ஜெயம் கொண்டான் (திரைப்படம்)

ஜெயம் கொண்டான் 2008 ம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக வினய், பாவனா, லேகா, விவேக், நிழல்கள் இரவி, சந்தானம், கிசோர் எனபவர்கள் நடித்துள்ளனர். கண்ணன் இத்திரைப்படத்தினை இயக்கியுள்ளார், இது இவரது முதலாவது படமாகும்.

ஜெயம் கொண்டான்
இயக்கம்கண்ணன்
தயாரிப்புடி. ஜி.தியாகராஜன்
கதைகண்ணன்
இசைவித்தியாசாகர்
நடிப்புவினய்,பாவனா,
லேகா, கிசோர் விவேக்,
சந்தானம்,
நிழல்கள் இரவி
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
வெளியீடுஆகஸ்டு 29, 2008
மொழிதமிழ்

கதை

வார்ப்புரு:Spoiler தந்தையின் மரணத்திற்கு வரமுடியாததால் மனம் வெறுத்த அவரின் ஒரே பிள்ளையான அர்ஜுன் இலண்டனில் தான் பார்த்த வேலையை உதறிவிட்டு இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கி தொழில் செய்ய வருகிறார். தியாகராய நகரில் 3 கிரவுண்ட் நிலம் உள்ள வீட்டை வாங்க முடிவாகி அதற்கு முன்பணம் கொடுப்பதற்காக தன் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடிவு செய்கிறார். ஆனால் அதில் பதினைந்தாயிரந்து சொச்சம் ரூபாய் மட்டுமே இருப்பதை அறிந்து அதிர்ச்சியாகிறார். அப்போது தன் தந்தைக்கு இன்னொரு மனைவி சந்தரிக்கா இருப்பதும் அங்கு அவருக்கு 21 வயது நிரம்பிய பெண் பிருந்தா இருப்பதும் தெரியவருகிறது. பிருந்தா அமெரிக்காவிலுள்ள மா.தொ.ப (MIT) இடம் கிடைத்திருப்பதால் பணத்திற்காக திருமங்கல வீட்டை விற்க முடிவெடுக்கிறார். அதை அர்ஜூன் தடுத்துவிடுகிறார். அர்ஜூன் அனுப்பிய பணத்தில் திருமங்கலத்தில் அவர் தந்தை பெரிய வீடு ஒன்றை வாங்கயிருப்பது தெரிய வருகிறது அந்த நிலத்தின் பத்திரம் தந்தையின் இன்னொரு குடும்பத்திடம் இருப்பது தெரியவருகிறது. அவ்வீட்டை விற்க அர்ஜுன் திருமங்கலம் வருகிறார் அவ்வீட்டிலுள்ள மிளகாய் மண்டி வியாபாரி துரை ராஜிடம் (நிழல்கள் இரவி) வீட்டை காலி பண்ண சொல்கிறார். அவ்வீட்டை விற்க பிருந்தா குணா மூலம் முயல்கிறார் அதை அர்ஜுன் தடுக்கும் போது குணாவின் மனைவி பூங்கொடி எதிர்பாரால் அச்சண்டையால் அங்கு இறக்கிறார். இதனால் குணாவிற்கு பயந்து அர்ஜுன் மற்றும் பிருந்தா சென்னைக்கு வந்துவிடுகிறார்கள். பூங்கொடி இறக்க காரணமான அர்ஜுனை தேடி குணா சென்னைக்கு வருகிறார். அர்ஜுனுக்கு அவர் அப்பாவையும் பிருந்தாவையும் வெறுக்க வேண்டாம் என்று கடிதம் அனுப்பிவிட்டு சத்திரிக்கா இறந்துவிடுகிறார். தன் வாடகை வீட்டை காலி செய்துவிட்டு பிருந்தாவின் வீட்டில் அர்ஜூன் தங்குகிறார். அர்ஜுனை தன் அண்ணன் என ஏற்க பிருந்தா மறுத்து விடுதோடு அவர் செய்யும் எந்த உதவியையும் ஏற்க மறுத்துவிடுகிறார். பிருந்தா அமெரிக்காவிற்கு படிக்க பண உதவியை அண்ணபூரனி மூலம் அர்ஜூன் செய்கிறார். அர்ஜூன் இலண்டன் செல்ல வானூர்தி நிலையம் செல்லும் போது குணாவின் ஆட்கள் பிருந்தாவை பிடித்துகொள்கிறார்கள். அர்ஜூன் குணாவின் ஆட்களிடமிருந்து பிருந்தாவை காப்பாற்றுகிறார்.

நடிகர்கள்

நடிகர்கள் பாத்திரம்
வினய் அர்ஜுன் சேகர்
பாவனா அண்ணபூரனி (துரை ராஜின் மகள்)
லேகா பிருந்தா (அர்ஜுனின் தந்தையின் சட்டபூர்வமற்ற திருமணத்தின் மூலம் பிறந்த மகள்)
கிசோர் குணா
விவேக் கோபால்
வசுந்தரா பூங்கொடி
சந்தானம் பவானி (துரை ராஜின் வீட்டில் இருக்கும் மிளகாய் தரகர்)
நிழல்கள் இரவி துரை ராஜ்
மாளவிகா அவினாசு சந்திரிக்கா (பிருந்தாவின் தாய்)

பாடல்கள்

3 சூன் 2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்களை வாலி, மற்றும் பா. விஜய் ஆகியோர் எழுதியுள்ளனர்.

எண் பாடல் பாடகர்கள்
1 அடைமழைக்காலம் பென்னி தயாள்
2 அடி கூடவா பாம்பே ஜெயஸ்ரீ, கிரிஷ்
3 நான் வரைந்துவைத்த ஹரிஷ் ராகவேந்திரா
4 ஒரே ஒரு நாள் பென்னி தயாள், சுசித்ரா, குணா
5 சுற்றிவரும் பூமிi சுஜாதா மோகன்
6 உல்லாச உலகம் ஹரிசரண்

வெளி இணைப்புக்கள்