அகமது லெப்பை சின்னலெப்பை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முதலியார்
அகமது லெப்பை சின்ன லெப்பை
மட்டக்களப்பு தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1947–1952
முன்னவர் புதிய தொகுதி
பின்வந்தவர் ஆர். பி. கதிராமர்
தனிநபர் தகவல்
பிறப்பு (1902-06-02)2 சூன் 1902
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
பிள்ளைகள் அப்துல் லத்தீப் சின்னலெப்பை (மகன்)

முதலியார் அகமது லெப்பை சின்னலெப்பை (Ahamed Lebbe Sinne Lebbe, 2 சூன் 1902 – ), என்பவர் இலங்கை அரசியல்வாதியும் தொழிலதிபரும் ஆவார். இவர் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியைப் பிரதிநித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

அரசியலில்

சின்னலெப்பை 1947 இல் நடைபெற்ற இலங்கையின் 1-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு, 4,740 வாக்குகள் (35.4%) பெற்று அவருடன் போட்டியிட்ட ஏனைய நான்கு சுயேச்சை வேட்பாளர்களைத் தோற்கடித்து நாடாளுமன்றம் சென்றார்.[2]

1948 சனவரி 16 அன்று, சின்னலெப்பை பின்வரும் பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்;

1815 ஆம் ஆண்டு மலையக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், கண்டி மன்னர் விக்கிரம ராஜசிங்கனின் மஞ்சள் பின்னணியில் சிங்கம் வலது பாதத்தில் வாள் ஏந்திய வண்ணம், சிவப்பு நிறப் பின்னணியில் இருந்த அரசக் கொடி விடுதலை பெற்ற இலங்கை மேலாட்சியின் அதிகாரப்பூர்வ கொடியாக இருப்பதை இந்த கௌரவ சபைக்கு நான் இதன் மூலம் முன்மொழிகிறேன்."[3][4]

இந்தப் பிரேரணை களனி உறுப்பினரான ஜே. ஆர். ஜெயவர்தனவினால் தயாரிக்கப்பட்டு, சின்னலெப்பை மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சின்னலெப்பை ஒரு முசுலிம் என்பதால்,[5] தமிழர்களால் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்கலாம் என்ற நோக்கத்தில் பிரேரணையை முன்வைக்க அவரை வற்புறுத்தினார்.[6] இந்தப் பிரேரணையை கொழும்பு மத்திய தொகுதி உறுப்பினர் ஏ. ஈ. குணசிங்க ஆதரித்தார்.[7] ஆனாலும், சின்னலெப்பை இதற்கான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்கவில்லை.[6]

பிரேரணைக்கு ஏற்பட்ட எதிர்ப்பின் விளைவாக, பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா, 1948 சனவரி 27 அன்று, ஒரு நாடாளுமன்றக் குழுவை உருவாக்கினார், இதன் விளைவாக அரச கொடியானது, செம்மஞ்சள், பச்சை நிறங்களைக் கொண்ட இரண்டு பட்டைகள் சேர்த்து இலங்கையின் தேசியக்கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[8]

மே 1952 இல் நடைபெற்ற 2-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் சின்னலெப்பை மீண்டும் போட்டியிட்டு, மொத்த வாக்குகளில் 41% பெற்று, சுயேச்சையாகப் போட்டியிட்ட ஆர். பி. கதிராமரிடம் 3,460 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[9]

சின்னலெப்பையின் மகன் அப்துல் லத்தீஃப், அவரது பேரன் அகமது ரிசுவி இருவரும் முறையே 1965-1970, 1985-1989 ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றினர்.[10]

மேற்கோள்கள்

  1. "Hon. Sinnalebbe, Ahamedlebbe (Mudaliar), M.P." இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 12 January 2018.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
  3. "The proposer of the lion flag: Mudlr. Sinnalebbe". Daily News. 4 February 2004. http://archives.dailynews.lk/2004/02/04/ind09.html. 
  4. Herath, H. M. Mervyn (2002). The National Flag and the National Anthem of Sri Lanka: History & Significance. H.M. Mervyn Herath. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789559748311.
  5. Vivekananthan, C. V. (14 August 2017). "Heart of the land". Daily News. http://dailynews.lk/2017/08/14/features/125035/heart-land. 
  6. 6.0 6.1 De Silva, K. M.; Wriggins, William Howard (1988). J.R. Jayewardene of Sri Lanka: 1906-1956. University of Hawaii Press. p. 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824811839.
  7. Nizam, Ifham. "All National Struggles Remembered On Independence Day". Sunday Leader. http://www.thesundayleader.lk/2017/02/05/all-national-struggles-remembered-on-independence-day/. 
  8. Vithana, Sriyani Ajantha (27 October 2017). "Batticaloa MP Sinna Lebbe proposed Lion Flag". Ceylon Today இம் மூலத்தில் இருந்து 12 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180112160039/http://www.ceylontoday.lk/print20170401CT20170630.php?id=32573. 
  9. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
  10. "SLMC MP Rizvi Sinnalebbe dies". தி ஐலண்டு. 3 October 2001. http://www.island.lk/2001/10/03/news04.html.