பருவகாலம் (திரைப்படம்)

பருவ காலம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜாஸ் ஏ. எஸ். பெர்னாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரோஜா ரமணி, கமல்ஹாசன், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கான கதை, வசனத்தை பேராசிரியர் ஏ.எஸ். பிரகாசம் எழுதியுள்ளார்.[2] இத்திரைப்படமானது 1972இல் மலையாள மொழியில் வெளிவந்த செம்பருத்தி எனும் திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும்.[3]

பருவ காலம்
இயக்கம்ஜாஸ் ஏ. எஸ். பெர்னாண்டோ
தயாரிப்புசேகர் ராஜா
(யூப்பிட்டர் ஆர்ட் மூவீஸ்)
கதைஏ. எஸ். பிரகாசம்
திரைக்கதைஏ. எஸ். பிரகாசம்
இசைஜி. தேவராஜன்
நடிப்புரோஜா ரமணி
கமல்ஹாசன்
ஸ்ரீகாந்த்
நாகேஷ்
பாடலாசிரியர்புலமைப்பித்தன்,
பூவை செங்குட்டுவன்
ஒளிப்பதிவுமஸ்தான்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
நடனம்'மதுரை' ராமு
வெளியீடுபெப்ரவரி 9, 1974
நீளம்3867 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

'ஆனந்த பவன்' என்றொரு பங்களா விடுதியில் பணியாளராக பெரியசாமியும் (எஸ்.வி.சுப்பையா) அவரது மகள் சாந்தாவும் (ரோஜா ரமணி) பணியாற்றி வந்தனர் மற்றும் அந்த விடுதி சமையல்காரராக முருகனும் (சுருளிராஜன்) பணியாற்றி வந்தார். பருவகாலம் (சீசன்) ஆரம்பித்துவிட்டால் ஆனந்த பவன் பங்களாவிற்கு பெரும் பணக்காரர்கள் வருவது வழக்கம். அப்படி பருவகாலம் ஆரம்பித்தவுடன் ஓவியர் ரவி (சுதர்சன்), வேட்டைக்காரன் ஜம்பு (சசிகுமார்), குதிரை பயிற்சியாளர் ஜானி (லியோ பிரபு), சுவாமியார் (நாகேஷ்) என்று ஒவ்வொருத்தராக சீசனை அனுபவிக்க வந்தனர். இவர்களோடு பெண் விருந்தினராக கனகா (ப்ரமீளா) அங்கு வந்து தங்கினார்.

கங்காதரன் (ஸ்ரீகாந்த்), அந்த விடுதியில் தங்குவதற்கு கங்காதரன் தம்பி சந்திரன் (கமல்ஹாசன்) முன்பதிவு செய்ய வருகிறார், பின்னர் கங்காதரன் அந்த விடுதியில் தங்கிகொள்கிறார். விடுதி வேலையை சாந்தா செய்துவந்தார். அப்படியொரு சந்தர்ப்பத்தில், அன்றைய வேலைகளை முடித்துவிட்டு திரும்பும் போது, அவள் கற்பழிக்கப்படுகிறாள். யார் அந்த தவறு செய்தார் என்ற குழப்பம் அந்த விடுதிக்குள் ஏற்படுகிறது, இந்த நிலையில் அவளுக்கு குழந்தையும் பிறக்கிறது. இறுதியில் கங்காதரன் மேல் அனைவருக்கும் சந்தேகம் ஏற்படுகிறது, கங்காதரனை காப்பாற்ற அவரது சகோதர் சந்திரன் முயற்சி செய்கிறார். இறுதியில் அந்தக் குழந்தைக்கு யார் தந்தை என்பதை கண்டுபிடிக்கப்பட்டு, பின் அவருடன் திருமணம் நடைபெறுகிறது.

நடிகர்கள்

பாடல்கள்

ஜி. தேவராஜன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது, இவருக்கு உதவியாக ஆர்.கே. சேகர் (ஏ.ஆர். ரகுமானின் தந்தை) பணியாற்றியுள்ளார்.[3] பாடல்கள் புலமைப்பித்தன் மற்றும் பூவை செங்குட்டுவன் ஆகியோரால் எழுதப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "வெள்ளி ரதங்கள்" பி. மாதுரி
2 "வெல்வெட்டு பட்டு" எல். ஆர். ஈஸ்வரி
3 "சரணம் ஐயப்பா" ராஜேஷ்
4 "வெள்ளி ரதங்கள் (சோகம்)" பி. மாதுரி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பருவகாலம்_(திரைப்படம்)&oldid=35296" இருந்து மீள்விக்கப்பட்டது