புனிதவதி (திரைப்படம்)
புனிதவதி 1963 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். சி. டி. செட்டியார் தயாரித்து எம். ஆர். விட்டல் ராவ் இயக்கிய இப்படத்தில் ஆர். எஸ். மனோகர், பண்டரிபாய், கே. சாரங்கபாணி, காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
புனிதவதி | |
---|---|
இயக்கம் | எம். ஆர். விட்டல் ராவ் |
தயாரிப்பு | சி. டி. செட்டியார் |
திரைக்கதை | ஸ்ரீ சத்ய நாராயணா |
இசை | ஹுசேன் ரெட்டி |
நடிப்பு | ஆர். எஸ். மனோகர் கே. சாரங்கபாணி காக்கா ராதாகிருஷ்ணன் பண்டரிபாய் |
கலையகம் | சத்யநாராயணா பிக்சர்ஸ்[1] |
வெளியீடு | 1963 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஸ்ரீ சத்ய நாராயணா திரைக்கதை வசனம் எழுதியிருந்தார். ஹுசேன் ரெட்டி இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை சுரபி, சுரதா, ஏ. எல். நாராயணன், சுப்பு ஆறுமுகம் ஆகியோர் இயற்றியிருந்தனர். ஹுசேன் ரெட்டி, ஏ. எம். ராஜா, கண்டசாலா, சீர்காழி கோவிந்தராஜன், டி. வி. ரத்தினம், பி. சுசீலா, பி. லீலா, ஜிக்கி, எஸ். ஜானகி, கமலா, ஏ. பி. கோமளா ஆகியோர் பின்னணி பாடியிருந்தனர்.[3]
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. https://archive.today/http://www.lakshmansruthi.com/cineprofiles/1963.asp.
- ↑ "Punithavathi 1963" (in ஆங்கிலம்) இம் மூலத்தில் இருந்து 2018-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180619064113/http://www.megatamil.in/movie/punithavathi-1963/. பார்த்த நாள்: 19 ஜூன் 2018.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 135.