தினபதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தினபதி
வகைதமிழ் நாளிதழ்
உரிமையாளர்(கள்)இண்டிபென்டன்ட் நியூஸ்பேப்பர்சு லிமிட்டெட்
நிறுவியது1964 (1964)
மொழிதமிழ்
சகோதர செய்தித்தாள்கள்
நாடுஇலங்கை
நகரம்கொழும்பு

தினபதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவந்த ஒரு நாளிதழ்.[1] சுயாதீன பத்திரிகா சமாசத்தால் (எம். டி. குணசேனா நிறுவனம்) வெளியிடப்பட்டது..[1] 1964 முதல் எஸ். ரி. சிவநாயகத்தை ஆசிரியராகக் கொண்டு இது வெளிவந்தது. புதிய அழகியல் உத்திகளைக் கொண்ட பத்திரிகையாக இது வெளிவந்தது. தினபதி தினசரியின் வாரவெளியீடாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிந்தாமணி வெளியிடப்பட்டது. இராஜ அரியரத்தினம் இதன் ஆசிரியராக இருந்தார்.

1966 ஆம் ஆண்டில் இதன் விற்பனை 11,000 ஆக இருந்தது.[1] 1970 இல் சராசரியாக 12,100 உம், 1973 இல் 31,337 உம் ஆக இருந்தது.[2][3]

1973/74 ஆம் ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் பத்திரிகைகள் அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசை விமரிசித்து வந்தன.[4] 1974 ஏப்ரல் 19 இல் சிறிமாவோ அரசு அவசரகாலச் சட்டத்தின் மூலம் தினபதி உட்பட இந்நிறுவனத்தின் அனைத்து மொழிப் பத்திரிகைகளையும் தடை செய்து அச்சு நிறுவனதையும் மூடியது.[5][6][7][8][9] 1977 மார்ச் 30 இல் இந்நிறுவனம் தனது பத்திரிகைகளை மீண்டும் வெளியிட ஆரம்பித்தது.[5][6][10] ஆனாலும், தமிழ் மொழிப் பத்திரிகைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. 1990 டிசம்பர் 26 இல் நிதி நெருக்கடியினால் இந்நிறுவனம் மீண்டும் மூடப்பட்டது.[11][12]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Ceylon Year Book 1968 (PDF). Department of Census and Statistics, Ceylon. pp. 317–318.
  2. வில்சன், அ. ஜெ. (2010). Electoral Politics in an Emergent State: The Ceylon General Election of May 1970. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-15311-9.
  3. Sri Lanka Year Book 1975 (PDF). Department of Census and Statistics, Sri Lanka. pp. 349–351.
  4. de Silva, K. M. (1981). A History of Sri Lanka. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 547. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-20.
  5. 5.0 5.1 Sirisena, Priyalal (5 நவம்பர் 2003). "‘Irida Dawasa’ publication restrained". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2015-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222111939/http://www.island.lk/2003/11/05/news12.html. 
  6. 6.0 6.1 Marasinghe, Sandasen (4 நவம்பர் 2003). "Dawasa restrained from publication". டெய்லிநியூசு. http://archives.dailynews.lk/2003/11/04/new19.html. 
  7. Sri Lanka Year Book 1977 (PDF). Department of Census and Statistics, Sri Lanka. pp. 365–366.
  8. Richardson, John (2005). Paradise Poisoned: Learning about Conflict, Terrorism, and Development from Sri Lanka's Civil Wars. International Center for Ethnic Studies. p. 362. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-580-094-4.
  9. Rajasingham, K. T. "Chapter 23: Srimavo's constitutional promiscuity". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-02-13. பார்க்கப்பட்ட நாள் 2015-12-20.
  10. "Another Sinhala newspaper launched". சண்டே டைம்சு. 10 ஆகத்து 2008. http://www.sundaytimes.lk/080810/FunDay/fundaytimes_2.html. 
  11. Karunanayake, Nandana (2008). "18: Sri Lanka". In Banerjee, Indrajit; Logan, Stephen (eds.). Asian Communication Handbook 2008. Singapore: Asian Media Information and Communication Centre, Wee Kim Wee School of Communication and Information, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். pp. 446–460. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789814136105.
  12. "Special events which took place in history from December 20 - December 26". சண்டே ஒப்சேர்வர். 20 டிசம்பர் 2009 இம் மூலத்தில் இருந்து 2015-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222130711/http://www.sundayobserver.lk/2009/12/20/jun01.asp. 
"https://tamilar.wiki/index.php?title=தினபதி&oldid=15464" இருந்து மீள்விக்கப்பட்டது