செல்லையா இராசதுரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செ. இராசதுரை
C. Rajadurai
Rajathurai.jpg
மட்டக்களப்பு தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் 1956–1989
மட்டக்களப்பு மாநகர சபையின்
1வது முதல்வர்
பதவியில் 1967–1968
முழுப்பெயர் செல்லையா
இராசதுரை
பிறப்பு 27-07-1927
பிறந்த இடம் சிங்களவாடி,
மட்டக்களப்பு
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது அரசியல்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக்
கட்சி
பிற அரசியல் தமிழர் விடுதலைக்
சார்புகள் கூட்டணி, இலங்கைத்
தமிழரசுக் கட்சி
பெற்றோர் செல்லையா
வாழ்க்கைத்
துணை இராஜலட்சுமி


செல்லையா இராசதுரை (Chelliah Rajadurai, பிறப்பு: 27 யூலை 1927) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை அமைச்சரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். 1956 முதல் 1989 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

இராசதுரை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தார். இராசதுரை ஊடகவியலாளரும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.

அரசியலில்

இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக முதன் முதலாக மட்டக்களப்பு தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். தொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார். பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்.

இராசதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராக ஓராண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தார்.

எழுதிய நூல்கள்

  • ராசாத்தி – குறும் புதினம் - 1982
  • பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் - சொற்பொழிவுகளின் தொகுப்பு
  • அன்பும் அகிம்சையும் - தேசிய ஒற்றுமைக்கு வழி – 1984
  • மிஸ் கனகம் - சிறுகதைத் தொகுப்பு
  • இலங்கையில் மகா அஸ்வமேதயாகம்

விருதுகள்

  • இலக்கிய கலாநிதிப் பட்டம் - மதுரைப் பல்கலைக்கழகம்
  • சொல்லின் செல்வர்

சமூகப் பணிகள்

  • இவர் அமைச்சராகப் பதவியில் இருந்த் போது சுவாமி விபுலாநந்தரைத் தேசிய வீரராக அறிவித்து அஞ்சல் தலை வெளியிட்டார்.
  • விபுலாநந்தரின் மதங்கசூளாமணியை மறுபதிப்புச் செய்து வெளியிட்டார்.
"https://tamilar.wiki/index.php?title=செல்லையா_இராசதுரை&oldid=2855" இருந்து மீள்விக்கப்பட்டது