அல்பிரட் துரையப்பா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாண்புமிகு
அல்பிரட் துரையப்பா
Alfred Duraiappah
Alfred Duraiappah.jpg
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் (1947–1989) தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1960–1965
முன்னவர் ஜி.ஜி.பொன்னம்பலம்
பின்வந்தவர் ஜி.ஜி.பொன்னம்பலம்
12th யாழ்ப்பாண மேயர்
பதவியில்
15 February 1970 – 27 July 1975
முன்னவர் எஸ்.நாகராஜா
பின்வந்தவர் ஆர்.விஸ்வநாதன்
தனிநபர் தகவல்
பிறப்பு (1926-06-15)15 சூன் 1926
இறப்பு 27 சூலை 1975(1975-07-27) (அகவை 49)
யாழ்ப்பாணம், இலங்கை
தேசியம் இலங்கை
அரசியல் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) டாக்டர் பரமேஸ்வரி துரையப்பா
பிள்ளைகள் ரோச்சனா (ஈஷா)
படித்த கல்வி நிறுவனங்கள் சிலோன் சட்டக் கல்லூரி
தொழில் கடலாண்மைச் சட்ட வழக்கறிஞர்

அல்பிரட் துரையப்பா (Alfred Duraiappah, இறப்பு: 27 சூலை 1975) என்பவர் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் யாழ்ப்பாண நகர முதல்வரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டார்.

அரசியலில்

அல்பிரட் துரையப்பா இலங்கை நாடாளுமன்றத்திற்காக மார்ச் 1960 இல் நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[1]. பின்னர் அதே ஆண்டு சூலை மாதத்தில் நடந்த மறு தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்[2]. 1965, 1970 தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். பின்னர் இவர் இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்தார். யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக நியமிக்கப்பட்டார்.

படுகொலை

அல்பிரட் துரையப்பா 1975 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் யாழ்ப்பாணம் சுழிபுரம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலில் வைத்து விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவே இலங்கைத் தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது அரசியல் கொலையாகும்[3].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அல்பிரட்_துரையப்பா&oldid=24383" இருந்து மீள்விக்கப்பட்டது