மணிப்பயல்
மணிப்பயல் (Manipayal) 1973இல் வெளிவந்த தமிழ் குடும்ப, குழந்தைகளுக்கான திரைப்படம், இயக்கம் ஏ.ஜெகந்நாதன், தயாரிப்பு மற்றும் திரைக்கதை இராம. வீரப்பன். இப்படத்தின் வசனங்கள் ஜெகதீசன், மற்றும் பூவை கிருஷ்ணன். இதன் இசை ம. சு. விசுவநாதன். இதில் மாஸ்டர் சேகர் மற்றும் பேபி இந்திரா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர், இவர்களுடன் ஏ. வி. எம். ராஜன், ஜெயந்தி, வி. கே. ராமசாமி மற்றும் எஸ். வி. சுப்பையா ஆகியோரும் உடன் நடித்திருந்தனர்.[1][2]
மணிப்பயல் | |
---|---|
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் (இயக்குநர்) |
தயாரிப்பு | இராம. வீரப்பன் |
கதை | ஜெகதீசன் (வசனம்) |
திரைக்கதை | இராம. வீரப்பன் |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் ஜெயந்தி மாஸ்டர் சேகர் |
ஒளிப்பதிவு | தத் |
படத்தொகுப்பு | கிருஷ்ணன் சுந்தரம் |
கலையகம் | சத்யா மூவீஸ் |
விநியோகம் | செல்வி என்டர்பிரைசஸ் |
வெளியீடு | 14 ஜனவரி 1973 |
ஓட்டம் | 149 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
செய்யாதக் குற்றத்திற்காக தவறாக குற்றம் சாட்டப்பட்ட செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவன் குற்றவாளியாக முன்னிலைப்படுத்தப்பட்டு சிறை செல்ல நேர்கிறது , அவன் தன்னை குற்றமற்றவன் என நிரூபித்து ஒரு கௌரவமான வாழ்க்கை நடத்துவதற்கான நல்ல வழியை கண்டுபிடிப்பதே படத்தின் கதையாகும்.
நடிகர்கள்
ஏ. வி. எம். ராஜன் -அருண் ,சாந்தியின் முன்னால் காதலன்
ஜெயந்தி - சாந்தி செல்வியின் தாயார் மற்றும் ஆசிரியர்
மாஸ்டர் சேகர் - இளங்கோவன் , கந்தனின் மகன்
பேபி இந்திரா -செல்வி
வி. கே. ராமசாமி - பொன்னம்பலம், காவல் துறை அதிகாரி
எஸ். ஏ. அசோகன் - பரசுராம் , கடத்தல்காரன்
தேங்காய் சீனிவாசன் - அமாவாசை, ஆண்டாளின் கணவன், காசியின் தந்தை
மனோரமா - ஆண்டாள், அமாவாசையின் மனைவி, காசியின் தாயார்
எஸ். வி. சுப்பையா - கந்தன் , செருப்பு தைப்பவர்
மாஸ்டர் பிரபாகர் - காசி , ஆண்டாள், அமாவாசையின் மகன்
எம். எஸ். சுந்தரி பாய் - சிவகாமி ,பொன்னம்பலத்தின் மனைவி
ராஜகோகிலா - ரோஸி
சண்முகசுந்தரி - அருணின் தாயார்
ஐசரி வேலன் - சாந்தி வீட்டு சமையல்காரர்
என்னத்த கன்னையா - காவலர் ஆள்வார் நாயுடு
குண்டுமணி - காளிமுத்து
உசிலைமணி - சிறப்புத் தோற்றம்
படக்குழு
கலை: கிருஷ்ணா ராவ்
புகைப்படம் : ஆர். என் . நாகராஜ ராவ்
Design: பரணி ஈஸ்வர்
விளம்பரம்: எலிகன்ட்
படக்கலவை: சி. கண்ணப்பன் ஏவிஎம் லபாராட்டரிக்காக
ஒலிப்பதிவு ( பாடல்): ஜே. ஜே. மாணிக்கம்
ஒலிப்பதிவு (வசனம்): வி. சி. சேகர் மற்றும் எம். பி. ராமச்சந்திரன்
நடனம்: சோப்ரா மற்றும் டி. ஜெயராமன்
சண்டை: என். சங்கர்
படம் & அச்சு: ஓஸ்பி லித்தோ வொர்க்ஸ்
தயாரிப்பு
ஏ. ஜெகந்நாதன் இதற்கு முன்னர் தத்தினேனி பிரகாஷ் ராவ் மற்றும் ப. நீலகண்டன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றி இப்படத்தில் அறிமுக இயக்குனரானார்.[3]
ஒலிப்பதிவு
மணிப்பயல் | |
---|---|
ஒலிச்சுவடு
| |
வெளியீடு | 1973 |
ஒலிப்பதிவு | 1973 |
இசைப் பாணி | சரிகம |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | ம. சு. விசுவநாதன் |
இப்படத்தின் இசையமைப்பு மெல்லிசை மன்னர் ம. சு. விசுவநாதன் , பாடல்களை எழுதியது வாலி, அவினாசி மணி மற்றும் புலமைப்பித்தன். ஜெயச்சந்திரன் தமிழ் மொழியில் அறிமுகமாகி தங்கச்சிமிழ் போல் என்ற பாடலை பாடினார்.'[4]
எண் | பாடல் | பாடியோர் | எழுதியது | நீளம் (நி:வி) |
---|---|---|---|---|
1 | "தன் சீமையிலே ஒரு" | சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி | புலமைப்பித்தன் | 05:46 |
2 | தங்கச்சிமிழ் போல் | பி. ஜெயச்சந்திரன் | வாலி | 04:42 |
3 | "நான் ஆடினால் ஒரு வகை" | எஸ். ஜானகி | வாலி | 04:01 |
4 | "ஏனடி அம்மா" | எல். ஆர். ஈஸ்வரி, லதா, ராதா & புஷ்பலதா | 04:31 | |
5 | "நான் உள்ளை" | எல். ஆர். ஈஸ்வரி | வாலி | 04:06 |
மேற்கோள்கள்
- ↑ "Manipayal". http://spicyonion.com/movie/manipayal/. பார்த்த நாள்: 4 March 2017.
- ↑ "Manipayal (1973)" இம் மூலத்தில் இருந்து 28 அக்டோபர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161028154928/http://www.gomolo.com/manipayal-movie/9885. பார்த்த நாள்: 4 March 2017.
- ↑ "Man who shored up MGR's film career is no more - Times of India". http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Man-who-shored-up-MGRs-film-career-is-no-more/articleshow/16716784.cms. பார்த்த நாள்: 4 March 2017.
- ↑ "difference". http://www.jayachandransite.com/html/difference.html. பார்த்த நாள்: 4 March 2017.