டார்லிங் (திரைப்படம்)

டார்லிங் என்பது 2015ஆம் ஆண்டில் அறிமுக இயக்குநரான சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இந்த திகில் நகைச்சுவைத் திரைப்படமான இத்திரைப்படத்தினை அல்லு அரவிந்த், கே. இ. ஞானவேல் ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஜி. வி. பிரகாஷ்குமார், நிக்கி கல்ரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் 2013 ஆவது ஆண்டில் தெலுங்கில் வெளியான பிரேம கதை சித்திரம் திரைப்படத்தின் மறுவாக்கமாகும். 2015 சனவரி 15 அன்று வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.

டார்லிங்
இயக்கம்சாம் ஆண்டன்
தயாரிப்புஅல்லு அரவிந்த்
கே. இ. ஞானவேல் ராஜா
கதைமாருதி தாசரி
சாம் ஆண்டன்
இசைஜி. வி. பிரகாஷ்குமார்
நடிப்புஜி. வி. பிரகாஷ்குமார்
நிக்கி கல்ரானி
கருணாஸ்
பாலா சரவணன்
ஒளிப்பதிவுகிருஷ்ணன் வசந்த்
படத்தொகுப்புரூபன்
கலையகம்கீதா ஆர்ட்ஸ்
ஸ்டுடியோ கிரீன்
விநியோகம்டிரீம் பேக்டரி
வெளியீடு15 சனவரி 2015 (2015-01-15)
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு10 கோடி (US$1.3 மில்லியன்)
மொத்த வருவாய்32 கோடி (US$4.0 மில்லியன்)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=டார்லிங்_(திரைப்படம்)&oldid=33698" இருந்து மீள்விக்கப்பட்டது