ரம்பையின் காதல் (1956 திரைப்படம்)
ரம்பையின் காதல் என்பது 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் புராணத் திரைப்படமாகும். ஆர். ஆர். சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. பானுமதி, கே. ஏ. தங்கவேலு, எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படம் இதே பெயரில் 1939 இல் வெளியான திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[2] இது 28 செப்டம்பர் 1956 அன்று வெளியானது.[3]
ரம்பையின் காதல் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | ஆர். ஆர். சந்திரன் |
தயாரிப்பு | ஆர். ஆர். சந்திரன் கல்பனா பிக்சர்ஸ் |
கதை | திரைக்கதை / கதை ரகு கே. நாராயணன் ஆர். ஆர். சந்திரன் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | கே. ஏ. தங்கவேலு எம். என். நம்பியார் டி. எஸ். பாலையா எஸ். வி. சுப்பைய்யா பி. பானுமதி எம். என். ராஜம் ஈ. வி. சரோஜா டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | செப்டம்பர் 28, 1956 |
நீளம் | 17927 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
பூமியின் அழைக் காண தோழிகளுடன் ரம்பை (பானுமதி) வருகிறாள். வந்த இடத்தில் காணப்பட்ட அழகான காட்சிகளைக் கண்டு கூடுதலான நேரம் அங்கேயே தங்கி விடுகிறாள். இந்திரனின் அவைக்கு நடனமாட குறித்த நேரத்தில் வராதத ரம்பை மீது இந்திரன் கோபம் கொள்கிறான். அவள் தாமதமாக வந்ததற்கான காரணத்தை அறிகிறான் இந்திரன். அதனால் கோபமுற்ற இந்திரன் பூமியிலேயே சிலையாக நிற்கக்கடவாய் என சபிக்கிறான். நாரதரின் வேண்டுகோளுக்கு ஏற்ப ரம்பையின் சாபத்தைக் குறைக்கிறான். அதாவது பகலில் சிலையாக இருக்கும் ரம்பை இரவில் தன் சுய உருவத்தைப் பெறலாம் என்பதே அது.
அந்த ஊரில் எல்லோராலும் கேளிக்கு உள்ளாக்கபடும் முத்தழகுவின் (தங்கவேலு) கண்களைக் கட்டி, அந்தச் சிலையை மணமகள் என்று கூறி போலி சடங்கு நடத்தி அவனுக்கு திருமணம் செய்துவைக்கின்றனர். சிலையாக இருக்கும் ரம்பை முத்தழகுவை கணவனாக ஏற்றுக் காதலிக்கத் தொடங்குகிறாள். கணவனை பூமியில் இருந்து தேவலோகத்துக்கு அழைத்துச் செல்கிறாள். பிறகு என்ன நேர்கிறது என்பதே கதை.
நடிப்பு
- ரம்பையாக பானுமதி ராமகிருஷ்ணா
- முத்தழகாக தங்கவேலு
- யமனாக டி. எஸ். பாலையா
- நாரதராக மா. நா. நம்பியார்
- அரசனாக எஸ். வி. சுப்பையா
- இளவரசி சுகுணாவாக எம். என். ராஜம்
- ஊர்வசியாக ஈ. வி. சரோஜா
- மேனகையாக அம்பிகா
- ஒய்யாரியாக டி. பி. முத்துலட்சுமி
- பஞ்சவர்ணமாக சி. கே. சரஸ்வதி
- காமாட்சியாக சாரதாம்பாள்
- இந்திரனாக ஈ. ஆர். சகாதேவன்
- கைலாசமாக காகா இராதாகிருஷ்ணன்
- வைகுண்டமாக சட்டம்பிள்ளை வெங்கட்ராமன்
- அமைச்சராக அசோகன்
இசை
இப்படத்திற்கு டி. ஆர். பாப்பா இசையமைத்தார். பாடல் வரிகளை தஞ்சை இராமையாதாஸ், அ. மருதகாசி ஆகியோர் எழுதினர்.[4] பாடல்களுள் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'சமரசம் உலாவும் இடமே' என்ற பாடல், சமத்துவம் நிலவும் இடம் மயானம் மட்டுமே என்ற மெய்யியல் கருத்தால் வற்றாத புகழ் பெற்றது.
பாடல் | பாடகர் | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"கட்டிவெல்லம் நீயே கட்டெறும்பு நானே" | கே. எச். ரெட்டி, ஏ. ஜி. ரத்னமாலா | அ. மருதகாசி | |
"கலைஞானம் உறவாடும் நாடு" | பி. லீலா, என். எல். கானசரஸ்வதி | 04:34 | |
"போடு டக்கு முக்கு டக்கு தாளம்" | எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி | 02:22 | |
"சமரசம் உலாவும் இடமே" | சீர்காழி கோவிந்தராஜன் | 04:32 | |
"பகவானே மௌனம் ஏனோ" | 03:09 | ||
"பக்தர் போற்றும் பத்ராச்சலனே நாராயணா" | தஞ்சை இராமையாதாஸ் | 05:02 | |
"கண்ணு தெரிஞ்சு நடக்கணும்" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். வி. பொன்னுசாமி, ராமையா | 02:43 | |
"ஆடவாரீர் இன்றே ஆடவாரீர்" | பி. பானுமதி | 03:41 | |
"கண்ணாளா வாழ்விலே காதல் பொய்தானா" | 03:16 | ||
"சாஞ்சா சாயிரப்பக்கம் சாயிர செம்மறி ஆடுகளா" | டி. எம். சௌந்தரராஜன் | 03:04 | |
"கண்ணாளா வாழ்விலே காதல் பொய்தானா" | பி. பானுமதி, பி. சுசீலா | 03:51 | |
"கட்டுமஸ்து கலையாத கட்டழகி...கத்திரி சாதம்" | பி. லீலா | 03:23 | |
"ஆலமர முனியாண்டி...சங்கிலி கருப்பனோ" | எஸ். வி. பொன்னுசாமி | 02:22 |
வரவேற்ப்பு
தி இந்தியன் எக்ஸ்பிரசு எழுதிய விமர்சனத்தில், "பானுமதி, ஒரு நடிகையாக, ரம்பையின் பாத்திரத்தை குறிப்பிடத்தக்க வகையில் நிரப்புகிறார். வளர்ந்து வரும் நட்சத்திரமான முத்துலட்சுமி நம்பிக்கையை அளிக்கிறார். ஆனால் நம்பியார் நாரதரை கேலி செய்கிறார்".[5] கல்கியின் காந்தன் இயக்கம், எழுத்து, இசையைப் பாராட்டினார்.[6]
மேற்கோள்கள்
- ↑
- ↑ "84 வருடங்களுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய ரம்பையின் காதல் படம்" (in ta). 24 February 2023 இம் மூலத்தில் இருந்து 26 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230226065751/https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-rambaiyin-kaadhal-which-registered-a-box-office-hit-84-years-ago-897901.html.
- ↑ "1956 – ரம்பையின் காதல் – கல்பனா பிக்சர்ஸ்" (in ta) இம் மூலத்தில் இருந்து 12 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221012075306/http://www.lakshmansruthi.com/cineprofiles/1956-cinedetails29.asp.
- ↑ Neelamegam, G. (2014) (in Tamil). Thiraikalanjiyam — Part 1 (1st ). Chennai: Manivasagar Publishers. பக். 116–117.
- ↑ "Rambha's Love". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 28 September 1956. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19560928&printsec=frontpage&hl=en.
- ↑