இந்தியத் தேயிலை வாரியம்

இந்தியத் தேயிலை வாரியம் (Tea Board of India) இந்திய அரசின் அமைப்பு ஆகும். இது தேயிலையின் ஏற்றுமதி, சாகுபடி, செயலாக்கம், மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாடு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

இந்திய தேயிலை வாரியம்
Tea Board of India
உருவாக்கம்1 April 1954[1]
வகைஇந்திய அரசு நிறுவனம்
தலைமையகம்கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தலைமையகம்
தலைவர்
ஸ்ரீ பிரபாத் கமல் மேசுபோராக்[2][3][4]
தாய் அமைப்பு
இந்திய அரசு
வலைத்தளம்teaboard.gov.in
கொல்கத்தாவின் பிபிடி பாக்யில் தேயிலை வாரிய தலைமையகம்

பின்னணி

இந்தியத் தேயிலை வாரியம் இந்திய அரசின் நிறுவனமாகும். இது தேயிலையின் ஏற்றுமதி, சாகுபடி, செயலாக்கம், மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாடு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இந்திய தேநீர் வாரியமானது இந்தியாவில், தேயிலைச் சட்டம் 1953ன் அடிப்படையில் கொல்கத்தாவில் (முன்பு கல்கத்தா) தலைமையகமாகக் கொண்டு நிறுவப்பட்டது. இதன் தலைவராக இந்தியப் படைக்கல தொழிலகத் துணைத் தலைவர் திரு. பி.கே.சாஹூ, ஐ.ஓ.எஃப்.எஸ் உள்ளார்.[5] தேயிலை வாரத்தின் செயல்பாடானது நிர்வாகக் குழு, மேம்பாட்டுக் குழு, தொழிலாளர் நலக் குழு மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது.

பணிகள்

சில தேயிலை வணிகர்களுக்குத் தேயிலை ஏற்றுமதிக்கான சான்றிதழ் எண்களை வழங்குவது தேயிலை வாரியத்தின் பொறுப்பாகும். இந்த சான்றிதழ் நோக்கமாக, தேயிலை உற்பத்தியாகும் இடம் குறித்த தகவல்கள் வழங்குவதாகும். இதனால் தேயிலை மோசடியினை தடுக்கலாம். இதனால் அரிய தேயிலையான டார்ஜீலிங் தேநீர் போன்ற தேயிலைகளில் பெயரில் செய்யப்படும் மோசடிகளை இந்த முகப்புச்சீட்டு குறைக்கும்.[6] உலக சந்தையில் விற்கப்படும் 'பாக்ஸ்' டார்ஜீலிங் தேயிலையை இந்த பிராந்திய வர்த்தகர்கள் இந்தியத் தேயிலை வாரியத்தால் உரிமம் பெற்ற ஏற்றுமதியாளர்கள் முற்றிலும் எதிர்க்கின்றனர்.

இந்தியத் தேயிலை வாரிய பணியாகத் தேயிலை உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதி உதவி மற்றும் தேயிலை உற்பத்திக்கு உதவி, மேம்பாட்டினை கண்காணித்தல் உள்ளன. இது ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும் அம்சங்களுடன் தொடர்புடையவை.

இது ஆராய்ச்சி நிறுவனங்கள், தேயிலை வர்த்தகம் மற்றும் அரசாங்க அமைப்புகளை ஒருங்கிணைக்கிறது. உலகத் தேயிலைத் தொழிலில் தேயிலை வர்த்தகத்தின் தொழில்நுட்ப ஆதரவை உறுதி செய்கிறது.

ஆராய்ச்சி

கீழ்கண்ட பிரிவுகளில் தேயிலை/தேநீர் குறித்து ஆய்வுகள் நடைபெறுகிறது.

  • தேயிலை வேளாண்மை மற்றும் மண்-நீர் மேலாண்மை
  • தேயிலை மேம்பாடு
  • தேயிலைப் பாதுகாப்பு
  • தேயிலை உற்பத்தியினை இயந்திரமயமாக்கல்
  • தேநீர் தர மேம்பாடு
  • தேயிலை அடிப்படையிலான தயாரிப்பு பன்மயப்படுத்தல்
  • காலநிலை மாற்றமும் தேநீரும்

அலுவலகம்

கொல்கத்தாவினை தலைமையிடமாக கொண்ட தேயிலை வாரியத்தின் அலுவலகங்கள் கொல்கத்தா, இலண்டன், மாஸ்கோ மற்றும் துபாயில் உள்ளன. தேயிலை வாரியத்திற்கு 1960கள் மற்றும் 70களில் நியூயார்க் நகரில் ஒரு அலுவலகம் இருந்தது. திரு பி.வி.ராமசாமி 1960 முதல் 1963 வரை நியூயார்க் அலுவலகத்தின் முதல் இயக்குநராக இருந்தார். மேலும் இவர் 1973 முதல் 1975 வரை தேயிலை வாரியத்தின் தலைமை பொறுப்பிலிருந்தார்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இந்தியத்_தேயிலை_வாரியம்&oldid=28982" இருந்து மீள்விக்கப்பட்டது