மனோசித்ரா
மனோசித்ரா | |
---|---|
பிறப்பு | 5 மார்ச்சு 1995 தமிழ்நாடு, காஞ்சிபுரம் |
மற்ற பெயர்கள் | மனோஹா, நந்தகி |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2009–தற்போது வரை |
மனோசித்ரா (Manochitra, பிறப்பு 5 மார்ச் 1995) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். [1]
தொழில்
மனோசத்ரா இன்னொருவன் (2009) படத்தின் வழியாக மனோஹா என்ற திரைப் பெயரில் அறிமுகமானார். [2] பின்னர் காஞ்சீபுரம் காமாட்சி கோவிலில் இயக்குனர் மீரா கதிரவனை சந்தித்தார். அவர் தனது அடுத்த படத்தில் ஜெய் ஜோடியாக நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவள் பெயர் தமிழரசி படத்தில் இவர் முதன்மை வேடத்தில் நடித்தபோது, இயக்குனர் மீரா கதிரவன் நடிகையை நேர்காணல்களைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டார், மேலும் படத்தின் இசை வெளியீடு வரை நாயகி குறித்த ரகசியத்தை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக விளம்பர நிகழ்வுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றார். இவர் அப்படத்தில் நந்தகி என்று குறிப்பிடப்பட்டார். இந்த படம் வணிக ரீதியாக சராசரி வசூலை ஈட்டியது. ஆனால் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. மேலும் இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் . [3] இவர் பின்னர் தனது இயற் பெயரான மனோச்சித்ரா என்ற பெயரையே தன் திரைப் பெயராக மாற்றிக்கொண்டார். இதன் பிறகு விரைவில் அறிமுக இயக்குனர் கணேசின் தாண்டவக்கோனே மற்றும் ஆனந்த கண்ணனுக்கு ஜோடியாக ஆர்.பாலுவின் இத்தனை நாள் எங்கிருந்தாய் போன்ற படங்களில் பணிபுரியத் தொடங்கினார். இருப்பினும், இந்த படங்கள் வெளியிடப்படவில்லை. படங்கள் தயாரிப்பு நிலையிலேயே நின்றுவிட்டன. தயாரிப்பாளரின் நிதி சிக்கலால், விமலுடன் நடித்த கலிங்கத்துப் பரணி என்ற மற்றொரு படமும் தயாரிப்பில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
2012 ஆம் ஆண்டில், சீனு இராமசாமியின் நீர்ப்பறவை படத்தில் மனோச்சித்ரா துணை வேடத்தில் நடித்தார். 2014 ஆம் ஆண்டில், பிரசன்னா மற்றும் விமலுடன் இணைந்து நேற்று இன்று படத்தில் நடித்தார். மேலும் சிவா இயக்கிய அதிரடி படமான வீரம் படத்திலும் நடித்தார். மனோச்சித்ரா தெலுங்கு திரையுலகில் மல்லிகாடு மேரேஜ் புரேகு (2014) மூலம் அறிமுகமானார். அதில் இவர் மேகா ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாகவும், மலையாள படத்தில் பியானிஸ்ட் (2014) படத்தில் நாயகியாக நடித்தார். மனோச்சித்ரா பின்னர் பியானிஸ்ட்டின் மறு ஆக்கமான ஓரு வானவில் போலே, படம் மற்றும் தெலுங்கு திரைப்படமான நட்டு கோடி ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தமானார். இரண்டு படங்களும் அறியப்படாத காரணங்களால் வெளியாகவில்லை. 2016 ஆம் ஆண்டில், அந்தமான் (2016) படத்தில் ரிச்சர்ட் ரிசிக்கு ஜோடியாக நடித்தார்.
திரைப்படவியல்
- குறிப்பில் ஏதும் குறிப்பிடப்படாத, எல்லா படங்களும் தமிழ் படங்களாகும்.
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2009 | இன்னொருவன் | கவிநயா | மனோகா என குறிப்பிடப்பட்டுள்ளது |
2010 | அவள் பெயர் தமிழரசி | தமிழரசி | நந்தகி என குறிப்பிடப்பட்டுள்ளது பரிந்துரை, சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது |
2012 | நீர்ப்பறவை | அண்ணாச்சியின் சகோதரி | |
2014 | வீரம் | அனிதா | |
2014 | மல்லிகாடு மேரேஜ் புரோவு | மது | தெலுங்கு படம் |
2014 | பியானிஸ்ட் | நைலா | மலையாள படம் |
2014 | நேற்று இன்று | தாமினி | |
2016 | அந்தமான் | திவ்யா | |
டி.பி.ஏ. | புதிய முகம் | ||
டி.பி.ஏ. | ரூம் | ||
டி.பி.ஏ. | தண்டகன் |
குறிப்புகள்
- ↑ "My first break - Nandhagi". தி இந்து. 18 March 2010. https://www.thehindu.com/features/cinema/My-first-break-mdash-Nandhagi/article16576611.ece. பார்த்த நாள்: 15 December 2020.
- ↑ "Innoruvan Movie Preview". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 15 December 2020.
- ↑ "AVAL PEYAR TAMILARASI MOVIE REVIEW". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 15 December 2020.