லிசி ஆண்டனி
லிசி ஆண்டனி (Lizzie Antony) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ்த் திரையுலகில் பெரும்பாலும் துணை நடிகையாகப் பணிபுரிகிறார். தங்க மீன்கள் (2013), தரமணி (2017) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். [1] திரைப்படங்கள் தவிர, விளம்பரங்கள், குறும்படங்கள் மற்றும் வலைத் தொடர்களிலும் லிசி நடித்துள்ளார். [2]
லிசி ஆண்டனி | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2011–தற்போது |
அறியப்படுவது | தரமணி தங்க மீன்கள் |
பிள்ளைகள் | 1 |
ஒவ்வொரு ஆண்டும் 100 பெண் சாதனையாளர்களுக்காக தி இந்தியன் நேஷனல் பார் அசோசியேஷன் (INBA) ஏற்பாடு செய்துள்ள 'The Phenomenal She' என்ற விருதை 2022இல் இவர் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை லிசி ஆண்டனி ஆவார். [3]
தொழில்
புகழ்பெற்ற திரைப்படப் படைப்பாளி ராம் இயக்கிய தங்க மீன்கள், படத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியை ஸ்டெல்லா மிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தபிறகு கவனிக்கப்படத்தக்கவராக மாறினார். இப்படத்தில் இவரின் நடிப்புக்காக விமர்சகர்களும், பார்வையாளர்களும் பாராட்டப்பட்டார். [4] [5] [6]
லிசி சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முதுகலைப் பட்டம் பெற்றவர். மேலும் பயிற்சி பெற்ற பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். தரமணி படத்தில் இவரது இயல்பான நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது [4] [7] பின்னர் இவர் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற பேரன்பு திரைப்படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்தார்.[8] [9] இப்படங்கள் இவரை தமிழ்ப் படங்களில் அடையாளம் காணக்கூடிய நடிகையாக்கியது. [10] மேலதிக ஊடக சேவையில் வெளியான மேதகு படத்தில் இலங்கையின் முன்னாள் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்காவாக நடித்தார். [11]
திரைப்படவியல்
திரைப்படங்கள்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | |
---|---|---|---|
2011 | தூங்கா நகரம் | வட்டாச்சியரின் மனைவி | |
2012 | நாங்க | செய்தியாளர் | |
2013 | தங்க மீன்கள் | ஸ்டெல்லா மிஸ் | |
கருப்பம்பட்டி | மீனாட்சி | ||
2014 | குக்கூ | மகிமை | |
2017 | பாம்பு சட்டை | ||
தரமணி | காவல் ஆணையரின் மனைவி | ||
2018 | பரியேறும் பெருமாள் | கல்லூரி பேராசிரியர் | |
2019 | பேரன்பு | ஸ்டெல்லா | |
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் | சாருலதா | ||
கே-13 | தங்கம் | ||
போதை ஏறி புத்தி மாறி | ஜனனியின் அம்மா | ||
இக்லூ | மாதங்கி | ||
மிஸ்டர். லோக்கல் | கீர்த்தனாவின் வழக்கறிஞர் | ||
நாடோடிகள் 2 | சௌமியாவின் அம்மா | ||
2021 | மேதகு | சிறிமாவோ பண்டாரநாயக்கா | |
நெற்றிக்கண் | சோபியாவின் தாய் | ||
பெண் பாதி ஆடை பாதி | அன்னி | ||
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் | விளையாட்டு பயிற்சித் துறைத் தலைவர் | ||
ரைட்டர் | அமுதா | ||
தீர்ப்புகள் விற்கப்படும் | மருத்துவர் | ||
2022 | சாணி காயிதம் | வழக்கறிஞர் ராணி | |
நட்சத்திரம் நகர்கிறது | |||
கட்டா குஸ்தி | வீராவின் அத்தை | ||
கணெக்ட் | லிஸி | ||
ராங்கி | பிரியா | ||
2023 | பொம்மை நாயகி | ||
டி3 |
வலைத் தொடர்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | வலை | |
---|---|---|---|---|
2019 | பிங்கர்டிப் | மாதங்கி | ஜீ5 | |
போலீஸ் டைரி 2.0 | ||||
2020 | பப்கோவா | |||
2022 | பிங்கர்டிப் (பருவம் 2) | |||
விக்டிம் | கோமாதா | சோனிலைவ் | ||
2023 | ஒரு கோடை கொலை மர்மம் | ஜீ5 |
மேற்கோள்கள்
- ↑ "Lizzie Antony's elated about the feedback from audience". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 April 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/lizzie-antonys-elated-about-the-feedback-from-audience/articleshow/69071537.cms. பார்த்த நாள்: 25 May 2019.
- ↑ "Eligible குணச்சித்திர நடிகை!". 18 July 2021. http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=18291&id1=3&issue=20210718. பார்த்த நாள்: 19 July 2021.
- ↑ "Being part of good films, not screen time, matters: Lizzie". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 April 2023. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/being-part-of-good-films-not-screen-time-matters-lizzie/articleshow/99286206.cms.
- ↑ 4.0 4.1 Ahamed, Nabil (28 August 2017). "தரமணி'யில் பெண்களின் குரலைப் பேசியுள்ளார் ராம் - நடிகை லிஸி ஆண்டனி". என்டிடிவி. http://movies.ndtv.com/tamil/kollywood/director-ram-talks-about-women-in-taramani-says-lizzy-antony-1742760. பார்த்த நாள்: 21 February 2019.
- ↑ CR, Sharanya (27 August 2017). "It was my friends who suggested I take up acting: Lizzy Antony". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/it-was-my-friends-who-suggested-i-take-up-acting-lizzy-antony/articleshow/60234002.cms. பார்த்த நாள்: 21 February 2019.
- ↑ Subramanian, Anupama (29 August 2017). "Lissy Antony wants to do meaty roles". தி டெக்கன் குரோனிக்கள். https://www.deccanchronicle.com/entertainment/kollywood/290817/lissy-antony-wants-to-do-meaty-roles.html. பார்த்த நாள்: 21 February 2019.
- ↑ "கிளிசரின் போடாமல் நடிகையை அழ வைத்த இயக்குனர்". IndiaGlitz. 28 August 2017. https://www.indiaglitz.com/director-ram-made-taramani-actress-lizzy-antony-cry-without-glycerin-tamil-news-194271.html. பார்த்த நாள்: 21 February 2019.
- ↑ "Lizzie Antony is on a roll". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 March 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/lizzie-antony-is-ona-roll/etarticleshow/68644780.cms. பார்த்த நாள்: 31 March 2019.
- ↑ "Ispade Rajavum Idhaya Raniyum Review". India Glitz. 15 March 2019. https://www.indiaglitz.com/ispade-rajavum-idhaya-raniyum-review-tamil-movie-22657. பார்த்த நாள்: 17 March 2019.
- ↑ "ராம் கிளிசரின் போடாமல் அழ வைத்தார் 'தரமணி' லிஸி ஆண்டனி". 28 August 2017. https://m.dailyhunt.in/news/india/tamil/thiraiulagam-epaper-thiraiu/ram+kilisarin+bodamal+azha+vaithar+taramani+lisi+aandani-newsid-72408506. பார்த்த நாள்: 21 February 2019.
- ↑ "'மேதகு' தந்த மகிழ்ச்சி". 28 June 2021. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/687072-medhagu-movie.html. பார்த்த நாள்: 19 July 2021.