ஆனந்த கண்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆனந்த கண்ணன்
Anandha kannan.jpg
பிறப்புஆனந்த கண்ணன்
(1974-03-23)மார்ச்சு 23, 1974
சிங்கப்பூர்
இறப்பு16 ஆகத்து 2021(2021-08-16) (அகவை 47)
சிங்கப்பூர்
பணிதொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர்,
வாழ்க்கைத்
துணை
ராணி கண்ணா
பிள்ளைகள்1

ஆனந்த கண்ணன் (Anandha Kannan) (23 மார்ச் 1973-16 ஆகத்து 2021) சிங்கப்பூர் இந்தியரான இவர் ஒரு நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். சிங்கப்பூர் மற்றும் சன் டிவி நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்பட்ட இவரது நாடக படைப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக பிரபலமாக அறியப்படுகிறார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்

ஆனந்த கண்ணன் 1973 மார்ச் 23 அன்று சிங்கப்பூரில் கோவிந்தராஜு மற்றும் வசந்தகுமாரிக்கு மகனாகப் பிறந்தார். இவர், ராணி கண்ணா என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.[2][2]

தொழில் வாழ்க்கை

வசந்தம் தொலைகாட்சியில் தொகுப்பாளராக கண்ணனின் தொழில் வாழ்க்கை தொடங்கினார். தனது இளம் வயதில், “சிறுவர் மேடை ” போன்ற வானொலி நாடகங்களில் நடித்தார். மேலும் “சிறுவர்கள் நாங்கள்” போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இளம் வயதிலிருந்தே நாடகங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், இரவீந்திரன் நாடகக் குழுவின் (ஆர். டி. ஜி. ஏ) தயாரிப்புகளிலும் பின்னர் உள்ளூர் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்ததன் மூலம் பிரபலமானார். 1988 ஆம் ஆண்டில், ஆர். டி. ஜியின் “குடும்பத்தின் அறைகளில்” என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக இவர் நடித்தது பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. 1990 ஆம் ஆண்டில் இந்தியக் கலாச்சார மாதத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இவர் ஆர். டி. ஜி. க்கு அதிக நாடகங்களைத் தயாரிக்க உதவும் வகையில் விருதுடன் தனக்கு வழங்கிய பரிசுத் தொகையை வழங்கினார்.[2]

கண்ணன் சென்னைக்கு குடிபெயர்ந்து 2000களில் சன் மியூசிக்கில் வீடியோ ஜாக்கியாக சேர்ந்தார். இது இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. சன் தொலைக்காட்சியில் “சிந்துபாத்” என்ற குழந்தைகள் நாடகத்தில் நடித்தார். இது இவருக்கு பல இளம் ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. அதிசய உலகம் (2012) என்ற அறிவியல் புனைவுவுத் தமிழ் திரைப்படத்திலும் நடித்தார். வசந்தம் தொலைக்காட்சியில் “மாலை மதுரம்”, “அமளி துமளி”, “ஊர்க்குருவி”, “சுவை” போன்ற நிகழ்ச்சிகளையும், வி ஆர் சிங்கப்பூரன்ஸ் என்ற தமிழ் பதிப்பான சவால் சிங்கப்பூர் (2013 முதல் 2018 வரை) என்ற விளையாட்டு நிகழ்ச்சியையும் கண்ணன் தொகுத்து வழங்கினார். 2011 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சியின் பிரதான விழாவில் சிறந்த தொகுப்பாளர் விருதைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் உலக பல்கலைக்கழகங்கள் தமிழ் மாநாட்டில் “சர்வதேச இளைஞர் குறியீடு” விருதையும் பெற்றார். தேசிய கலை மன்றத்தின் ஆதரவுடன், புகழ்பெற்ற ஆசிரியர் ந. முத்துசாமியிடம் தமிழ் நாட்டுப்புற நாடகத்தைக் கற்க கண்ணன் 2017இல் இந்தியா வந்தார்.[2]

இந்தியக் கலாச்சாரத்தை இளைய தலைமுறையினரிடையே கொண்டு சேர்ப்பதற்காக 2013 ஆம் ஆண்டு ஏகே தியேட்டர்ஸ் என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இது தெருக்கூத்து, கரகம், கும்மி, பறை, வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய தமிழ் நாடக வடிவங்களைக் கொண்டாடும் நிகழ்ச்சிகளை உருவாக்குகிறது. பல நாட்டுப்புறக் கலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கலாச்சார மற்றும் மொழி விழாக்கள், மேடை தயாரிப்புகள், பட்டறைகள் மற்றும் போட்டிகளை இலவசமாக நடத்தினார். ஏகே தியேட்டர் இளைஞர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு மேற்கு இலண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய இசை நாடகங்களில் “ஆனந்த கூத்து” என்ற சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியது. இது பாரம்பரிய கலைகள் மற்றும் நாடக வடிவங்களில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற கலை செறிவூட்டல் திட்டமாகும். [2]

ஆனந்த கண்ணன் தனது இணைத் தொகுப்பாளர் பிரஜினுடன் “முள்ளும் மலரும்” மற்றும் மனோசித்ராவுடன் “இத்தனை நாளாய் எங்கிருந்தாய்” ஆகிய திரைப்பங்களிலும் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இரண்டுமே வெளிவரவில்லை. வெங்கட் பிரபு படமான சரோஜாவில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். நேச்சுரல்ஸ் ஸ்பா & சலூன் என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராகவும் இவர் பிரபலமானார். [3]

இறப்பு

பித்த நாள புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த கண்ணன் தனது 48 வயதில் 16 ஆகத்து 2021 அன்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் காலமானார். [4] [5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆனந்த_கண்ணன்&oldid=21494" இருந்து மீள்விக்கப்பட்டது