நிழல்கள் ரவி

நிழல்கள் ரவி (Nizhalgal Raviee) ஒரு தென்னிந்தியத் திரைப்படநடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். ரவி பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்தார். இவரது தாய்மொழியாகத் தமிழ் பேசுகிறார். அவர் நிழல்கள் படத்தின் மூலம் 1980 ம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] சின்னத்திரையிலும் குறிப்பிடத்தக்க அளவு நடித்துள்ளார். இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[2]

நிழல்கள் ரவி
பிறப்புரவிசந்திரன் ஷ்யாமண்ணா
ஏப்ரல் 16, 1953
மற்ற பெயர்கள்காகா ரவி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1980–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
விஷ்ணுப்ரியா

தொழில்

தென்னிந்திய திரைப்படத் துறையில் நடிகர் நிழல்கள் ரவி, நிழல்கள் தமிழ் திரைப்படத்தில் பாரதிராஜாவின் இயக்கத்தில் காதலில் விழுந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார், அவர் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் தந்திருந்தாலும், ஒரு பெரிய கதாநாயகானாக வரவில்லை. ஆனால் அவர் நடித்த வேதம் புதிது, நாயகன், சின்னத்தம்பி பெரியதம்பி, அண்ணாமலை, மறுபடியும் மற்றும் ஆசை உட்பட பல படங்களில் சிறப்பான பாத்திரங்களில் நடித்திருந்தார். அவர் ஒரு அன்பான இதயமுள்ள தந்தை, இரக்கமற்ற வில்லன் அல்லது ஒரு முதுகில் குத்துபவர் போன்ற பாத்திரங்களை சித்தரிக்கிறார். தமிழில் ஒளிபரப்பப்பட்ட கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்காக அமிதாப் பச்சனுக்கு பின்னணி செய்தார். 1980 களில் மலையாளத்தில் 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்தார். 80 களின் பிற்பகுதியிலும் 90 களின் ஆரம்பத்திலும் டைரக்டர் கே. பாலசந்தரின் தொலைகாட்சித் தொடரான இரயில் சினேகம் என்பதில் நடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

அவர் கோயம்புத்தூர் பி.எஸ். ஜி கலைக்கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் ஷியாமன்னா மற்றும் டி. ராஜம்மாள் ஆகியோருக்கு ரவிச்சந்திரன் என்ற இயற்பெயருடன் பிறந்தார். அவர் விஷ்ணுப்ரியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ராகுல் ரவி என்ற மகன் இருக்கிறார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

  • ராமானுஜன்
  • புவனக்காடு
  • வணக்கம் சென்னை
  • கோரி தெரே ப்யார் மெயின்(இந்தி)
  • சிங்கம் 2
  • காதலி என்னைக் காதலி
  • ரொமேன்ஸ் (மலையாளம்)
  • ஒஸ்தி
  • மெல்விலாசம் (மலையாளம்)
  • குமாரா
  • ஆடு புலி
  • வர்மம்
  • வாடா போடா நண்பர்கள்
  • இளைஞன்
  • காவலன்
  • முதல் காதல் மழை
  • சிங்கம்
  • அழகான் பொண்ணுதான்
  • மாஞ்சா வேலு
  • மண்டபம்
  • பெளர்ணமி நாகம்
  • மஞ்சள் வெயில்
  • மாதவி
  • இந்திர விழா
  • குடியரசு
  • தம்பியுடையான்
  • பிஞ்சு மனசு
  • கண்ணா நீ எனக்குத்தாண்டா
  • அதே நேரம் அதே இடம்
  • கண்டேன் காதலை
  • ஜெயம் கொண்டான்
  • தாம் தூம்நெஞ்சத்தை கிள்ளாதே
  • தீயவன்
  • சக்ரகட்டி
  • தாமிரபரணி
  • தொடாமலேக
  • கலாபக் காதலன்
  • ஒரு நாள் ஒரு கனவு
  • ஜாதி
  • கஜேந்திரா
  • அட்டகாசம்
  • வர்ணஜாலம்
  • அடிதடி
  • திருமலை
  • படைவீட்டு அம்மன்
  • மனசெல்லாம்
  • நாகேஸ்வரி
  • அல்லி அர்ஜுனா
  • வில்லன்
  • லவ்லி
  • தவசி
  • எங்கே எனது கவிதை
  • ஷாஜஹான்
  • புன்னகை தேசம்
  • ரெட்
  • சிடிசன்
  • பிரியாத வரம் வேண்டும்
  • பார்த்தாலே பரவசம்
  • குஷிக்
  • கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
  • பட்ஜட் பத்மநாபான்
  • ராஜகாளி அம்மன்
  • ஜேம்சு பாண்டு
  • பாரதி
  • நெஞ்சினிலே
  • என்றென்றும் காதல்
  • கண்ணோடு காண்பதெல்லாம்
  • பூமகள் ஊர்வலம்
  • நிலவே முகம் காட்டு
  • காத்திருந்த கண்கள்
  • பகவத் சிங்பெரிய மனுசன்
  • மாப்பிள்ளை கவுண்டர்
  • அருணாசலம்
  • இந்தியன்
  • ஆசை
  • சின்ன வாத்தியார்
  • நான் பெற்ற மகனே
  • மறுபடியும்
  • அக்னி பார்வை
  • சக்ரவர்த்தி
  • மூன்றாவது கண்
  • ஆத்மி (இந்தி)
  • புதுப்பிறவி
  • உழைப்பாளி
  • அண்ணாமலை
  • சிங்காரவேலன்
  • தம்பி பொண்டாட்டி
  • தர்ம துரை
  • சிவசங்கரி
  • இசை பாடும் தென்றல்
  • மாதா கோமாதா
  • பிரம்மச்சாரி
  • நீங்க நல்லா இருக்கணும்
  • பதிமூனாம் நம்பர் வீடு
  • திலகம்
  • எங்கிட்ட மோதாதே
  • இதய தாமரை
  • ஆடி விரதம்
  • ராசாத்தி வரும் நாள்
  • மை டியர் லிசா
  • மாப்பிள்ளை
  • சூர சம்ஹாரம்
  • லட்சுமி வந்தாச்சு
  • நீதியின் நிழல்
  • டிசம்பர் பூக்கள்
  • சின்ன தம்பி
  • நாயகன்
  • வேதம் புதிது
  • பகல் நிலவு
  • ஓசை
  • அதிசய மனிதன்
  • சிறீ ராகவேந்த்ரா
  • காமாக்ஷி
  • வெற்றி விநாயகர்
  • நிழல்கள்

தொலைக்காட்சி

தொடர் பாத்திரம் தொலைக்காட்சி மொழி குறிப்புகள்
ரயில் சினேகம் தூர்தர்ஷன் தமிழ்
ஜன்னல் சன் டிவி தமிழ்
தென்றல் வேலாயுதம் சன் டிவி தமிழ்
எமர்ஜென்சி ஆக்சன் பொதிகை தொலைக்காட்சி தமிழ்
அப்பாவுக்காக தமிழ்
காசளவு நேசம் சன் டிவி/ராஜ் தொலைக்காட்சி தமிழ்
நல்லதோர் வீணை தமிழ்
சூர்யபுத்திரி கலைஞர் தொலைக்காட்சி தமிழ்
அலைகள் சன் டிவி தமிழ்
லஹரி லஹரி லஹரிலோ ஈ டிவி தெலுகு

பின்னணி கலைஞராக

நிழல்கள் ரவி நிகழ்த்திய மின்னணி குரல் காரணமாக கோன் பனேகா குரோர்பதி, பருவம் 2 நிகழ்ச்சி தமிழ் பேசும் சமூகத்திடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நிழல்கள்_ரவி&oldid=21905" இருந்து மீள்விக்கப்பட்டது