நரேன்
நரேன் (Narain, பிறப்பு: அக்டோபர் 7, 1979; இயற்பெயர் - சுனில் குமார்)[1] மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். அதனை தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நரேன் | |
---|---|
பிறப்பு | சுனில் குமார் அக்டோபர் 7, 1979 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
செயற்பாட்டுக் காலம் | (2002 - தற்போது வரை) |
பெற்றோர் | ராமகிருஷ்ண நாயர், சாந்தகுமாரி |
வாழ்க்கைத் துணை | மஞ்சு அரிதாஸ் (2007-தற்போது வரை) |
பிள்ளைகள் | 1 |
வலைத்தளம் | |
www |
2008 ஆம் ஆண்டில் இவர் இளைஞர் சார்ந்த மலையாளத் திரைப்படமான மின்னாமினிக்கூட்டம் படத்தில் நடித்தார். இவர் 20 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.[2]
தமிழ்த் திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | உடன் நடித்தவர்கள் | இயக்குநர் | வேடம் |
---|---|---|---|---|
2014 | கத்துக்குட்டி | ஸ்ருஷ்டி, சூரி, | இரா.சரவணன் | |
2008 | பூக்கடை ரவி | சிவக்குமார் | ரவி | |
2008 | அஞ்சாதே | விஜயலட்சுமி, பிரசன்னா, | மிஷ்கின் | சத்யா |
2007 | பள்ளிக்கூடம் | சினேகா, ஷ்ரியா ரெட்டி | தங்கர் பச்சான் | வெற்றிவேல் |
2006 | நெஞ்சிருக்கும் வரை | தீபா | எஸ். ஏ. சந்திரசேகர் | கணேசன் |
2006 | சித்திரம் பேசுதடி | பாவனா, | மிஷ்கின் | திரு |
2004 | 4 ஸ்டூடன்ட்ஸ் | பரத், கோபிகா | ஜெயராஜ் | ராஜன் மாத்யூ |
மலையாளத் திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | உடன் நடித்தவர்கள் | இயக்குநர் | வேடம் |
---|---|---|---|---|
2008 | மின்னமின்னிக்கூட்டம் | மீரா ஜாஸ்மின், இந்திரஜித் | கமல் | அபிலாஷ் |
2007 | ஒரே கடல் | மம்மூட்டி, மீரா ஜாஸ்மின் | சியாம் பிரசாத் | ஜெயன் |
2007 | பந்தயக் கோழி | பூஜா, கீதா | எம். ஏ. வேணு | நந்தகோபால் |
2006 | கிளாஸ்மேட்ஸ் | பிருத்விராஜ், ஜெயசூர்யா, காவ்யா மாதவன் | லால் ஜோஸ் | முரளி |
2005 | ஷீலாபதி | காவ்யா மாதவன் | ஆர். சரத் | டாக்டர் ஜீவன் |
2005 | பை தி பீப்பிள் | சமத், நிசல், சந்தோஷ், பிஜோய் | ஜெயராஜ் | ராஜன் மாத்யூ |
2005 | அச்சுவிண்டே அம்மா | மீரா ஜாஸ்மின் | சத்தியன் அந்திக்காடு | வழக்கறிஞர் எம்மானுவேல் ஜான் |
2005 | அன்னொரிக்கல் | காவ்யா மாதவன் | சரத்சந்திரன் வயனாடு | பென்னி |
2004 | 4 தி பீப்பிள் | பரத், கோபிகா | ஜெயராஜ் | ராஜன் மாத்யூ |
2002 | நிழல்கூத்து | ஓடுவில் உன்னிகிருஷ்ணன் | அடூர் கோபாலகிருஷ்ணன் | முத்து |