பாட்டியல்

பாட்டியல் என்பது, பிரபந்த இலக்கியங்கள் எனப்படும் சிற்றிலக்கியங்கள் தொடர்பான இலக்கணத்தைக் குறிக்கும். பிரபந்தங்களின் வகை, அவற்றின் இலக்கணங்கள், அவற்றைப் பாடவேண்டிய முறை, வெவ்வேறு வருணத்தாருக்குரிய பாடல்கள், அவ்வருணத்தார் இயல்புகள், பாட்டுடைத்தலைவர் நூல் கேட்கவேண்டிய முறை, நூல் அரங்கேற்றம் செய்வதற்குரிய அவையின் இயல்பு, புலவர்களின் வகை போன்றவை பாட்டியலுள் அடங்குகின்றன. இதனால், செய்யுள்களின் உறுப்புகளையும் அவற்றின் இனங்களையும் விளக்கும் யாப்பியலினின்றும் வேறுபடுகின்றது.

பாட்டியல் என்னும் நூல் வகையானது பொதுவாக மூன்று வகையான செய்திகளைக் கூறும்.

புலம் எனத் தொல்காப்பியப் பாயிரம் கூறும் இலக்கம் மொழியை அறிவியல் பார்வையில் அணுகும். முன்னோர்கள் பாடிய பாடல்களில் அமைந்துகிடக்கும் மரபுநெறியைப் புலப்படுத்தும். தொல்காப்பியம், நன்னூல், இறையனார் களவியல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பி அகப்பொருள் முதலானவை புலனெறி இலக்கணங்கள்.

பாட்டியல் இலக்கண நூல்கள் எழுத்து, சொல், நூல் எனப் பகுத்துக்கொண்டு வேறு வகையில் அணுகும்.

ஐங்குறு நூறு என்னும் நூல் ஐந்து அகத்திணை மேல் ஐந்து புவலர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. பதிற்றுப்பத்து 10 அரசர்களைப் 10 புலவர்கள் 10, 10 பாடல்களாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இவை இலக்கியப் பாடல்களின் தொகுப்பு.

பாட்டியல் நூல்கள்

பிரபந்த இலக்கியங்கள் தோன்றிய பின்னரே அவற்றுக்கு இலக்கணம் வகுக்கப் பாட்டியல் நூல்கள் தோன்றின. தமிழில் பல பாட்டியல் நூல்கள் எழுதப்பட்டதாக அறியப்பட்டுள்ளன. அவற்றுள்,

என்பனவும் அடங்கும். இவற்றுள், முதலாவது நூல் இன்று இல்லை. பண்டாரப் பாட்டியலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏனைய இன்று கிடைக்கக்கூடியதாக உள்ளன.

பாட்டியல் நூல்களின் கால வரிசை

எண் நூல் யாப்பு நூற்றாண்டு
1 பன்னிரு பாட்டியல் நூற்பா 11
2 வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல் வெண்பா 12
3 நவநீதப் பாட்டியல் கட்டளைக் கலித்துறை 14
4 வரையறுத்த பாட்டியல் (ஒருபகுதி மட்டும்) கட்டளைக் கலித்துறை 14
5 சிதம்பரப் பாட்டியல் விருத்தம் 16
6 இலக்கணவிளக்கப் பாட்டியல் நூற்பா (பிற்காலம்) 18

இவற்றையும் காண்க

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=பாட்டியல்&oldid=16907" இருந்து மீள்விக்கப்பட்டது