அலையடிக்குது
அலையடிக்குது | |
---|---|
இயக்கம் | காளிமுத்து |
தயாரிப்பு | என். முகமது என். பாசில் |
இசை | பரணி |
நடிப்பு | நவீன் தனுஷ் சிந்து துலானி நேகா துலானி பிரபா ரெட்டி |
வெளியீடு | 10 ஆகத்து 2005 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அலையடிக்குது (Alaiyadikkuthu) என்பது 2005 ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை காளிமுத்து இயக்கினார்.[1]
இப்படத்தில் நவீன் தனுஷ், சிந்து துலானி, அவரது சகோதரி நேகா துலானி, பிரபா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். நமீதா நடிக்க மிண்ணலடிக்குது என்ற பெயரில் இதன் தொடர்ச்சியாக ஒரு படம் எடுக்க திட்டமிடப்பட்டது, ஆனால் பின்னர் அது நிறுத்தப்பட்டது.[1]
கதை
பிருந்தா (சிந்து துலானி) ஒரு மருத்துவ நிறுவனத்தில் பணிபுரிபவள். அவள் ஒரு ஏவளாளாக இருக்கத் தயாராக இல்லை. பெண்கள் சுரண்டப்படுவதற்கும் ஆண்களால் செய்யப்படும் கொடுமைகளுக்கும் அவள் எதிரானவளாக உள்ளாள். வண்புணர்வு செய்த ஆண்களைக் கண்டுபிடித்து பொட்டாசியம் சயனைடை பயன்படுத்தி அவர்களைக் கொல்கிறாள். ஒரு தொழிலதிபர் (யுகேந்திரன்), காவல் ஆணையர் (சேகர்), முதலமைச்சர் (விஜயன்) ஆகியோர் அவரிடம் பலியாகிறார்கள். அவளது கணவர் தனது மோசமான முதலாளியால் (கசான் கான்) கொல்லப்பட்டதும், கொலைக்குப் பிறகு அவளை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவள் இந்த செயல்களில் ஈடுபட்டாள். . .
இசை
இப்படத்திற்கான இசையை பரணி மேற்கொண்டார்.[2]
- "சீ போடா" - ஹரிஷ் ராகவேந்திரா, மகதி
- "மச்சி" - மாலதி, திப்பு
- "விளக்கு வெச்சத்தும்" - கிருஷ்ணராஜ், அனுராதா ஸ்ரீராம்
- "மெர்சி பேபி" - மதுமிதா
- "மேல பாரு" - கார்த்திக், கிரேஸ் கருணாஸ்
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 "Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil" இம் மூலத்தில் இருந்து 2014-08-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140813033148/http://www.indiaglitz.com/tamil.
- ↑ Alaiyadikkuthu (2005) - Bharani (in English), archived from the original on 2019-04-15, retrieved 2020-06-11