அரசாங்க மாலை
Jump to navigation
Jump to search
அரசாங்க மாலை (ராசாங்க மாலை) என்பது சிற்றிலக்கிய வகைகளில் சேர்த்துப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1]
அரசனுக்கு உண்டான விருதுகளை அடுக்கி வெண்கலிப் பாடலால் விளக்குவது அரசாங்க மாலை என்னும் இலக்கிய வகை. இதனை மெய்க்கீர்த்திகளோடு ஒப்பிடலாம். மெய்க்கீர்த்தி உரைநடையில் இருக்கும். அரசாங்க மாலை பாடல் வடிவில் இருக்கும். மூவருலா நூலில் பாடப்பட்டுள்ள அரச பரம்பரைப் பகுதி போன்ற செய்திகளைக் கொண்டதாக, தனி நூலாக இது அமைந்திருக்கும்.
வெண்கலியாலே விருது உண்டான எல்லாமே உரைத்தல்
மன்னுலகில் ராசாங்க மாலையாம் [2]
மேற்கோள்
- ↑ பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 487
- ↑ நூற்பா 20