவைத் தேடி அலைகிறான். ஒரு நாள் சரோஜாவைக் கண்டு விட்டான். ஆனால் அவள் ஒரு குழந்தையைச் சீராட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் மாறி அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறான்.
சரோஜா என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறாள். கடிதம் எழுதி பாகவதரை வரவழைக்கிறாள்.
லலிதாவைக் கெடுத்தவனைக் கண்டு பிடித்து அவளை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். சுந்தரத்துக்குத் தான் குற்றமற்றவள் என நிரூபிக்க வேண்டும்.
பாகவதரின் உதவியுடன் சரோஜா என்ன செய்தாள் என்பது தான் திரைக்கதை.
நடிகர்கள்
நடிகர் | வேடம் |
---|---|
ஜெமினி கணேசன் | சுந்தர் |
எம். என். நம்பியார் | வாசுதேவன் |
டி. எஸ். துரைராஜ் | பஞ்சரத்ன பாகவதர் |
வி. கே. ராமசாமி | சுப்பையா பிள்ளை |
சாவித்திரி | சரோஜா |
கிரிஜா | லலிதா |
டி. பி. முத்துலட்சுமி | பொன்னம்மாள் |
சி. கே. சரஸ்வதி | மங்கம்மா |
பத்மினி பிரியதர்சினி | நடனம் |
பாடல்கள்
இரு சகோதரிகள் படத்துக்கு இசையமைத்தவர் எஸ். ராஜேஸ்வர ராவ். பாடல்களை எழுதியவர் தஞ்சை இராமையா தாஸ். பின்னணி பாடியவர்கள்: கண்டசாலா, பி. லீலா, ஜிக்கி, திருச்சி லோகநாதன், எம். எல். வசந்தகுமாரி, டி. வி. இரத்தினம், பி. சுசீலா ஆகியோர்.[4]
- விரக நிலையில் தாபம் மீறும் வேளையில் (எம். எல். வசந்தகுமாரி, டி. வி. ரத்னம்)
- தாயே உன் செயலல்லவோ (எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா)
- ஜிகுஜிகுஜினத்தா திகுதிகுதிமித்தா (ஜிக்கி குழுவினர்)
- ஆகா, மனதைக் கவர்ந்த மலர் மாரா (பி. சுசீலா குழுவினர்)
- சும்மா சாப்பிட வாங்க.. (ஜிக்கி)
- பாவாடை தாவ்ணி சட்டைத் துணி (திருச்சி லோகநாதன்)
- ஜோரான ரூபமே மாறாத தீபமே (பி. சுசீலா)
- இனி மனம் போல நாமே (கண்டசாலா, பி. லீலா)
- லாட்டரியாலே பேட்டரி போலே (திருச்சி லோகநாதன், ஜிக்கி)
- தங்கச் சிலையே வாடா (பி. சுசீலா)
- காதல் கனிந்திடும் நேரத்தில் (ஜிக்கி குழுவினர்)
மேற்கோள்கள்
- ↑ Iru Sagodharigal Tamil Movie
- ↑ Iru Sagodharigal Movie 1957
- ↑ "1957-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்" இம் மூலத்தில் இருந்து 2020-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200118131705/http://www.lakshmansruthi.com/cineprofiles/1957.asp.
- ↑ 'இரு சகோதரிகள்' பாட்டு புத்தகம். சென்னை - 1: ஸ்ரீமகள் கம்பனி. 1957.