நிஷா நூர்

நிஷா நூர் (Nisha Noor) என்பவர் பிரபல தென்னிந்திய நடிகை ஆவார். இவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் தீவிரமாக பணியாற்றியுள்ளார். இவர் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

நிஷா நூர்
பிறப்புநிஷா நூர்
(1962-09-18)செப்டம்பர் 18, 1962
இறப்புஏப்ரல் 23, 2007(2007-04-23) (அகவை 44)
இந்தியா, தமிழ்நாடு, சென்னை, தாம்பரம்
பணிநடிகை

தொழில்

கல்யாண அகதிகள் (1986) மற்றும் ஐயர் தி கிரேட் (1990) போன்ற படங்களில் நடித்ததற்காக நிஷா நூர் பிரபலமாக அறியப்பட்டார். இவர் டிக் டிக் டிக் (1981) படத்திலும், விமர்சன பாராட்டப்பட்ட சிவப்பு நாடா, மிமிக்ஸ் ஆக்சன் 500, இனிமை இதோ இதோ முதலிய பல படங்களில் நடித்தார். 1980 முதல் 1986 வரை இவர் தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார். மேலும் கே. பாலசந்தர், விசு, சந்திரசேகர் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றினார். எயிட்சு தொடர்பான நோயால் நூர் 2007 இல் இறந்தார். [1] [2]

பகுதி திரைப்படவியல்

தமிழ்

மலையாளம்

  • சிவப்பு நாடா (1990)
  • மிமிக்ஸ் பரேட் (1990)
  • ஐயர் தி கிரேட் (1990)
  • மிமிக்ஸ் ஆக்சன் 500 (1995)

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நிஷா_நூர்&oldid=23001" இருந்து மீள்விக்கப்பட்டது