திக்குவல்லை கமால்

திக்குவல்லை கமால். (பிறப்பு: மார்ச் 3, 1950) என்ற முகம்மது ஜெலால்தீன் முகம்மது கமால், ஈழத்து தமிழ்க் கலை இலக்கியத் துறையில் பங்காற்றி வரும் தென்னிலங்கை முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்திற்குரிய ஒரு படைப்பாளி ஆவார்.[1] இலங்கையின் தெற்கு மாகாணத்தில், மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள திக்குவல்லை எனும் ஊரில் பிறந்த கமால், அக்கிராமத்து மக்களின் பேச்சு வழக்கினை கொண்ட படைப்புக்களை ஈழத்து படைப்பிலகிற்கு வழங்கியவர்களில் முன்னோடிகளில் ஒருவராவார்.

திக்குவல்லை கமால்
திக்குவல்லை கமால்
இயற்பெயர்/
அறியும் பெயர்
திக்குவல்லை கமால்
பிறப்புபெயர் முகம்மது ஜெலால்தீன் முகம்மது கமால்
பிறந்ததிகதி மார்ச் 3, 1950
பிறந்தஇடம் திக்குவல்லை
தேசியம் இலங்கை
அறியப்படுவது ஆசிரியர் ஈழத்து எழுத்தாளர்

தர்கா நகர் சாகிரா மகா வித்தியாலயம் வெளியிட்ட தட்டெழுத்து கவிதை ஏடான "சுவை" மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார் கமால். பல சிறுகதைகள், புதினங்கள், புதுக்கவிதைகள், வானொலி நாடகங்கள் எனப் பல்வேறு வடிவங்களில் தனது இலக்கிய பங்களிப்பை ஆற்றி இருக்கிறார்.

சிரித்திரன், இன்ஸான், வீரகேசரி, தினபதி, ராதா, தினகரன், மல்லிகை, ஞானம் போன்ற பல்வேறு பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளி வந்திருக்கும் இவரது படைப்புக்கள், சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது ""எலிக்கூடு"" எனும் புதுக்கவிதைத் தொகுப்பு ஈழத்தில் வெளிவந்த புதுக்கவிதைத் தொகுப்புகளில் ஆரம்ப தொகுப்புகளில் ஓன்றாக திகழ்கிறது.

திக்குவல்லை எழுத்தாளர் சங்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மல்லிகைப்பந்தல் போன்ற கலை இலக்கிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்ட கமால், ஓரு பயிற்றுவிக்கப்பட்ட அறிவியல் துறை ஆசிரியராவார்.

வெளிவந்த நூல்கள்

  • எலிக்கூடு (புதுக்கவிதை, 1973)
  • கோடையும் வரம்புகளை உடைக்கும் (சிறுகதைகள், 1984)
  • குருட்டு வெளிச்சம் (சிறுகதைகள், 1993)
  • ஒளி பரவுகிறது (நாவல், இலங்கை சாகித்திய மண்டல பரிசு 1995)
  • விடுதலை (சிறுகதைகள், 1996)
  • விடை பிழைத்த கணக்கு (சிறுகதைகள், 1996)
  • புதியபாதை (சிறுகதைகள், 1997)
  • நச்சு மரமும் நறுமலர்களும் (நாவல், 1998)
  • வரண்டு போன மேகங்கள் (சிறுகதைகள், 1999)
  • பாதை தெரியாத பயணம் (நாவல், 2000)
  • புகையில் கருகிய பூ (வானொலி நாடகங்கள், 2001)
  • பிறந்த நாள் (சிறுவர் இலக்கியம், 2003)
  • மல்லிகை ஜீவா மனப்பதிவுகள் (கட்டுரை, 2004)
  • நிராசை (வானொலி நாடகங்கள், 2005)
  • உதயபுரம் (சிறுவர் இலக்கியம், இலங்கை சாகித்திய மண்டல பரிசு, 2005)
  • உதயக் கதிர்கள் (நாவல், 2006)
  • முட்டைக் கோப்பி (சிறுகதைத் தொகுப்பு, 2010

மொழிபெயர்ப்புகள்

  • குருதட்சணை (சிங்கள மூலம்: தெனகம ஸ்ரீவர்தன)
  • தொடரும் உறவுகள் (சிங்கள மூலம்: சிட்னி மார்க்கஸ் டயஸ்)
  • வெற்றியின் பங்காளிகள் (சிங்கள மூலம்: விமலதாஸ முதலிகே)
  • வெற்றி மழை (புதினம், சிங்கள மூலம்: குணரத்தின ஏக்கநாயக)[2]
  • கங்கைக் கரைக் காடு (புதினம், சிங்கள மூலம்: சோமவீர சேனாநாயக்க)[2]

விருதுகள் பட்டங்கள்

  • 'ஒளி பரவுகிறது' புதினத்திற்காகவும், 'உதயபுரம்' என்ற சிறுவர் இலக்கியத்திற்காகவும் தேசிய சாகித்திய விருதுகளை முறையே 1995 இலும் 2005 இலும் பெற்றுள்ளார்.
  • முஸ்லிம் கலாசார அலுவல்கள் அமைச்சு இவருக்கு ""இலக்கிய வித்தகர்"" எனும் பட்டம் அளித்துள்ளது.
  • இலங்கை கலாசார அலுவல்கள் அமைச்சு "கலாபூஷணம்" பட்டம் வழங்கியுள்ளது.
  • 'முட்டைக் கோப்பி' என்ற சிறுகதைத்தொகுதிக்காக யாழ் இலக்கியவட்டம் - இலங்கை இலக்கியப் பேரவையின் 2010ம் ஆண்டுக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.

இவரை பற்றிய ஆய்வு

  • பேராதனை பல்கலைக்கழகத்தில் 2004-2005 ஆண்டுக்கான தமிழ்ச் சிறப்பு பட்ட ஆய்வுக்காக செல்வி எஸ். றிம்ஸா "திக்குவல்லை கமாலின் சிறுகதைகள்" எனும் தலைப்பில் ஆய்வு செய்துள்ளார்.

மேற்கோள்கள்

  1. எம். கே. முருகானந்தன் (சூன் 2010). "திக்குவல்லை கமால் மணிவிழா". பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2018.
  2. 2.0 2.1 "அரச இலக்கிய விருது வழங்கல் 2015 விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நூல்கள்". கலாசார அலுவல்கள் திணைக்களம். Archived from the original on 2022-04-10. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2018.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திக்குவல்லை_கமால்&oldid=15327" இருந்து மீள்விக்கப்பட்டது