நல்லகாலம்
நல்ல காலம் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, டி. எஸ். பாலையா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நல்ல காலம் | |
---|---|
இயக்கம் | கே. வேம்பு ஜே. சின்ஹா |
தயாரிப்பு | ஜெயசக்தி பிக்சர்ஸ் |
கதை | கதை ஜே. சின்ஹா |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். கே. ராதா டி. எஸ். பாலையா என். எஸ். கிருஷ்ணன் எம். எல். பதி பண்டரிபாய் டி. ஏ. மதுரம் கே. வரலட்சுமி கே. லட்சுமிகாந்தம் |
வெளியீடு | 1954 |
ஓட்டம் | . |
நீளம் | 16513 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். எம். பி. சிவம், புரட்சிதாசன், உடுமலை நாராயண கவி ஆகியோர் பாடல்களை யாத்தனர். என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோர் நடித்ததுடன் பாடல்களைப் பாடினார்கள். ஆர். பாலசரஸ்வதி தேவி, ஏ. ஆண்டாள், என். எல். கானசரஸ்வதி, கே. ராணி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
என். எஸ். கிருஷ்ணன் பாடிய சும்மா இருக்காதுங்க என்ற பாடல் பிரபலமானது. அது போல் ஆர். பாலசரஸ்வதி தேவி பாடிய வாழ்வு மலர்ந்து மணம் வீசிடுதே என்ற பாடல் இலங்கை வானொலியில் 1950 களில் பிரபலமாக ஒலித்தது.
எண். | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | சும்மா இருக்காதுங்க | என். எஸ். கிருஷ்ணன் | உடுமலை நாராயண கவி | 02:33 |
2 | வாழ்வு மலர்ந்து | ஆர். பாலசரஸ்வதி தேவி | எம். பி. சிவம் | |
3 | மனமே உன் வாழ்வில் | |||
4 | கண்ணாலே காண்பதும் | என். எல். கானசரஸ்வதி | ||
5 | காந்தம் போலப் பாயும் | கே. ராணி | ||
6 | கோலாகலமாக | குழுவினருடன் ஏ. ஆண்டாள் | ||
7 | வாழ்வின் கடமையை | புரட்சிதாசன் | ||
8 | பாரத நாட்டின் கண்கள் | டி. ஏ. மதுரம் | 02:24 |
உசாத்துணை
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-05-23 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170523011321/http://www.lakshmansruthi.com/cineprofiles/1954-cinedetails15.asp. பார்த்த நாள்: 2022-05-08.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 74.