திரைக்களஞ்சியம் (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search


திரைக்களஞ்சியம் ஒரு இந்திய தமிழ்த் திரைப்பட வரலாற்று ஆவண நூற் தொகுதி ஆகும்.

வரலாற்று ஆவணம்

தமிழில் வெளிவந்த திரைப்படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், தமிழ்த் திரைப்படங்கள் குறித்து ஆய்வு செய்வோர் பயன்பெறும் வகையிலும் இந்த நூல் தொகுதியில் விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

தொகுதிகளின் காலப்பகுதி

ஒவ்வொரு தொகுதி நூலும் ஒவ்வொரு பத்தாண்டுக் காலத்துக்குள் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் விபரங்களைக் கொண்டுள்ளது. இதுவரையில் 1951 - 1960 மற்றும் 1961 - 1970[1] ஆகிய இரு தொகுதிகள் வெளிவந்துள்ளன. 2019 டிசம்பரில் 1971 - 1980 காலப்பகுதியை உள்ளடக்கிய மூன்றாவது தொகுப்பு வெளிவந்துள்ளது. இதில் 700 க்கு மேற்பட்ட திரைப்படங்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆவண விபரம்

குறிப்பிட்ட பத்தாண்டு காலப் பகுதியில் வெளியான தமிழ்த் திரைப்படங்கள் ஆண்டு வாரியாகவும், ஒவ்வொரு ஆண்டில் வெளியான திரைப்படங்கள் தமிழ் எழுத்து அகர வரிசைப்படியும் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு திரைப்படம் பற்றிய விபரப் பட்டியலில்

  • திரைப்படத்தின் பெயர்
  • அதனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர்
  • நடிகர்கள்
  • நடிகைகள்
  • இயக்குனர்
  • தயாரிப்பாளர்
  • கதாசிரியர்
  • வசனகர்த்தா
  • இசையமைப்பாளர்
  • பாடலாசிரியர்கள்
  • பாடகர்கள்
  • பாடல்களின் தொடக்க வரி

ஆகிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணைகள்

நூலின் இறுதிப் பகுதியில், வெளியான படங்களின் பட்டியல் ஆண்டு வாரியாகவும், அகரவரிசைப்படியும் தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், அந்தத் தொகுதியில் உள்ள திரைப்படங்களின் பாடல்கள் அனைத்தும் அகர வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றை இலகுவில் கண்டுகொள்ள வசதியாக அவை இடம்பெற்றுள்ள பக்க எண் கொடுக்கப்பட்டுள்ளது.

கடைசிப் பக்கத்தில் நூலிலுள்ள தகவல்களுக்கு ஆதாரமாக இருந்த நூல்கள், நிறுவனங்கள், நபர்கள் பற்றிய விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தொகுப்பாசிரியர்

மூன்று தொகுதிகளிலுமுள்ள விபரங்களைத் திரட்டி நூல் வடிவாக்கியவர் கோ. நீலமேகம் (நீலமேகம் கோவிந்தசாமி).

வெளியீடு

இந்த மூன்று தொகுதிகளும் சென்னை 600108 இலுள்ள மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 1951 - 1960 காலப்பகுதிக்கான தொகுதி 1, 2014 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களிலும், 1961 - 1970 காலப்பகுதிக்கான தொகுதி 2, 2016 நவம்பர் திங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. 1971 - 1980 காலப்பகுதிக்கான தொகுதி 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

சான்று

  1. "கவனிக்க வேண்டிய புது வரவுகளில் சில..." தினமணி. 20 ஜனவரி 2017. Archived from the original on 2018-08-30. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகஸ்ட் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  • திரைக்களஞ்சியம் பாகம் - 1, மணிவாசகர் பதிப்பகம் சென்னை 108.
  • திரைக்களஞ்சியம் பாகம் - 2, மணிவாசகர் பதிப்பகம் சென்னை 108.
  • திரைக்களஞ்சியம் பாகம் - 3, மணிவாசகர் பதிப்பகம் சென்னை 108.
"https://tamilar.wiki/index.php?title=திரைக்களஞ்சியம்_(நூல்)&oldid=16110" இருந்து மீள்விக்கப்பட்டது