டார்ஜீலிங் தேயிலை
வார்ப்புரு:Infobox geographical indication
டார்ஜிலிங் தேநீர் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கலிம்பொங் மாவட்டமான டார்ஜிலிங் மாவட்டத்தில் வளர்க்கப்படும் ஒரு தேயிலை வகை ஆகும், இது பரவலாக ஏற்றுமதி செய்யப்பட்டு உலகமெங்கும் அறியப்படுகிறது. இது கருப்புத் தேயிலை, பச்சைத் தேயிலை, வெள்ளைத் தேயிலை மற்றும் ஊலாங் தேயிலை எனப் பதப்படுத்தப்படுகிறது. பதமாகக் காய்ச்சும்போது, மெல்லிய வெளிர் நிறத்தையும் ஒருவித மலர் நறுமணத்தையும் அளிக்கிறது. துவர்ப்புடன் கூடிய டாணினின் பண்பும் கஸ்தூரி போன்ற நறுமணமும் இதனை தனித்துவத்துடன் அடையாளம் காட்டுகிறது.[1]
பெரும்பாலான இந்திய தேயிலைகளைப் போலல்லாமல், டார்ஜிலிங் தேநீர் பொதுவாக சிறிய இலைகள் கொண்ட சீன வகை காமெலியா சினென்சிஸ் வாரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சினென்சிசானது பெரிய இலைகள் கொண்ட அசாம் தேயிலைச் செடிக்குப் பதிலாக ( சி. சினென்சிஸ் வர். அசாமிகா ). பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது, டார்ஜிலிங் தேநீர் கருப்பு தேநீராகவும் தயாரிக்கப்படுகிறது; இருப்பினும், டார்ஜிலிங் தேயிலையானது ஊலாங் மற்றும் பசும் தேநீருக்காக பொதுவாக உற்பத்தி செய்யப்படுகின்றன இதன் தனித்துவம் காரணமாக இதனை நாம் எளிதாக அடையாளம் காணலாம். மேலும் பெருகிவரும் பல தோட்டங்களும் வெள்ளைத் தேயிலைகளை உற்பத்தி செய்கின்றன. 2003 ஆம் ஆண்டில் பொருட்களின் புவிக்குறியீட்டு எண் (பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம், 1999) இயற்றப்பட்ட பின்னர், டார்ஜிலிங் தேநீர் 2004-05 ஆம் ஆண்டில் இந்திய காப்புரிமை அலுவலகம் மூலம் புவியியல் அடையாளம் பெற்ற முதல் இந்திய தயாரிப்பு ஆனது.[2]
வரலாறு
இந்திய மாவட்டமான டார்ஜிலிங்கில் தேயிலை நடவு 1841 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ சேவையின் சிவில் அறுவை சிகிச்சை நிபுணரான ஆர்க்கிபால்ட் காம்ப்பெல் அவர்களால் தொடங்கப்பட்டது. காம்ப்பெல் 1839 இல் நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து டார்ஜிலிங் பகுதிக்குக் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். 1841 இல், சீன தேயிலைச் செடிகளின் (கேமில்லியா சினென்சிஸ்) விதைகளைக் சீனாவின் குமோவான் இராச்சியத்தில் இருந்து கொண்டு வந்தார். அதைக் கொண்டு டார்ஜீலிங்கில் தேயிலைப் பயிர் செய்யும் சோதனை செய்யப்பட்டது. பிரித்தானிய அரசாங்கம் அந்த காலகட்டத்தில் (1847) தேநீர்ப் பண்ணைகளை நிறுவியது அதன்பின் 1850 களில் தேயிலை வணிக வளர்ச்சி தொடங்கியது.[3] 1856 ஆம் ஆண்டில், அலுபாரி தேயிலைத் தோட்டம் குர்சியோங் மற்றும் டார்ஜிலிங் தேயிலை நிறுவனத்தால் திறக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து மற்றவர்களும் தேயிலைப் பயிர் செய்வதைப் பின்பற்றினர்.[4]
நிலை
இந்தியத் தேயிலை வாரியத்தின் கூற்றுப்படி, "டார்ஜிலிங் தேநீர்" என்பது சதர் துணைப்பிரிவின் மலைப்பாங்கான பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் பயிரிடப்பட்ட, வளர்க்கப்பட்ட, உற்பத்தி செய்யப்பட்ட, தயாரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட தேயிலைகளை மட்டுமே குறிக்க முடியும்
கலிம்பொங் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதிகள் சமபியோங் தேயிலைத் தோட்டம், அம்பியோக் தேயிலைத் தோட்டம், மிஷன் ஹில் தேயிலைத் தோட்டம் மற்றும் குமாய் தேயிலைத் தோட்டம், குர்சியோங் உட்பிரிவு ஆகியவை உள்ளடக்கியது
புதிய சும்தா தேயிலைத் தோட்டம், சிமுல்பரி மற்றும் மரியன்பரி தேயிலைத் தோட்டம் குர்சியோங் துணைப்பிரிவில் உள்ள குர்சியோங் காவல் நிலையத்தின் 20, 21, 23, 24, 29, 31 மற்றும் 33 ஆகிய அதிகார வரம்பு பட்டியலில் உள்ள பகுதிகளையும் சிலிகுரி உட்பிரிவுகளில் விளையும் தேயிலைகள் இப்பட்டியலில் சேராது.
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தின் 4000 அடிவரை உயர்ந்துள்ள அழகிய செங்குத்தான மலைச்சரிவுகளில் இத்தேயிலை வளர்க்கபடுகிறது. (ca. 1200 மீ). இந்த பகுதியில் தேயிலை வளர்க்கப்பட்டு பதப்படுத்தப்படும் தேயிலையானது ஒரு தனித்துவமான, இயற்கையாகவே நறுமணத்தையும் சுவையையும் கொண்டுள்ளது, மெல்லிய தேயிலையுடன் காய்ச்சக் கூடிய தேநீரானது ஒரு தனித்துவமான மணம் கொண்டது.
கலப்படம் மற்றும் பொய்மைப்படுத்தல் என்பது உலகளாவிய தேயிலை வர்த்தகத்தில் கடுமையான பிரச்சினைகள் ஆகும்.[5] 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் விற்கப்படும் டார்ஜீலிங் தேயிலை அளவு 40,000 டன்களை விட அதிகமாக உள்ளது, அதே நேரத்தில் டார்ஜிலிங்கின் வருடாந்திர தேயிலை உற்பத்தி உள்ளூர் நுகர்வு உட்பட 10,000 டன் மட்டுமே என மதிப்பிடப்பட்டுள்ளது [6], இந்தியத் தேயிலை வாரியமானது டார்ஜீலிங் தேயிலைக்கான நிர்வாகம், தரச்சான்று மற்றும் அடையாளச் சின்னங்களை வழங்குகிறது., இந்திய தேயிலை வாரியத்தின் இந்தப் பணியானது ஐரோப்பிய ஒன்றியத்தின் பாலடைக்கட்டிகளுக்கான புவியியல் அடையாளத்தைப் பாதுகாக்கும் பணிக்கு ஒப்பானதாகும். இந்தியத் தேயிலை வாரியத்தின் கூற்றுப்படி, டார்ஜிலிங் தேயிலை உலகில் வேறு எங்கும் வளர்க்கவோ உற்பத்தி செய்யவோ முடியாது, இது ஷாம்பெயின் மற்றும் ஜமான் ஐபெரிக்கோ ஹாம் ஆகியவற்றுக்கான ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புகளைப் போன்ற ஒரு கட்டுப்பாட்டுச் செயலாகும்.[7]
மேற்கோள்கள்
- ↑ "Darjeeling Tea". Darjeeling district government website.
- ↑ "GI tag: TN trails Karnataka with 18 products". The Times of India. 29 August 2010 இம் மூலத்தில் இருந்து 2012-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103144531/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-29/chennai/28312502_1_gi-tag-gi-registry-gi-protection.
- ↑ "Darjeeling Tea History and extensive info". Thunderbolt Tea Darjeeling.
- ↑ "Glossary of Tea Terms for Darjeeling Loose Leaf Teas". Darjeeling Tea Boutique. பார்க்கப்பட்ட நாள் 17 February 2014.
- ↑ "Identity crisis for Darjeeling Tea". Rediff.com.
- ↑ "Facts of Darjeeling tea". Indian Teaboard.
- ↑ "Tea Board". Tea Board of India. பார்க்கப்பட்ட நாள் 17 February 2014.