ஆர். பி. கதிராமர்
ஆர். பி. கதிராமர் | |
---|---|
மட்டக்களப்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1952–1956 | |
முன்னவர் | அகமது லெப்பை சின்னலெப்பை |
பின்வந்தவர் | செல்லையா இராசதுரை |
தனிநபர் தகவல் | |
இறப்பு | 1963 |
அரசியல் கட்சி | சுயேச்சை, இலங்கைத் தமிழரசுக் கட்சி |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
ரொபர்ட் புரூசு கதிராமர் (Robert Bruce Kadramer, இறப்பு: 1963) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார்.[1]
அரசியலில்
கதிராமர் 1947-இல் நடைபெற்ற இலங்கையின் 1-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, 2,313 வாக்குகள் பெற்று (மொத்த வாக்குகளில் 17%), ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர், அகமது லெப்பை சின்னலெப்பையிடம் 2,427 வாக்குகளால் தோற்றார்.[2]
1950 செப்டம்பரில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (சமட்டிக் கட்சி) மட்டக்களப்பில் தமது கட்சிக் கிளையைத் தொடங்கியபோது கதிராமர் அக்கிளையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[3]
கதிராமர் மீண்டும் 1952 இல் நடைபெற்ற 2-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, 11,420 வாக்குகள்(மொத்த வாக்குகளில் 59%) பெற்று அகமது லெப்பையை 3,460 வாக்குகளால் தோற்கடித்து நாடாளுமன்றம் சென்றார்.[4] கதிராமர், ஒரு தமிழராக இருந்தாலும், கிழக்கிலும் வடக்கிலும் உள்ள தமிழர் பகுதிகளுக்கு இடையே புவியியல் தொடர்ச்சி இல்லை என்று வாதிட்டு தனித் தமிழ்நாடு உருவாக்கப்படுவதைப் பகிரங்கமாக கேள்வி எழுப்பினார்.[5][6]
1956-இல், தமிழரசுக் கட்சி மட்டக்களப்பில் முதல் தடவையாகத் தனது கட்சிச் சின்னத்தில் போட்டியிட்ட போது, கதிராமர் மட்டக்களப்பு தமிழ் பேசும் மக்களின் முன்ன்ணி என்ற கட்சியின் சின்னத்தில்,[7] 3-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1,296 வாக்குகள் பெற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் செல்லையா இராசதுரையிடம் 8,004 வாக்குகளால் தோற்றார்.[8]
கதிராமர் 1963 இல் காலமானார்.[9]
மேற்கோள்கள்
- ↑ "Hon. Kadramer, Robert Bruce, M.P." இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 20 June 2018.
- ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 29 June 2018.
- ↑ "Federalist Party Branch formed at Batticaloa, Colombo". Indian Daily Mail: p. 3. 19 September 1950.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 29 June 2018.
- ↑ Welenghama, Gnanapala; Pillay, Nimal (2014). The Rise of Tamil Separatism in Sri Lanka: From Communalism to Secession. Routledge. p. 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135119713.
- ↑ Wilson, A. Jeyaratnam (1988). The Break-up of Sri Lanka: The Sinhalese-Tamil Conflict. C. Hurst & Co. Publishers. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781850650331.
- ↑ De Silva, G (1979). A Statistical survey of elections to the legislatures of Sri Lanka, 1911-1977. Colombo: Marga Institute. pp. 133–134.
- ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
- ↑ Parliamentary Debates, Volume 50, Issues 1-10. இலங்கை நாடாளுமன்றம், 1947-1972. 1963. பக். 255–258.