அமிர்தபதி
Jump to navigation
Jump to search
அமிர்தபதி என்பது சமணமத நூல்களில் ஒன்று. இந்த நூல் பற்றி யாப்பருங்கல விருத்தியுரையில் ஒரு குறிப்பு வருகிறது.
அந்தக் குறிப்பு அமிர்தபதி நூலில் வரும் முதல் பாடலை, சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி ஆகிய நூல்களில் வரும் பாடலோடு இணைத்துப் பார்க்கிறது. இவற்றின் முதற்பாடல்கள் வண்ணத்தால் வருவன எனக் குறிப்பிடுகிறது. [1]
எடுத்துக்காட்டுப் பாடல்கள் தரும்போது சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. அடுத்து பாடலின் முதலடி மட்டும் தரப்பட்டுள்ளது. அது
- குற்றங்கள் மூன்றும் இலனாய் குணங்கட்(கு) இடனாய்
என்னும் வரி. இது அமிர்தபதி நூலின் முதல் அடி.
- அமிர்தபதி ஒரு வித்தியாதர நகரின் பெயர் [2]
- அமிர்தமதியைக் குறிக்கும். அமிர்தமதி ‘யசஸ்திலக சம்பு’ என்னும் வடமொழி நூலில் வரும் கதைமாது. [3]
- யசோதர காவியத்தில் வரும் அமிர்தமதி கதைமாது கீழ்த்தரமானவள்.
எனவே அமிர்தபதி என்பது சிறந்த குணமுடைய காப்பியத் தலைவனையோ, காப்பியத் தலைவியையோ கொண்டு பாடப்பட்ட ஒரு நூல்.
- இந்த நூலின் காலம் 10ஆம் நூற்றாண்டு.
- இந்த நூலை இயற்றியவர் இன்னார் எனத் தெரியவில்லை. எனவே அமிர்தபதியுடையார் என வைத்துக்கொள்ளலாம்.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
- ↑ சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிர்தபதி என்பனவற்றின் முதற்பாட்டு வண்ணத்தால் வருவன. அவற்றில் நேரசை முதலாய் வரின், ஓரடி பதினைந்து எழுத்தாம். பிங்கல கேசியின் முதற்பாட்டு இரண்டாமடி ஓரெழுத்து மிகுத்துப் புரிக்காகப் புணர்த்தார். அல்லனவெல்லாம் ஒக்கும்.
- ↑ சூளாமணி 320
- ↑ வையாபுரிப் பிள்ளை, காவியகாலம், 1957 இது பொருந்தாது என்பது மு. அருணாசலம் கருத்து.