மைனா (திரைப்படம்)
- இதே பெயரில் வெளியான கன்னடத் திரைப்படம் பற்றி அறிய, மைனா (கன்னடத் திரைப்படம்) கட்டுரையைப் பார்க்கவும்
மைனா பிரபு சாலமன் கதை எழுதி இயக்கி 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினும் கல்பாத்தி அகோரமும் வெளியிட்டனர். இதில் வித்தார்தும் அமலாபாலும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றினர். இப்படத்திற்கு இமான் இசையமைத்தார். 2010 நவம்பர் 5 ஆம் தேதி தீபாவளியன்று இப்படம் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததுடன் 58வது தென்னிந்திய பிலிம்பேர் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் இப்படத்தில் நடித்தமைக்காக தம்பி ராமையாவிற்கு சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.[2][3]
மைனா | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | பிரபு சாலமன் |
தயாரிப்பு | ஜான் மாக்சு |
கதை | பிரபு சாலமன் |
இசை | டி.இமான் |
நடிப்பு | விதார்த் அமலா பால் தம்பி இராமையா சேது |
ஒளிப்பதிவு | எம். சுகுமார் |
படத்தொகுப்பு | எல். கே. வி. தாஸ் |
கலையகம் | ஷாலோம் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | உதயநிதி ஸ்டாலின் ஏஜியெஸ் என்டர்டைன்மென்ட் |
வெளியீடு | நவம்பர் 5, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹ 5 கோடி [1] |
கதைச் சுருக்கம்
நடிகர்கள்
- விதார்த் - சுருளி
- அமலா பால் - மைனா
- சேது - பாசுகர்
- தம்பி ராமையா - இராமையா
- சுசான் சார்ஜ் - சுதா பாசுகர்
- செவ்வாழை - மாயி
- மண்ரோடு மாணிக்கம் - கார்த்திக்
பாடல்கள்
மைனா | |
---|---|
ஒலிப்பதிவு
| |
வெளியீடு | 23 செப்டம்பர் 2010 |
ஒலிப்பதிவு | ஜங்கலி இசையகம் |
இசைப் பாணி | திரையிசைப் பாடல் |
நீளம் | 19:20 |
இசைத்தட்டு நிறுவனம் | ஜங்கலி இசையகம் |
இசைத் தயாரிப்பாளர் | டி. இமான் |
இப்படத்தின் ஐந்து பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கியவர் டி. இமான் ஆவார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை யுகபாரதி, எக்நாத் ஆகியோர் எழுதியிருந்தனர். அனைத்துப் பாடல்களும் மிகவும் வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[3][4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "மைனா மைனா" | யுகபாரதி | சான் | 04:35 | ||||||
2. | "கிச்சு கிச்சு தாம்பலம்" | யுகபாரதி | ஹரிணி ரவி, சிறீ ரஞ்சனி, எஸ். சிறீமதி, ஜி. ஆத்திரெயா, இலட்சுமண் அரவிந்த், சோலார் சாய் | 04:16 | ||||||
3. | "நீயும் நானும்" | எக்நாத் | பென்னி தயாள், ஸ்ரேயா கோசல் | 04:57 | ||||||
4. | "ஜிங்கு சிக்கா" | யுகபாரதி | சோலார் சாய், கல்பனா | 03:55 | ||||||
5. | "கையப் புடி" | யுகபாரதி | நரேஷ் ஐயர், சாதனா சர்கம் | 04:03 |
விருதுகள்
- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (முதற் பரிசு)
மேற்கோள்கள்
- ↑ "The new darlings of Kollywood" இம் மூலத்தில் இருந்து 7 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110707041158/http://www.tehelka.com/story_main50.asp?filename=hub090711The.asp. பார்த்த நாள்: 5 July 2011.
- ↑ "IndiaGlitz – More praise on ‘Mynaa’ – Tamil Movie News" இம் மூலத்தில் இருந்து 2010-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101013023705/http://www.indiaglitz.com/channels/tamil/article/60730.html.
- ↑ 3.0 3.1 "I found my true self with Mynaa: Imman". The Times of India. 18 October 2010 இம் மூலத்தில் இருந்து 2012-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103200820/http://articles.timesofindia.indiatimes.com/2010-10-18/news-interviews/28230600_1_first-film-music-songs.
- ↑ Karthik (25 September 2010). "Mynaa (Music review), Tamil – D.Imman by Milliblog!". Itwofs.com. http://itwofs.com/milliblog/2010/09/25/mynaa-music-review-tamil-d-imman/. பார்த்த நாள்: 2012-08-05.