பொம்மை நாயகி
பொம்மை நாயகி | |
---|---|
திரையரங்க சுவரொட்டி | |
இயக்கம் | சான் |
கதை | சான் |
இசை | சுந்தரமூர்த்தி கே எஸ் |
நடிப்பு | யோகி பாபு, ஹரி கிருட்டிணன் அப்பாதுரை, ஜி.எம்.குமார், சுபத்திரா, சிறீமதி |
ஒளிப்பதிவு | அதிசயராஜ் ஆர் |
படத்தொகுப்பு | செல்வா ஆர். கே. |
கலையகம் | நீலம் புரொடக்சன்சு யாழி பிலிம்சு |
வெளியீடு | பெப்ரவரி 3, 2023 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொம்மை நாயகி (Pommai Nāyaki) என்பது 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழி சமூக நாடகத் திரைப்படம் . இப்படம் சான் இயக்கத்திலும் சுந்தரமூர்த்தி கே எஸ் இசையமைப்பிலும் அதிசயராஜ் ஆர் ஒளிப்பதிவிலும் செல்வா ஆர்கே படத்தொகுப்பிலும் வெளியிடப்பட்டது.[1][2]
கதை
தேநீர்க்கடையில் வேலை செய்யும் வேலு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது ஒன்பது அகவை மகளுக்கு நீதி கேட்டுப் போராடுவதே இத்திரைப்படத்தின் கதை.[3]
நடிகர்கள்
- யோகி பாபு வேலு
- ஹரி கிருட்டிணன் அண்ணாதுரை ஜீவாவாக
- சுபத்திரா கயல்விழியாக, பொம்மை நாயகியின் தாய்
- சிறீமதி பொம்மை நாயகி
- ஜி.எம் குமார் வேலுவின் தந்தையா
- அருள்தாசு செந்தில்
- லிசி ஆண்டனி
- எஸ்.எஸ்.ஸ்டேன்லி
- செயச்சந்திரன்
- ராக்ஸ்டர் ரமணி அம்மாள்
- சுமையா
- இஸ்மத் பானு
- தாமு
- இந்திரஜித்
- செயவேல்
பட உருவாக்கம்
இப்படத்தின் முன்னோட்ட சுவரொட்டி 2022 சூலை 22 அன்று வெளியிடப்பட்டது [4] இப்படத்தின் படப்பிடிப்பு 2021 நவம்பர் 24 அன்று நிறைவடைந்தது [5] யோகி பாபு தனது நடிப்புப் பகுதிகளுக்கு 2022 பெப்ரவரி 1 அன்று பின்னணிக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.[6][7]
ஒலிப்பதிவு
பொம்மை நாயகி | |
---|---|
ஒலிச்சுவடு
| |
வெளியீடு | 6 சனவரி 2023 |
இசைத்தட்டு நிறுவனம் | திங் மியூசிக் |
இசைத் தயாரிப்பாளர் | நீலம் புரெடக்சன்சு |
பாடல்களுக்கு சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்துள்ளார்,[8] ஆடியோ உரிமைகளை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது. "அடியே ராசாத்தி" என்ற தலைப்பில் முதல் பாடல் 2023 சனவரி 6 அன்று வெளியிடப்பட்டது. அப்பாடல் மெல்லிசைப் பாடல் கபிலன் எழுதி, சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்து, சத்யபிரகாஷ் பாடிய பாடல்.[9][10]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அடியே ராசாத்தி" | சத்தியபிரகாஷ் | 5.06 | |||||||
2. | "கடற்கர காத்து" | இரமணியம்மாள் | 3.50 |
வெளியீடு
படம் 2023 பெப்ரவரி 3 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[11][12][13]
மேற்கோள்கள்
- ↑ "Bommai Nayagi shooting updates". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in English). 2021-01-22. பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
- ↑ "Bommai Nayagi kick started". இந்தியா டுடே (in English). 2021-01-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-23.
- ↑ Balachandran, Logesh. "Bommai Nayagi Movie Review : Yogi Babu's shines in this deeply-affecting drama on justice and the judicial system". The Times of India. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/bommai-nayagi/movie-review/97597448.cms?from=mdr.
- ↑ "Bommai Nayagi first look release". சினிமா எக்ஸ்பிரஸ் (in English). 2022-07-22. பார்க்கப்பட்ட நாள் 2022-07-22.
- ↑ "Bommai Nayagi shooting wrap". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in English). 2021-11-24. பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
- ↑ "Bommai Nayagi dubbing update". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in English). 2022-02-01. பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
- ↑ "Director about Bommai Nayagi". Cinema Vikatan (in English). 2022-07-28. பார்க்கப்பட்ட நாள் 2022-07-28.
- ↑ "Sundaramurthy K S Profile".
- ↑ "Bommai Nayagi first single update". சினிமா எக்ஸ்பிரஸ் (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-05.
- ↑ "Bommai Nayagi first single". YouTube (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
- ↑ "Bommai Nayagi Release date". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in English). 2023-01-04. பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
- ↑ "Bommai Nayagi Release date". சினிமா எக்ஸ்பிரஸ் (in English). 2023-01-04. பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
- ↑ "Bommai Nayagi Release date". Asianet News (in Tamil) (in English). 2023-01-04. பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.