திருமணம் (2019 திரைப்படம்)

திருமணம் சில திருந்தங்களுடன் (சுருக்கமாக திருமணம் எனவும் குறிக்கப்படுகிறது) (Thirumanam Sila Thiruthangaludan also simply known as Thirumanam) என்பது 2019 ஆண்டைய இந்திய தமிழ் குடும்ப காதல் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை சேரன் எழுதி இயக்கி, முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.[1] இப்படத்தின் முதன்மைப் பாத்திரங்களை உமாபதி ராமையா, காவியா சுரேஷ், சேரன் தம்பி ராமையா, எம். எசு. பாசுகர், சுகன்யா , மனோபாலா ஆகியோர் ஏற்று நடித்துள்ளனர்.[2] இப்படமானது பிரேம்நாத் சிதம்பரத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரனிஷ் இண்டர் நேசனல் மூலமாக தயாரித்துள்ளது. படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ராஜேஷ் யாதவ் மேற்கொண்டுள்ளார்.

திருமணம்
இயக்கம்சேரன்
தயாரிப்புபிரேம்நாத் சிதம்பரம்
கதைசேரன்
திரைக்கதைசேரன்
இசைசித்தார்த் விபின் (பாடல்கள்),
சபேஷ் முரளி (பின்னணி)
நடிப்புஉமாபதி ராமையா
காவியா சுரேஷ்
சுகன்யா
தம்பி ராமையா
மனோபாலா
ஒளிப்பதிவுஇராஜேஷ் யாதவ்
படத்தொகுப்புபொன்னுவேல் தாமோதரன்
கலையகம்பிரனிஷ் இண்டர் நேசனல்
வெளியீடு1 மார்ச் 2019
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இயக்குனர் சேரனால் 2018 ஆம் ஆண்டில் மணியார் குடும்பம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குனர், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவை இப்படத்தில் நடிக்கவைப்பதாக தனது திட்டத்தையும் சேரன் வெளியிட்டார்.[3] ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை (2015) படத்தை இயக்கியதற்குப் பின்னர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சேரனின் இயக்கத்தில் இப்படம் வெளிவந்துள்ளது.[4] இப்படத்தின் பெயரான திருமணம் என்பதுடன் அடிச்சேர்க்கையாக சில திருத்தங்களுடன் என்ற சொல் இணைக்கப்பட்டுள்ளது. இது இளங் காதலர்களுக்கான திருமண ஏற்பாட்டில் திருமணத்திற்கு பணத்தை சிக்கனமாக செலவழிப்பது தொடர்பாக ஏற்படக்கூடிய மன வருத்தத்தால் திருமணத்தில் ஏற்படும் சிக்கலைக் குறிப்பதாக உள்ளது.[5][6]

இசை

இப்படத்துக்கான இசையமைப்பை சித்தார்த் விபின் மேற்கொண்டுள்ளா்.[7]

  • ஆசைய சொல்ல - ஜகதீஷ், பிரியங்கா நாராயணன்
  • இறைவா நிய்யே - சரண்யா சீனிவாஸ்
  • எத்தனைக் கனவு - அபர்ணா, ஜகதீஷ், சுவாகதா
  • வராமலே - ஜகதீஷ்

வணிகம்

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் 2018 திசம்பர் 12, அன்று வெளியானது. மேலும் அதாகாரப்பூர்வ முன்னோட்டமானது 2018 சனவரி 26 அன்று வெளியானது.[8][9][10] படத்தின் தலைப்பையும், சுவரொட்டியையும் 2018 திசம்பர் 12 அன்று நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.[1]

வெளியீடு மற்றும் வரவேற்பு

திருமணம் படத்துக்கு தணிக்கை வாரியத்தால் "U" சான்று வழங்கப்பட்டது.[11][12]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Cheran stars in his own directorial, Thirumanam". https://www.cinemaexpress.com/stories/news/2018/dec/12/cheran-stars-in-his-own-directorial-thirumanam-9204.html. 
  2. "Thirumanam Tamil Movie (2019) | Cast | Songs | Trailer | Teaser | Release Date". https://www.newsbugz.com/thirumanam-tamil-movie/. 
  3. "Cheran’s next directorial Maniyar Kudumbam to star Thambi Ramaiah’s son". http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/jun/29/cherans-next-directorial-maniyar-kudumbam-to-star-thambi-ramaiahs-son-1835724.html. 
  4. "Director Cheran's next titled Thirumanam". http://origin-www.sify.com/movies/director-cheran-s-next-titled-thirumanam-news-tamil-smmoIDfgacfbc.html. 
  5. "Thirumanam reflects life of a commoner: Cheran". https://www.deccanchronicle.com/entertainment/kollywood/230119/thirumanam-reflects-life-of-a-commoner-cheran.html. 
  6. "We’re still making films on caste; shows that society remains the same: Cheran - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/were-still-making-films-on-caste-shows-that-society-remains-the-same-cheran/articleshow/67806811.cms. 
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2019-04-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190417115613/https://mio.to/album/Thirumanam%2B(2019). 
  8. "New teaser and making video of Cheran's next 'Thirumanam' released - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/new-teaser-and-making-video-of-cherans-next-thirumanam-released/articleshow/67177965.cms. 
  9. "Cheran's Thirumanam trailer is here". https://www.cinemaexpress.com/videos/2019/jan/26/cherans-thirumanam-trailer-is-here-9806.html. 
  10. "Thirumanam Trailer: A Close Look At The Hardships In A South Indian Wedding" (in en-US). https://silverscreen.in/news/thirumanam-trailer-a-detailed-version-of-hardships-in-a-south-indian-wedding/. 
  11. "Cheran's 'Thirumanam' gets an 'U' certificate - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/cherans-thirumanam-gets-an-u-certificate/articleshow/67912535.cms. 
  12. "‘யூ’ சான்றிதழுடன் சேரன் படம் தணிக்கை ஆனது". http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/02/09231715/Cheran-became-a-film-audit.vpf. 
"https://tamilar.wiki/index.php?title=திருமணம்_(2019_திரைப்படம்)&oldid=34130" இருந்து மீள்விக்கப்பட்டது