மோகன் ராமன்
மோகன் ராமன் (பிறப்பு மோகன் வெங்கட பட்டாபி ராமன், ஏப்ரல் 3, 1956) இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகராவார். மேலாண்மைப் பயிற்றுனராகவும் பணி புரிந்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் துணை மற்றும் எதிர்மறை வேடங்களில் சிறப்பாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். குறிப்பாக மர்மதேசம் (விடாது கறுப்பு), சிதம்பர ரகசியம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களால் பெரிதும் அறியப்பட்டவர். வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான வி. பி. ராமனின் மூத்த மகனாவார். தற்போதைய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமனின் அண்ணன் ஆவார்.
மோகன் ராமன் | |
---|---|
பிறப்பு | மோகன் வெங்கட பட்டாபி ராமன் ஏப்ரல் 3, 1956 |
பணி | தொலைக்காட்சி, திரைப்பட நடிகர், மேலாண்மை பயிற்சியாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1991-இன்றளவும் |
வாழ்க்கைத் துணை | பத்மா |
பிள்ளைகள் | விக்ரம் வித்யுலேகா ராமன் |
திரைப்படத்துறை
தொலைக்காட்சி
தொலைக்காட்சித் தொடர் | ஆண்டு | வேடம் | இயக்குனர் | குறிப்புகள் |
---|---|---|---|---|
மர்மதேசம் | 1997–2001 | நாகா | ||
காதல் பகடை | 1997-98 | கே. பாலச்சந்தர் | ||
சிதம்பர ரகசியம் | நாகா | எதி்ர்மறை வேடம் | ||
சின்ன பாப்பா பெரிய பாப்பா | 2000–2005 | |||
ஆனந்தம் | 2005–2009 | சிறீநிவாசன் | எதி்ர்மறை வேடம் | |
வைர நெஞ்சம் | 2007–2010 | |||
மாமா மாப்பிள்ளே | 2010–நடப்பு | நகைச்சுவை |
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | வேடம் | இயக்குனர் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1991 | இதயம் | கதிர் | அறிமுகம் | |
1994 | மகாநதி | சந்தான பாரதி | ||
1994 | ஆனஸ்ட் ராஜ் | கே. எஸ். ரவி | ||
1995 | சப்சே படா கில்லாடி | இந்தி | ||
1997 | ஒன்ஸ் மோர் | எஸ். ஏ. சந்திரசேகர் | ||
1997 | ஆஹா | சுரேஷ் கிருஷ்ணா | ||
1998 | அரிச்சந்திரா | செய்யாறு ரவி | ||
1999 | படையப்பா | கே. எஸ். ரவிக்குமார் | ||
2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | அப்பாசின் செயலர் | ராஜீவ் மேனன் | |
2002 | தேவன் | அருண் பாண்டியன் | ||
2003 | அன்பே அன்பே | மணிபாரதி | ||
2003 | மாஜிக் மாஜிக் 3டி | ஊர் தலைவர் | ஜோஸ் புன்னூஸ் | |
2007 | பெரியார் | பி. ஆர். அம்பேத்கர் | ஞான ராஜசேகரன் | |
2007 | நான் அவனில்லை | செல்வா | ||
2008 | குசேலன் | பி. வாசு | ||
2009 | டிஎன் 07 ஏஎல் 4777 | லட்சுமிநாதன் | ||
2009 | குரு என் ஆளு | செல்வா | ||
2010 | இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம் | சிம்புத்தேவன் | ||
2011 | பயணம் | வெங்கட்ராமன் | ராதா மோகன் | |
2011 | சபாஷ் சரியானப் போட்டி | வேணு அரவிந்த் | ||
2013 | ராமானுஜன் | ஞான ராஜசேகரன் | ||
2013 | சென்னை எக்ஸ்பிரஸ் | ஊர் பூசாரி | ரோகித் செட்டி | இந்தி |
உசாத்துணைகள்
- "Drama awards 2004". தி இந்து. November 18, 2005 இம் மூலத்தில் இருந்து மார்ச் 29, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080329114231/http://www.hinduonnet.com/thehindu/fr/2005/11/18/stories/2005111800380200.htm.
வெளி இணைப்புகள்
- மோகன்ராமன்- வலைப்பதிவு
- கூகுள் தளங்கள் பரணிடப்பட்டது 2010-09-03 at the வந்தவழி இயந்திரம்
- ஃபேசுபுக்கில்