அப்பாவி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அப்பாவி
சுவரொட்டி
இயக்கம்ஆர். ரகுராஜ்
தயாரிப்புவி. எல். தண்டபானி
கதைஆர். ரகுராஜ்
இசைஜோஷ்வா ஸ்ரீதர்
நடிப்புகௌதம்
சுஹானி
ஒளிப்பதிவுஈ.கிருஷ்ண்சாமி
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்தேவி விஷன்ஸ் பிரைவேட் லிட்
வெளியீடுஏப்ரல் 1, 2011 (2011-04-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அப்பாவி (Appavi) 2011 தமிழில் வெளிவந்த நாட்டுப்பற்றைச் சொல்லும் படமாகும் .இதை இயக்கியவர் ஆர். ரகுராஜ்.[1] இப்படம் ஒரு சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட ஒருவன் ஊழல்வாதிகளுக்கு எதிராக பழிவாங்குவது நமக்கு உணர்த்துகிறது. அறிமுகமாக கௌதம், சுஹானி கலிதா, நடிக்க இவர்களுடன் பாக்யராஜ், சூரி போன்றோரும் நடித்திருந்தனர்.[2]

கதை

பாரதி (கௌதம்) ஒரு நேர்மை மற்றும் நல்லொழுக்கமுடைய கல்லூரி மாணவன். அவனது சக மாணவர்களிக்கு ஒரு மாணிக்கமாகவே திகழ்கிறான். ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் அதிகாரிகள், பயங்கரவாதிகள் மற்றும் பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எவருக்கும் சிம்ம சொப்பனமாகவே இவன் இருக்கிறான். தங்களது குற்றங்களை அவர்கள் நடத்தும்போது தனது கைபேசியினால் அதை பதிவு செய்து அதை பொதுமக்கள் மத்தியில் தெரியப்படுத்துகிறான், பாரதியின் இச்செயலால் ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பயப்படுகிறார்கள். பின்னர் எவ்வாறு பாரதி இவர்களை முறியடிக்கிறான் என்பதை பல சம்பவங்களைக் கொண்டு படத்தை முடிக்கிறார்[3]

நடிகர்கள்

  • கௌதம் - பாரதி
  • சுஹானி கலிதா
  • சூரி -பாரதியின் நண்பனாக
  • பாக்யராஜ் -ராமாசாமி (பாரதியின் தந்தை)
  • ஸ்ரீரஞ்சனி -மணிமேகலை (பாரதியின் தாயாராக)
  • மனோபாலா - கல்லூரி பேராசிரியர்
  • மஹாதேவன்—சூசா

தயாரிப்பு

கதை, திரைக்கதை எழுதிய ஆர். ரகுராஜ்[4] "நாட்டிலுள்ள இளைஞர்களை தேசபக்தி என்ற முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்துடனும் அதை இயக்குவதற்கும் முடிவு செய்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை, பல படங்கள் இந்தியாவின் எதிர்காலம் குறித்து வெளிப்படையாகக் கூறுகின்றன. ஆனால் எந்த தீர்வையும் தெரிவிக்கவில்லை, இந்தியா உலகில் ஒரு வல்லரசாக இருக்க முடியும் என்பதால், அதற்கான பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய என் திரைப்படம் பேசும் , "என்றார் ரகுராஜ் .[5] 1115 அடி வரை நீளமான இந்திய தேசிய கொடி தைக்கப்பட்டு, உற்சாகமான தேசபக்தி பாடலை வைரமுத்து மற்றும் ஜோஷ்வா ஸ்ரீதர் எழுதி அப்பாடலில் 500 கல்லூரி மாணவர்கள் நடித்திருந்தார்கள். [6]

விமர்சனம்

தமிழ் சினிமாவில் உண்மையைத் தவிர்த்து, "அப்பாவி "ஒரு மேலோட்டமான கருத்டையே முன்வைக்கிறது. சமுதாயத்தில் சமூக விரோத சக்திகள் ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் பொதுவான மனிதனை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் படம் காட்டுகிறது. இந்த படத்தின் நாயகன், சமூக விரோத சக்திகளால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக பழிவாங்க முயற்சிக்கும் ஒரு மனிதர். வலுவான உள்ளடக்கத்திற்கும், அரசியல் எதிர்ப்பின் காரணமாக இந்தப் படம் இறுதியில் 2011 இல் தாமதமாக வெளியானது..[7]

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அப்பாவி&oldid=30055" இருந்து மீள்விக்கப்பட்டது