பரிபாடல் (யாப்பு)
பரிபாடல் என்னும் யாப்பு வகை பற்றிய செய்திகள் தொல்காப்பியச் செய்யுளியலில் கூறப்பட்டுள்ளன.
- பரிபாடல் குறைந்தது 25 அடிகளையும், அதிக-பக்கமாக 400 அடிகளையும் கொண்டிருக்கும். [1]
- பாடல்களை யாப்பு வகையால் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என வகைப்படுத்துவர். மற்றும் வாழ்த்தியல், கைக்கிளை, அங்கதம், முதுசொல் எனப் பொருள்நிலை வகையானும் வகைப்படுத்துவர். பரிபாடலானது யாப்பு-வகைப் பாகுபாட்டிலும், பொருள்நிலை-வகைப் பாகுபாட்டிலும் அடங்காது, அனைத்து-வகைப் பாக்களுக்கும் பொதுவாக நிற்கும். [2]
- பரிபாடலில் கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் நான்கு உறுப்புகளைக் கொண்டிருக்கும். [3]
- பரிபாடலில் சொற்சீர் அடி, முடுகியல் அடி ஆகியவை பயின்று வரும். அதனால் பரிபாடலை அந்தச் சீர்கள் வரும் பாவாகவும் கொள்ளப்படும். [4] [5]
அடிக்குறிப்பு
- ↑
பரிபாடல்லே,
நால்-ஈரைம்பது உயர்பு அடி ஆக,
ஐ-ஐந்து ஆகும், இழிபு அடிக்கு எல்லை. (தொல்காப்பியம் 3-464] - ↑
'பரிபாடல்லே தொகை நிலை வகையின்,
"இது பா" என்னும் இயல் நெறி இன்றி,
பொதுவாய் நிற்றற்கும் உரித்து' என மொழிப. (தொல்காப்பியம் 3-425) - ↑
கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தொடு,
செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக,
காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும். (தொல்காப்பியம் 3-426) - ↑
சொற்சீர் அடியும், முடுகியல் அடியும்,
அப் பா நிலைமைக்கு உரிய ஆகும். (தொல்காப்பியம் 3-427) - ↑
கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும்,
முட்டடி இன்றிக் குறைவு சீர்த்து ஆகியும்,
மொழி அசை ஆகியும், வழி-அசை புணர்ந்தும்,
சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே. (தொல்காப்பியம் 3-428)