அண்ணாவின் ஆசை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அண்ணாவின் ஆசை
இயக்கம்தாதா மிராசி
தயாரிப்புகே. பாலாஜி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடுமார்ச்சு 4, 1966
நீளம்4761 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அண்ணாவின் ஆசை (Annavin Aasai) 1966 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 4 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தை பாலாஜி தயாரித்தார். இது சந்த் அவுர் சூரஜ் (1965) என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். இப்படத்தில் ஜெமினி கணேசன், பாாலாஜி, சாவித்திரி ,கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். படத்தில், ஒரு மனிதனின் போலி மரணத்தையடுத்து, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பணம் வருகிறது. இதனால் அவனது குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் வெகுவாக உயர்கிறது.

பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் படம் அண்ணாவின் ஆசை ஆகும். இதன் திரைக்கதையை எஸ். ஐ. பெருமான் எழுத, ஒளிப்பதிவை கமல் கோசும், படத்தொகுப்பை பி. கந்தசாமி செய்தார். கே. வி. மகாதேவன் இசையில் கண்ணதாசனும் வாலியும் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்தத் திரைப்படம் 4 மார்ச் 1966 இல் வெளியாகி வணிக ரீதியாக சுமாரான வெற்றியைப் பெற்றது.

கதை

வேலை இழந்துவிடும் இராமநாதன் தன் மனைவி சீதாவுடன் சிரமங்களை எதிர்கொள்கிறார். எம்பிபிஎஸ் படிக்கும் தம்பி இரவிக்கு தேவைப்படும் பணத்துக்காக இராமநாதன் ஒரு திடம் தீட்டுகிறார். அதன்படி தனக்கு ரூ 100,000 (2023 இல் 60 இலட்சம் மதிப்பு) இக்கு காப்பீடு எடுக்கிறார். பின்னர் தொடருந்து பாதையில் கிடக்கும் சிதைந்த உடலுக்கு தன் மோதிரத்தை அணிவித்து, தன் நாட்குறிப்பையும் அங்கு போட்டு தான் இறந்துவிட்டதாக சித்தரிக்கிறார். இதனால் இராமநாதன் இறந்துவிட்டதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. கணவனின் "இறப்பால்" மன உளைச்சலுக்கு ஆளாகும் சீதா, தான் பெறும் காப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்தி இரவியிடம் மருத்துவக் கல்வியைத் தொடரச் சொல்கிறாள்.

ஆனால் இரவிக்கு கல்வியில் விருப்பமில்லாமல் போகிறது. காப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்தி குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டு பணக்காரனாகிறான். பணக்கார தொழிலதிபரின் மகள் விஜயாவை காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் குடும்ப நண்பரும் வழக்கறிஞருமான மோகனுக்கு, இராமநாதன் உயிருடன் இருப்பது தெரியவருகிறது. சீதாவிடம் இந்தத் தகவலைத் தெரிவிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை

நடிப்பு

நடிகர்கள்[2]

நடிகைகள்t[2]

தயாரிப்பு

அண்ணாவின் ஆசை என்பது துலால்குஹா இயக்கிய இந்தித் திரைப்படமான சந்த் அவுர் சூரஜ் (1965) என்ற படத்தின் மறு ஆக்கமாகும்.[3] இப்படமானது கே. பாலாஜியின் திரைப்பட நிறுவனமான சுஜாதா சினி ஆர்ட்சின் முதல் தயாரிப்பாகும்.[4][5] தாதா மிராசி இப்படத்தை இயக்க, ​​திரைக்கதையை எஸ். ஐ. பெருமான் எழுதினார்.[1] படத்தைத் தயாரித்த பாலாஜி அதோடு, ஜெமினி கணேசனின் ராமநாதனின் தம்பியான இரவியாகவும் நடித்தார்.[6] அசல் படத்தின் நாயகனான அசோக் குமார்,[7] இரவியின் வழக்கு விசாரணைக்கு தலைமை தாங்கும் நீதிபதியாக சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.[6] அவர் முதல்முறையாக தமிழ்த் திரைப்படத்தில் தோன்றிய படம் இதுவாகும்.[8] ஒளிப்பதிவை கமல் கோஷ் கையாண்டார்,[6] படத்தொகுப்பை பி. கந்தசாமி மேற்கொண்டார்.[9] படத்தின் இறுதி நீளம் 4,761 மீட்டர் (15,620 அடி) ஆக இருந்தது.[1][10]

பாடல்கள்

கண்ணதாசன், வாலியின் வரிகளுக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[2]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கோவிலோலே வீடு கட்டி கோபுரத்தில் கூடு கட்டி"  டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன், பி. சுசீலா  
2. "பூப்போல் மலர மொட்டு வைத்தான்"  பி. சுசீலா  
3. "பாட்டெழுதட்டும் பருவம்"  பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா  
4. "இன்பம் என்பது என்னவென்றொருவன் இறைவனைக் கேட்டானாம்"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா  
5. "துன்பம் என்பது என்ன என்றோருவன்"  பி. சுசீலா  

வெளியீடும் வரவேற்பும்

அண்ணாவின் ஆசை 4 மார்ச் 1966 அன்று வெளியானது.[1] படத்தை ஜெமினி ஸ்டூடியோஸ் விநியோகித்தது.[11] அடுத்த வாரம், மார்ச் 12 அன்று, இந்தியன் எக்சுபிரசு தன் விமர்சனத்தில், "அனைத்து கலைஞர்களும் நன்கு நடித்துள்ளனர், குறிப்பாக சாவித்திரி. கே. வி. மகாதேவனின் இரண்டு மெட்டுகள் எங்கள் நம்பிக்கையை புதுப்பிக்க முயற்சித்தன. ஆனால் அவை ஓரளவு மட்டுமே நிறைவேறின." [12] ஸ்போர்ட்ஸ் அண்ட் பேஸ்டைமின் டி. எம். ராமச்சந்திரன், "இயக்குநர் தாதா மிராசியின் பணி போதுமானதாக இல்லை, அதனால் திரைப்படம் போதுமான ஆர்வமூட்டுவதாக இல்லை" என்றார். அவர் கணேசன், சாவித்திரி, பாலாஜி, விஜயா ஆகியோரின் நடிப்பைப் பாராட்டினார், ஆனால் நாகேஷ் நடித்த நகைச்சுவை துணைக்கதையை விமர்சித்தார்.[3] பாலாஜி, கணேசன், சாவித்ரி, விஜயா ஆகியோருக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று கல்கி கூறியது.[13] வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, இது ஒரு பெரிய வெற்றிப் படமாக இல்லை.[14]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "1966 – அண்ணாவின் ஆசை – சுஜாதா சினி ஆர்ட்ஸ்" [1966 – Annavin Aasai – Sujatha Cine Arts]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 அண்ணாவின் ஆசை (song book). Sujatha Cine Arts. 1966. பார்க்கப்பட்ட நாள் 16 March 2018.
  3. 3.0 3.1
  4. "சுரேஷ் பாலாஜி நேர்முகம்!" (in ta). தினமலர். 20 April 2012 இம் மூலத்தில் இருந்து 23 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190323034927/https://cinema.dinamalar.com/hindi-news/7120/cinema/Bollywood/Interview-with-Suresh-Balaji.htm. 
  5. ஸ்ரீதர், ஜெமினி (17 November 2017). "ரசிகர்களின் நண்பர்!" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 19 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191119041301/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/107157-.html. 
  6. 6.0 6.1 6.2 "Annavin Aasai (1966)". The Hindu. 3 October 2015 இம் மூலத்தில் இருந்து 12 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180312080507/http://www.thehindu.com/features/cinema/annavin-aasai-1966-tamil-film/article7719684.ece. 
  7. Sharma, Devesh (23 September 2020). "Best Tanuja Movies". பிலிம்பேர். Archived from the original on 20 October 2020. பார்க்கப்பட்ட நாள் 10 December 2020.
  8. சிவரஞ்சன் 2001, ப. 87.
  9. Annavin Aasai (motion picture). Sujatha Cine Arts. 1966. Opening credits, at 2:17.
  10. "Annavin Asai". The Indian Express: pp. 3. 4 March 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19660304&printsec=frontpage&hl=en. 
  11. "Hopes partly fulfilled". The Indian Express: pp. 3. 12 March 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19660312&printsec=frontpage&hl=en. 
  12. Randor Guy (15 May 2009). "A void on the film firmament". The Hindu இம் மூலத்தில் இருந்து 15 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180315104322/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/A-void-on-the-film-firmament/article15938335.ece. 


வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அண்ணாவின்_ஆசை&oldid=29970" இருந்து மீள்விக்கப்பட்டது