இதய நாயகன்
இதய நாயகன் | |
---|---|
இயக்கம் | ஜே. ராஜ்கமல் |
தயாரிப்பு | ஜே. ராஜ்கமல் |
கதை | ஜே. ராஜ்கமல் |
இசை | தேவா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பிர்லா போஸ் |
படத்தொகுப்பு | சிவசங்கர் |
கலையகம் | ட்வின் பிலிம்ஸ் |
வெளியீடு | சூன் 30, 1993 |
ஓட்டம் | 95 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இதய நாயகன் (Ithaya nayagan) 1993 ஆம் ஆண்டு ஜே. ராஜ்கமல் நடித்து, இயக்கித் தயாரித்த திரைப்படம். தேவா இசையமைத்தார்[1][2].
கதைச் சுருக்கம்
வினோத் (ராஜ்கமல்) தன் தாய் பாமாவுடன் (பி. எஸ். பாமா) மலேசியாவில் வசிக்கிறான். வினோத் மிகப்பெரிய உணவகம் மற்றும் தங்கும் விடுதியில் நடனமாடுபவராக பணி செய்கிறான். அங்கு பணிபுரியும் ஜனா (ஜனகராஜ்) உட்பட அவனுக்கு அநேக நண்பர்கள் உள்ளனர். ஒரு எதிர்பாரா நிகழ்விற்குப் பின் வினோத் மனநிலை பாதிப்படைந்து மதுவிற்கு அடிமையாகிறான். வினோத்தை காதலிக்கும் ரூபா (ரூபாஸ்ரீ) அவனைப் பின்தொடர்ந்து கண்காணிக்கிறாள். அவனிடம் காதலைத் தெரிவிக்கும் ரூபாவிடம் வினோத் தவறான எண்ணத்தோடு பழகுகிறான். வினோத் ஒரு விபத்தில் படுகாயமடைய அவனுக்குத் தன் குருதியைக் கொடையளிக்கிறாள் ரூபா. அவளின் உண்மையான அன்பைப் புரிந்துகொள்ளும் வினோத் அவளைக் காதலிக்கத் தொடங்குகிறான்.
அவர்களின் நிச்சயதார்த்த நாள் அன்று வினோத்திற்குப் பதிலாக டேவிட்டுடன் (மதன் மோகன்) ரூபாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் ரூபாவின் சகோதரி ரோசியை (செல்வி) வினோத் கொன்றதாக நம்பும் ரூபா அவனைப் பழிவாங்குவதற்காக காதலிப்பதைப் போல் நடித்து, இப்போது நிச்சயதார்த்த நாளில் அவனை அவமானப்படுத்தத் திட்டமிட்டு இதைச் செய்ததாகக் கூறுகிறாள். டேவிட்டின் முன்னாள் காதலி ஒருத்தி ரோசியின் மரணத்திற்கான உண்மைக் காரணத்தை ரூபாவிடம் கூறுகிறாள்.
வினோத்தும் ரோசியும் காதலித்துள்ளனர். தன்னைக் காதலிப்பதாகக் கூறும் டேவிட்டை ரோசி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வினோத்தைப் பற்றி ரோசியிடம் தவறாகக் கூறுகிறான் டேவிட். தவறான ஒருவனைக் காதலித்ததாக நினைத்து ரோசி தற்கொலை செய்துகொள்கிறாள். வினோத் மனநிலை பாதிக்கப்படுகிறான்.
தன் தவறை உணரும் ரூபாவை அறையில் வைத்து அடைக்கிறான் டேவிட். ரூபா காப்பாற்றப்பட்டாளா? ரூபா - வினோத் திருமணம் நடந்ததா? என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
- ஜே. ராஜ்கமல் - வினோத்
- ரூபாஸ்ரீ - ரூபா
- செல்வி - ரோசி
- ஜனகராஜ் - ஜனா
- மதன் மோகன் - டேவிட்
- பீலி சிவம் - உணவக மேலாளர்
- அழகு நம்பி - அழகு
- பி. எஸ். பாமா - பாமா
- ஜே. லில்லி - சுவான்
- சோபா - ஜூலி
- எஸ். ராஜமாணிக்கம் - ஷான்
- குணசேகரன்
- டி. ராதாகிருஷ்ணன்
- ஆர். கே. ஜோசப்
- செல்வநாயகம்
- சோபனா
- சூசன்
- இந்திராணி சாமிவேலு
இசை
படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் காமகோடியன், காளிதாசன், எஸ். ராஜமாணிக்கம் மற்றும் இளங்கோ[3][4][5].
வ.எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | வா தென்றலே | எஸ். பி. பாலசுப்ரமணியம், சித்ரா | 4:42 |
2 | முசிம் சிண்டா | மனோ | 4:38 |
3 | முசிம் சிண்டா | மின்மினி | 4:45 |
4 | அற்புத கலைதான் | வாணி ஜெயராம் | 5:04 |
5 | ஆலமரம் | கிருஷ்ணராஜ் | 5:12 |
6 | ஆட பிறந்தவன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | 4:37 |
மேற்கோள்கள்
- ↑ "இதயநாயகன்". http://spicyonion.com/movie/idhaya-nayagan/.
- ↑ "இதயநாயகன்" இம் மூலத்தில் இருந்து 2004-11-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041115235602/http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=1703.
- ↑ "பாடல்கள்". http://play.raaga.com/tamil/album/Idhaya-Naayagan-songs-T0003921.
- ↑ "பாடல்கள்". http://www.saavn.com/s/album/tamil/Idhaya-Naayagan-1992/FBy99a8Xovo_.
- ↑ "பாடல்கள்" இம் மூலத்தில் இருந்து 2018-10-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181007150158/http://mio.to/album/Idhaya+Nayagan+(1993).