மூன்று முகம்

மூன்று முகம் (Moondru Mugam) 1982- ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம். இதில் நடிகர் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில், அதாவது அலெக்ஸ்பாண்டியன், அருண், ஜோன் ஆகிய பாத்திரங்களில் நடித்துள்ளார். இது 250 நாட்கள் ஓடி சாதனை புரிந்த வெற்றித் திரைப்படம் ஆகும். 1982இல் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதினை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இத்திரைப்படத்திற்கான பாடல்களை வாலி, வைரமுத்து மற்றும் முத்துலிங்கத்தினால் எழுதப்பட்டதுடன், திரைப்படம் சங்கர்கணேசினால் இசையமைக்கப்பட்டது.

மூன்று முகம்
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
தயாரிப்புதமிழழகன்
ஜி. தியாகராஜன்
நடிப்புரஜினிகாந்த்
டெல்லி கணேஷ்
செந்தாமரை
தேங்காய் சீனிவாசன்
வி. கோபாலகிருஷ்ணன்
பூர்ணம் விஸ்வநாதன்
காஜா ஷெரிப்
சத்யராஜ்
ராதிகா சரத்குமார்
சில்க் ஸ்மிதா
வசந்தா
ராஜலட்சுமி
கமலா காமேஷ்
ஒளிப்பதிவுவிஸ்வம் நடராஜன்
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணன்
கலையகம்சத்யா மூவீஸ்
வெளியீடு1 அக்டோபர் 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்த திரைப்படம் ஹிந்தியிலும் ரஜினிகாந்தை வைத்து மீள இயக்கப்பட்டதுடன் அதில் ரதி அக்னிகோர்த்தி, காதர் கான் ஆகியோர் நடித்தனர்.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை வாலி, முத்துலிங்கம், வைரமுத்து ஆகியோர் இயற்றியிருந்தனர்.[1][2]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "தேவாம்பிரதம் ஜீவாம்பிரதம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 5:23
2. "ஆசையுள்ள ரோசக்கார"  வாணி ஜெயராம் 3:53
3. "நான் செய்த குறும்பு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:26
4. "எத்தனையோ"  மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி 4:56

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மூன்று_முகம்&oldid=36780" இருந்து மீள்விக்கப்பட்டது