திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருப்புவனம் வட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்கள் உள்ளன. திருப்புவனத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 93,857 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 23,646 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 191 ஆக உள்ளது.[1]

ஊராட்சி மன்றங்கள்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின் 45 கிராம ஊராட்சி மன்றங்கள்:[2]

  1. அச்சங்குளம்
  2. அல்லிநகரம்
  3. இலந்தைகுளம்
  4. எஸ். வாகைகுளம்
  5. ஏனாதி-தேளி
  6. ஓடாத்தூர்
  7. கணக்கன்குடி
  8. கலியாந்தூர் நயினார்பேட்டை
  9. கல்லூரணி
  10. கழுகேர்கடை
  11. காஞ்சிரங்குளம்
  12. கானூர்
  13. கிளாதரி
  14. கீழச்சொரிக்குளம்
  15. கீழடி
  16. கே. பெத்தானேந்தல்
  17. கொந்தகை
  18. செல்லப்பனேந்தல்
  19. சொட்டதட்டி
  20. டி. ஆலங்குளம்
  21. டி. புளியங்குளம்
  22. டி. வேலாங்குளம்
  23. தவத்தாரேந்தல்
  24. திருப்பாச்சேத்தி
  25. தூதை
  26. பழையனூர்
  27. பாட்டம்
  28. பாப்பாகுடி
  29. பிரமனூர்
  30. புலியூர் சயனாபுரம்
  31. பூவந்தி
  32. பொட்டப்பாளையம்
  33. மடப்புரம்
  34. மணலூர்
  35. மழவராயனேந்தல்
  36. மாங்குடி அம்பலத்தாடி
  37. மாரநாடு
  38. முக்குடி
  39. முதுவன்திடல்
  40. மேலச்சொரிக்குளம்
  41. மேலராங்கியம்
  42. மைக்கேல்பட்டிணம்
  43. லாடனேந்தல்
  44. வீரனேந்தல்
  45. வெள்ளூர்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்