ராசுக்குட்டி

ராசுக்குட்டி 1992 ஆம் ஆண்டு வெளி வந்த இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். கே. பாக்யராஜ் எழுதி இயக்கியது மற்றும் மீனா பஞ்சு அருணாசலம் தயாரித்தது. இப்படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா, மனோரமா, கல்யாண் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் வசூலில் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் இந்தி மொழியில் கோவிந்தாவுடன் ராஜா பாபு என்றும், தெலுங்கில் சுமனுடன் அபாயிகரி பெல்லி என்றும், கன்னடத்தில் ஜக்கேஷுடன் படேலா என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1][2]

ராசுக்குட்டி
ராசுக்குட்டி திரைப்பட வட்டின் அட்டைப்படம்
இயக்கம்பாக்யராஜ்
தயாரிப்புமீனா பஞ்சு அருணாச்சலம்
கதைபாக்யராஜ்
இசைஇளையராஜா
நடிப்புபாக்யராஜ்
ஐசுவரியா
மனோரமா
கல்யாண் குமார்
ஒளிப்பதிவுஎம். சி. சேகர்
படத்தொகுப்புபி. கே. மோகன்
கலையகம்பி. ஏ. ஆர்ட் புரோடக்சன்ஸ்
விநியோகம்பி. ஏ. ஆர்ட் புரோடக்சன்ஸ்
வெளியீடுஅக்டோபர் 25, 1992 (1992-10-25)
ஓட்டம்149 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

ராசுக்குட்டி கிராமத்தில் பணக்கார பண்ணையாரின் மகன். செல்லமாக வளர்க்கப்பட்டதால் படிக்காமல் வேலை செய்யாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி, சீட்டு ஆடித் திரிகிறார். வித விதமான உத்தியோம் செய்வது போல அதாவது மருத்துவராக, காவல் துறை அதிகாரியாக, இராணுவ வீரராக, இப்படி பல வேடங்களில் புகைப்படம் எடுத்து வீட்டில் மாட்டி வைத்திருப்பார். பின்னர் ஒரு நாள் தான் பண்ணையாருக்கு பிறந்த மகன் அல்ல. தத்தெடுக்கப்பட்ட பிள்ளை என்று தெரிய வந்து சொத்துக்களை துறக்கிறார். பள்ளிக்கூடம் சென்று படிக்காத ராசுக்குட்டி நன்கு படித்த பெண்ணின் மீது காதல் கொள்கிறார். அப்பெண் விவசாயத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ராசுக்குட்டியின் வழக்கறிஞர் புகைப்படத்தைப் பார்த்து நன்கு படித்தவர் என்று திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார். பின்னர் அவர் படிக்காதவர் என்று தெரிந்துவிடுகிறது.

படப்பிடிப்பு

இப்படத்திற்கான படப்படிப்பு மேட்டூரில் நடந்தப்பட்டது.[3] படபிடிப்பின் பொழுது யாரோ அங்கு பாம்பு உள்ளது என்று கூறிய பொழது பயத்தில் ஐஸ்வர்யா உடனே பாக்யராஜின் காலை இடறி ஒரு நாற்காலியில் ஏறு நின்று கொண்டதாகக் கூறினார். மேலும் பாக்யராஜ் படபிடிப்பு தளத்தில் மிகவும் தீவிரமானவர் என்றும், யாருடனும் தேவையில்லாமல் பேச மாட்டார் என்றும் படப்படிப்பு தளத்திற்கு வந்தவுடன் வசனங்களை எழுதி பின்னர் அனைவருக்கும் நடிப்பு சொல்லிக்கொடுப்பார் என்றும் ஐஸ்வர்யா ஒரு பேச்சில் கூறினார்.[4] மேட்டூரில் படப்பிடிப்பு நடக்கும் பொழுது இடையில் இரண்டு நாட்கள் படப்படிப்பு ரத்தாகிறது. இந்த திடீர் ஓய்வில் இப்படத்தின் திரைக்கதையை ரோஜா இதழில் தொடராக எழுதுவதற்கு பயன்படுத்திக்கொண்டார்.[5]

நடிகர்கள்

  • ராசுக்குட்டியாக பாக்யராஜ்
  • ராசுக்குட்டியின் காதலியாக ஐஸ்வர்யா
  • ராசுக்குட்டியின் அம்மாவா மனோரமா
  • ராசுக்குட்டியின் தந்தை பெரிய பண்ணையாக கல்யாண் குமார்
  • உதவி இயக்குனர் ஜெகன், செம்புலியாக (பின்னர் அவர் இந்த படத்தில் நடித்த பிறகு "செம்புலி ஜெகன்" என்ற அடைமொழிப் பெயரைப் பெற்றார்)
  • மௌனிகா ராசுக்குட்டியின் மாமா மகளாக
  • பெரியபண்ணையின் இளைய சகோதரனாக நளினிகாந்த்
  • நளினிகாந்தின் மூத்த மகனாக சூர்யகாந்த்
  • சூனா பானாவாக ஜூனியர் பாலையா
  • ராசுகுட்டியின் மாமாவாக பெயில்வன் ரங்காதன்
  • அம்மவாசாய்- நளினிகாந்தின் இளைய மகனாக நந்தகோபால்

ஒலிப்பதிவு

பாடல் வரிகளை வாலி மற்றும் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளனர்.[6] இப்படத்திற்கு இசையமைப்பு செய்தவர் இளையராஜா. இளையராஜா இல்லாமல் படமெடுக்க பஞ்சு அருணாச்சலத்திற்கு விருப்பமில்லை. முன்னர் பாக்யராஜ் மற்றும் இளையராஜாவிற்கு இடையே சில கருத்து வேற்றுமை இருந்ததால் இந்த படத்தைத் தயாரிக்காமல் இருந்தார் பஞ்சு. பின்னர் பாக்யராஜ் மற்றும் இளையராஜா இணைந்த பின்னர் இப்படத்தை தொடங்கினார் பஞ்சு.[3]

வரவேற்பு

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் "ராசுக்குட்டியில் நாம் விரும்பிய பழைய பாக்யராஜைப் பார்க்கிறோம்" என்று எழுதியது.[7] இப்படத்தில் ஓரு இலட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு புடவை பயன்படுத்தப்பட்டது. இந்த செய்தி படத்திற்கு நல்ல வரவேற்பைத் தந்தது.[8] இப்படம் 25 அக்டோபர் 1992, தீபாவளி அன்று வெளிவந்தது. கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் திரைப்படமும் அன்றே வெளியானது. ரஜினிகாந்த் நடித்த பாண்டியன் திரைப்படமும் அன்றே வெளியானது. இருந்தாலும் வசூலில் ராசுக்குட்டி சிறப்பாக வெற்றிப் பெற்றது.[9] இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலில் வந்த திரைப்பட விமர்சனத்தில் இப்படத்தின் பாடல்கள் குறிப்பிடும்படியாக இல்லை என்று குறிப்பிட்டனர்.[10]

மேற்கோள்கள்

  1. "Film List Of Director Barathiraja". Lakshman Shruthi இம் மூலத்தில் இருந்து 30 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120530003918/http://www.lakshmansruthi.com/cineprofiles/bhakyaraj04.asp. 
  2. "Bhagyaraj Profile". Jointscene இம் மூலத்தில் இருந்து 24 December 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111224164354/http://www.jointscene.com/artists/Kollywood/Bhagyaraj/138. 
  3. 3.0 3.1 Ananda (15 ஆகஸ்டு 2015). "புகையோ, பகையோ இல்லாமல் “ராசுக்குட்டி’’படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது". http://www.nermai-endrum.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE/. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. வினோத் (ரா.கி.ரங்கராஜன்) (in ta). லைட்ஸ் ஆன்: LIGHTS ON (first edition october 2012 ). Chennai: Thangathamarai Pathippagam. பக். 30. https://books.google.co.in/books?id=zPnbCQAAQBAJ&pg=PA30&lpg=PA30&dq=%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF&source=bl&ots=C_cGnqbRUo&sig=ACfU3U2AKkqKNvKlsXsb0uQXfrRa65cfgA&hl=en&sa=X&ved=2ahUKEwiA2_Oy8pTlAhUSS48KHQWZCpc4UBDoATAEegQIBRAB#v=onepage&q=%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF&f=false. பார்த்த நாள்: 2019-10-11. 
  5. Prabakar, Pattukottai (in ta). Oor Urangum Velai. Pustaka Digital Media. https://books.google.co.in/books?id=XJtPDwAAQBAJ&pg=PT30&lpg=PT30&dq=%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF&source=bl&ots=PAb6iX9Lpw&sig=ACfU3U1-8T38YFbCLDT-Id0-8DSQK-gYsg&hl=en&sa=X&ved=2ahUKEwiA2_Oy8pTlAhUSS48KHQWZCpc4UBDoATAGegQIAxAB#v=onepage&q=%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF&f=false. பார்த்த நாள்: 2019-10-11. 
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2019-10-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191011175734/https://www.starmusiq.fun/movies/raasukutti-1992-tamil-movie-songs-2759-starmusiq-download.html. 
  7. https://news.google.com/newspapers?nid=x8G803Bi31IC&dat=19921128&printsec=frontpage&hl=en
  8. "மிஸ்டர் மியாவ்: அசின் இடத்தில் அனுஷ்கா!" (in ta). 28 சனவரி 2009. https://cinema.vikatan.com/tamil-cinema/48758--2. 
  9. "திரைக்கதை எழுதலாம் வாங்க - 25ம் வார ஸ்பெஷல்" (in en-US). 2013-10-25 இம் மூலத்தில் இருந்து 2019-10-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191011195053/http://karundhel.com/2013/10/syd-field-screenplay-series-25thweek-dinagaran.html. 
  10. "The Indian Express - Google News Archive Search". 30 அக்டோபர் 1992. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19921030&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராசுக்குட்டி&oldid=37018" இருந்து மீள்விக்கப்பட்டது