மகேந்திரன் (நடிகர்)
மகேந்திரன் இந்தியத் திரைப்பட நடிகராவார். திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2013ல் விழா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இரு முறை சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினையும், நந்தி விருதினையும் பெற்றுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.