அந்தோனிதாசன் யேசுதாசன்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இந்தக் கட்டுரை அந்தோனிதாசன் யேசுதாசன் உடன் நெருக்கமானவரால் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.(மே 2024) |
அந்தோனிதாசன் யேசுதாசன் | |
---|---|
முழுப்பெயர் | அன்ரனிதாசன் யேசுதாசன் |
பிறப்பு | 18-11-1967 அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் (1967-89) |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் நடிகர் |
பெற்றோர் | கொலஸ்ரிகா ஜீவராணி, பிரான்சிஸ் யேசுதாசன் |
வலைத்தளம் | [Shobasakthi] |
ஷோபாசக்தி (Shobasakthi, பிறப்பு: 18 நவம்பர் 1967) [1] ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவரும், நடிகரும் ஆவார். அன்ரனிதாசன் யேசுதாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியைப் [1][2] பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம், திரைப்படம், பதிப்பு ஆகிய தளங்களில் செயல்பட்டு வருகிறார். இவர் நடித்து வெளிவந்த தீபன் என்ற பிரெஞ்சு மொழித் திரைப்படம் 2015 கான் திரைப்பட விழா திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப்பனை விருது வென்றது.[3][4][5][6][7][8]
வாழ்க்கைக் குறிப்பு
அந்தோனிதாசன் 1967 நவம்பர் 18 இல் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டம், அல்லைப்பிட்டி என்ற கிராமத்தில் கொலஸ்ரிகா ஜீவராணி, பிரான்சிஸ் யேசுதாசன் ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். தனது 16-வது வயதில் கறுப்பு ஜூலை வன்முறைகளைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.[9][10][11] ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு, புலிகளின் கலை வெளிப்பாட்டுப் பரப்புரைகளிலும் இயங்கினார்.[1][12] புலிகள் நடத்திய விடுதலைக்காளி தெருக்கூத்தில் (1985) முதன்மைப் பாத்திரமொன்றில் நடித்தார்.[1] 1986ம் ஆண்டு அமைப்பை விட்டு வெளியேறினார்.[1]
இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது நாட்டைவிட்டு வெளியேறிய இவர் துார கிழக்கு ஆசிய நாடுகளில் ஏதிலியாக நான்கு ஆண்டுகள் கழித்த பின்னர்,போலிக் கடவுச்சீட்டு மூலம் 1993ம் ஆண்டு பிரான்சை அடைந்தார். அங்கே அவருக்கு அரசியல் தஞ்சம் கிடைக்கப்பெற்றது.[9][10][11][13]
யாழ்ப்பாணக் கோட்டையை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஆகஸ்ட் 1990 இல் இலங்கை இராணுவம் அல்லைப்பிட்டியை ஆக்கிரமித்தனர். 85 இளைஞர்கள் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு மீண்டும் ஒருபோதும் அவர்களைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. அவர்களில் பெரும்பாலோனோர்கள் ஷோபாசக்தியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள். அவர்கள் இராணுவத்தினாரால் கொல்லப்பட்டு உடல்கள் கிணற்றில் வீசப்பட்டன. அல்லைப்பிட்டியை ஆக்கிரமித்த இலங்கை கடற்படை இன்றுவரை அங்கே நிலைகொண்டுள்ளது.[2][9][14][15]
எழுத்தும் சினிமாவும்
புலிகள் அமைப்பில் ஷோபாசக்தி இருந்தகாலத்தில் இயக்கத்தின் கருத்தியல் சார்ந்தே சில கவிதைகளை 1984–1986 காலப்பகுதிகளில் எழுதத் துவங்கினார். அவை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான 'ஈழமுரசு', 'செய்திக்கதிர்' போன்ற பத்திரிகைகளில் வெளியாகின. ஷோபாசக்தி நாடகங்கள் எழுதி நடத்தியிருக்கிறார். அவர் புலம் பெயர்ந்த பின்பாக 90களில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துடன் (சர்வதேச நான்காவது அகிலம்) இணைந்துசெயல்பட்ட காலத்தில் சர்வதேச முற்போக்கு இலக்கியமும் மார்க்ஸிச கற்கையும் அவருக்கு அறிமுகமாகின 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஷோபாசக்தி என்ற புனைப்பெயரில் சிறுகதைகள், நாடகங்கள், ஈழ யுத்தத்தின் போது அவரது தனிப்பட்ட அனுபவங்கள், அரசியல் கட்டுரைகள் மற்றும் நாவல்கள் எழுதத் தொடங்கினார் பாரிஸிலிருந்து வெளியாகிய ‘அம்மா‘ மற்றும் ‘எக்ஸில்’ இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார்.
அவரது முதல் நாவலான ”கொரில்லா” (2001) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு குழந்தைப் பருவப் போராளியாக அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. கொரில்லா 2008 ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது . அவரது இரண்டாவது நாவல் ”ம்” (2003) இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் 1983ல் வெலிகடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. ம் நாவல் 2010 ம் ஆண்டு ஆங்கிலத்தில் Traitor என்ற பெயருடன் மொழிபெயர்க்கப்பட்டது மலையாளத்தில் இந்த நாவலை மாத்ருபூமி வெளியிட்டது, ஷோபாசக்தியின் மூன்றாவது நாவல் “Box கதைப்புத்தகம்”(2015) முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றில் யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்தரிக்கும் உபவரலாறாகப் பதியப்பட்டுள்ளது.
ஷோபாசக்தியின் சினிமா நுழைவு 2009 இல் செங்கடல் (Dead Sea) திரைபடத்தின் மூலம் தொடங்கியது, தென் இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி என்ற பெரும்பாலும் கைவிடப்பட்டகிராமத்தில், தமிழ் மீனவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைக் குறித்த படமான செங்கடலில் லீனா மணிமேகலை மற்றும் ஜெரால்டுடன் இணைந்து ஷோபாசக்தி திரைக்கதை எழுதியதுடன் உரையாடலும் எழுதி ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். செங்கடல் திரைப்படத்தை முதலில் சென்னை மண்டல தணிக்கைக் குழுவினர் மதிப்பிட மறுத்துவிட்டதால் அத்திரைப்படம் தமிழகத்தில் தடைசெய்யப்பட்டது ஒரு சட்ட போராட்டத்திற்குப் பின்னர் திரைப்பட தணிக்கைக் குழுவினர் மூலம் வயதுவந்தவர்களுக்கான(adult) மதிப்பீடு ளிக்கப்பட்டது. இந்தியத் திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் தேர்வான செங்கடல் முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றிருக்கிறது.
ஷோபாசக்தி 2015 Cannes திரைப்பட விழாவில் Palme d'or வென்ற தீபன் திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . 2015ல் இத்திரைப்படம் பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் தீபனின் (ஷோபாசக்தி) கதை. இப்படத்தில் முன்பின் தெரியாதவர்களான தீபன், காளீஸ்வரி மற்றும் சிறுமி ஆகியோர் ஒரு குடும்பமாக மாறி தீபனின் மனைவி மற்றும் மகள் என குறிப்பிடப்பட்டு இணைந்து வாழ்கின்றனர். தீபன் படத்தில் 50% தன்னுடைய வாழ்க்கை இருப்பதாக ஷோபாசக்தி குறிப்பிடுகிறார்.
படைப்புகள்
புதினங்கள்
- கொரில்லா (Gorilla) (2001, அடையாளம்)
- ம் (Hmm) (2004, கருப்புப் பிரதிகள்)
- Gorilla (2008, Random House) (English translation by Anushiya Ramaswamy)
- Traitor (2010, Penguin) (English translation by Anushiya Ramaswamy)
- Box கதைப்புத்தகம் (2015, கருப்புப்பிரதிகள்)
- இச்சா (2019, கருப்புப்பிரதிகள்)
- La sterne rouge (2022, Zulma)
- ஸலாம் அலைக் (2022, கருப்புப்பிரதிகள்)
சிறுகதைத் தொகுப்பு
- மூமின் (2021)
- தேசத்துரோகி (2003)
- எம்.ஜி.ஆர். கொலை வழக்கு (2009)
- கண்டி வீரன் (2014)
- The MGR Murder Trail (2014, Penguin) (ஆங்கில மொழிபெயர்ப்பு: அனுசியா ராமசுவாமி)
- Friday et Friday (2018, Zulma, French translation by Faustine Imbert-Vier, Élisabeth Sethupathy and Farhaan Wahab)
கட்டுரைத் தொகுப்புகள்
- வேலைக்காரிகளின் புத்தகம் (2007)
- முப்பது நிறச்சொல் (2014)
- Shoba - Itinéraire d'un réfugié (2017, Le Livre de Poche)
நேர்காணல்கள்
- போர் இன்னும் ஓயவில்லை (2010)
- நான் எப்போது அடிமையாயிருந்தேன் (2010)
- எவராலும் கற்பனை செய்ய முடியாத நான் (2014)
அரசியல் ஆக்கங்கள்
- கொலைநிலம் (2009, வடலி வெளியீடு, இணை எழுத்தாளர்: தியாகு)
எதிர்வினைகள்
- பஞ்சத்துக்கு புலி (2011)
திரைக்கதை
- செங்கடல் (லீனா மணிமேகலை, சி.ஜெரால்டுடன் இணைந்து)
- நியோகா (சுமதி பலராமனுடன் இணைந்து)
- ரூபா (கதை)
- செரஸ் (குறும்படம்)
- Friday And Friday
- The sunshine
திரைப்பட நடிப்பு
- செங்கடல் - Leena Manimekalai
- தீபன் (Dheepan) - Jacques Audiard
- ரூபா - லெனின் எம். சிவம்
- Un Lock (குறும்படம்) - Niru
- Little Jaffna (குறும்படம்) - Lawrence Valin
- L'amour est une fête - Cédric Anger
- Friday And Frida y - Satha Pranavan
- A Private War - Matthew Heineman
- Dernier amour - Benoit Jacquot
- Paris métèque (Clip) - Gaël Faye - Raphael Levy
- The Loyal Man - Lawrence Valin
- Bac Nord - Cédric Jimenez
- Coyotes (TV Series) Jacques Molitor- Gary Seghers
- Notre-Dame brûle - Jean-Jacques Annaud
- Woman at sea - Dinara Drukarova
- TEHU - Éric Barbier
- DILEMNE DILEMME - Jacky Goldberg
- Men In Blue - Sachin Dheeraj Mudigonda
- APPA - Jenostan
இணைந்து தொகுத்தவை
- சனதருமபோதினி (2001, Sugan) (co-author Sugan)
- கறுப்பு (Black) (2002, Sugan) (co-author Sugan)
நாடகங்கள்
- அட்டென்ஷன் ப்ளீஸ் (1996)
- சிங்காரவனம் (1998)
- ஜெய் ஹிந்த் ஜெய் சிலோன் (பிரிஜிட்டுடன் இணைந்து - 2000)
- செரஸ் தேவதை (2015)
- ஆறாம்படை (2017)
- விடுதலைக் காளி - (நடிப்பு -1985)
- Counting and Cracking - (நடிப்பு -2019)
பதிப்பாசிரியர்
- குழந்தைப் போராளி
- அகாலம் -ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்
- குவர்னிகா (GUERNICA) - யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பு மலர்
- தனுஜா - ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்
மற்றவை
- இன்றெமக்குத் தேவை சமாதானமே (பேராசிரியர் அ.மார்க்ஸோடு இணைந்து)
விருதுகள் - பரிந்துரைகள்
- கனடா இலக்கியத்தோட்ட விருது(2016) - கண்டிவீரன் தொகுப்பிற்காக
- கு.அழகிரிசாமி விருது (2017)
- சிறந்த நடிகருக்கான (2016) Cannes Film Festival விருது பரிந்துரை
- சிறந்த நடிகருக்கான (2016) César விருது பரிந்துரை
- சிறந்த நடிகர் - ICS Cannes Award -2015
- சிறந்த நடிகருக்கான (2016) International Online Cinema Awards (INOCA) பரிந்துரை
- சிறந்த துணை நடிகருக்கான (2019) Helpmann Awards பரிந்துரை
- விகடன் விருது 2007 (சிறந்த கட்டுரைத் தொகுப்பு - வேலைக்காரிகளின் புத்தகம்)
- விகடன் விருது 2009 (சிறந்த சிறுகதைத் தொகுப்பு - எம்.ஜி.ஆர். கொலைவழக்கு)
- விகடன் விருது 2015 (சிறந்த நாவல் - BOX கதைப்புத்தகம்)
Box கதைப்புத்தகம்
தீபன்
நிகழ்வுகளின் பதிவுகள்
- யூன் 19ம் நாள் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி‘ ( EPRLF) பிரான்ஸில் நடத்திய தியாகிகள் தினத்தில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது )
- நெருப்புத் துளி! (03.07.2011 அன்று லா சப்பலில் (Paris) நடந்த ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’ நூல் வெளியீட்டரங்கில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது)
வெளி இணைப்புகள்
- ஷோபா சக்தி - வெள்ளிக்கிழமையின் விசேஷம்
- [நூலகம்]
- ஷோபாசக்தி இணையப்பக்கம்
- Best Untranslated Writers: Shobasakthi
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Jeyaraj, D. B. S. (6 June 2015). "Cannes award-winning ‘Dheepan’ arouses much interest in Sri Lanka". Daily FT. http://www.ft.lk/article/429779/Cannes-award-winning-%E2%80%98Dheepan%E2%80%99-arouses-much-interest-in-Sri-Lanka.
- ↑ 2.0 2.1 Ravindran, Shruti (13 August 2011). "The Near Distance". OPEN (magazine). http://www.openthemagazine.com/article/nation/the-near-distance.
- ↑ தீபன்: கான்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை
- ↑ "2015 Official Selection". Cannes. Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2015.
- ↑ "Screenings Guide". Festival de Cannes. 6 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2015.
- ↑ Rebecca Ford (24 மே 2015). "Cannes: 'Dheepan' Wins the Palme d'Or". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2015.
- ↑ "Cannes Palme d'Or awarded to French film Dheepan". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
- ↑ "தீபன்: கான்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை". பிபிசி தமிழ். 25 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2015.
- ↑ 9.0 9.1 9.2 "No Man's Land". Elle (India). May 2008. http://www.shobasakthi.com/shobasakthi/?p=131.
- ↑ 10.0 10.1 Cole, Deborah (25 May 2015). "Cannes winner stars Sri Lankan former child soldier". France 24. Agence France-Presse. http://www.france24.com/en/20150524-cannes-winner-stars-sri-lankan-former-child-soldier.
- ↑ 11.0 11.1 Aftab, Kaleem (25 May 2015). "Dheepan, film review: Palme d'Or prize goes to radical and astonishing film that turns conventional thinking about immigrants on its head". The Independent. http://www.independent.co.uk/arts-entertainment/films/reviews/dheepan-film-review-palme-dor-goes-to-radical-and-astonishing-film-that-turns-conventional-thinking-about-immigrants-on-its-head-10273801.html.
- ↑ விடுதலைப்புலிகளின் இயக்கத்தைப்பற்றிய ஷோபாசக்தியின் கவிதை[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Tsui, Clarence (25 May 2015). "Hong Kong was refuge for star of Cannes Palme d'Or winner Dheepan". South China Morning Post. http://www.scmp.com/lifestyle/film-tv/article/1808451/hong-kong-was-refuge-star-cannes-palme-dor-winner-dheepan.
- ↑ Vella, Danielle (30 May 2006). "Parish priest urges respect for civilian lives". AsiaNews. http://www.asianews.it/news-en/Parish-priest-urges-respect-for-civilian-lives-6313.html.
- ↑ Akkara, Anto (23 August 2006). "Sri Lankan priest, companion disappear amid fighting". Catholic News Service. http://www.catholicnews.com/data/stories/cns/0604802.htm.