சுருதி ஹாசன்

சுருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.[1]

சுருதிஹாசன்
சுருதிஹாசன்.jpg
2017
பிறப்பு சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்
பெற்றோர்

இளமைப்பருவம்

சுருதிஹாசன் இல் சென்னை நகரில் பிறந்தார்.[2] சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார்.[3] பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.[4]

கலைத்துறை

பாடகர்

சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும்[5], ஹே ராம் (தமிழ் மற்றும் இந்தி), என் மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.

நடிப்பு

இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹே ராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது.[6] 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.

இசையமைப்பு

2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.[7]

பாடிய பாடல்கள்

ஆண்டு பாடல் படம்
1992 போற்றிப் பாடடி பெண்ணே தேவர் மகன்
1997 சாகோ கோரி சாச்சி 420
2000 ராம் ராம் ஹே ராம்
2002 ரோட்டோர பாட்டுச்சத்தம் கேட்குதா என் மன வானில்
2008 அடியே கொல்லுதே வாரணம் ஆயிரம்
2009 ஆசுமா லக்
உன்னைப்போல் ஒருவன் உன்னைப்போல் ஒருவன்
வானம் எல்லை
அல்லா சானே
அல்லா சானே ஈநாடு
ஈநாடு
நிங்கி ஹட்டு
2010 செம்மொழியான தமிழ் மொழியாம்
நெனபிடு நெனபிடு (Nenapidu Nenapidu) ப்ரித்வி
பெயொண்ட் த ச்னகே (Beyond The Snak) ஹிச்ச்ஸ் (Hisss)
2011 எவன் இவன் உதயன்
எல்லே லாமா ஏழாம் அறிவு
ஸ்ரீசைதன்யா ஜூனியர் கல்லூரி ஓ மை பிரண்ட்
2012 சொக்குபொடி முப்பொழுதும் உன் கற்பனைகள்
கண்ணழகா காலழகா 3
தன் யே மேரா 3 (ஹிந்தி)
கண்ணுலதா காலுலதா 3 (தெலுங்கு)
2013 அல்விட டீ டே (D Day)
ஷட் அப் யுவர் மௌத் என்னமோ ஏதோ[8]
2014 சடப் யுவர் மவுத் என்னமோ ஏதோ
டவுன் டவுன் ரேஸ் குரம்
ஜங்சன் லோ ஆகடு (தெலுங்கு)
உன் விழிகளில் மான் கராத்தே
2015 ஜோகனியா டேவர்
ஸ்டீரியோபோனிக் சமிதாப்
ஏண்டி ஏண்டி புலி
டோன்ட் மெஸ் வேதாளம்
2016 கிங் காங் இது நம்ம ஆளு
2019 டப்பாவ கிளிச்சான் எல். கே. ஜி
காமோஷி காமோஷி
கடாரம் கொண்டான் கடாரம் கொண்டான்

நடித்த படங்கள்

ஆண்டு படம் கதா பாத்திரத்தின் பெயர் மொழி குறிப்புகள்
2000 ஹே ராம் வல்லபாய் பட்டேல் மகள் தமிழ்
இந்தி
2009 லக் ஆயிஷா குமார்,
நடாஷா குமார்
இந்தி
2011 அனகனாக ஒ தீறுடு பிரியா தெலுங்கு
தில் தோ பச்சா ஹை ஜி நிக்கி நரங்க் இந்தி
ஏழாம் அறிவு சுபா ஸ்ரீனிவாசன் தமிழ் வெற்றி:- சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரை:- சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
ஓ மை ஃப்ரிஎண்ட் ஸ்ரீ சந்தன தெலுங்கு
2012 3 ஜனணி தமிழ் ஆசியாவிசியன் சிறப்பான திரைப்பட விருது-தமிழ்[9]
பரிந்துரை:- சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
காப்பர் சிங் பாக்யலக்ஷ்மி தெலுங்கு
2013 ராமையா வாஸ்தவையா சோனா இந்தி
வலுப்பு சுருதி தெலுங்கு
டீ டே சுரையா இந்தி
இராமய்யா வாஸ்தவாய்யா அமுல்லு தெலுங்கு
2014 யெவடு தெலுங்கு
ரேஸ் குர்ரம் தெலுங்கு
ஆகடு தெலுங்கு சிறப்பு தோற்றம்
பூஜை திவ்யா தமிழ்
2015 தேவர் இந்தி சிறப்பு தோற்றம்
காப்பர் இஸ் பேக் சுருதி இந்தி
வெல்‌கம் பேக் ரஞ்சனா இந்தி
ஸ்ரிமந்துடு சருசீல தெலுங்கு
புலி பவழமல்லி தமிழ்
வேதாளம் சுவேதா தமிழ்
2016 ராக்கி ஹேண்ட்சம் ருக்க்ஷிதா இந்தி
பிரேமம் சித்தாரா தெலுங்கு
2017 சிங்கம் 3 வித்யா தமிழ்
கட்டமராயுடு அவந்திகா தெலுங்கு
பெகன் கோகி டெரி பின்னி இந்தி

மேற்கோள்கள்

  1. Rajeesh, Sangeetha (2003-10-28). "High Five with Shruti Haasan". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2013-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130928191543/http://www.hindu.com/rp/2007/10/28/stories/2007102850020100.htm. பார்த்த நாள்: 2007-12-20. 
  2. "Shruti K. Haasan". ஐ.எம்.டி.பி இணையத்தளம். 2007-12-20. http://www.imdb.com/name/nm1599046/. பார்த்த நாள்: 2007-12-20. 
  3. "Artistic Lineage…". Magna Magazine. 2007-07-25 இம் மூலத்தில் இருந்து 2007-12-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071212115156/http://magnamags.com/magna_savvy/node/581. பார்த்த நாள்: 2007-12-20. 
  4. Prakash, Chitra (2007-12-14). "Kamal Haasan's daughter to make film debut opposite Madhavan". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/redir.aspx?ID=aa5fb480-b146-473d-9be4-c55fb9b78efe. பார்த்த நாள்: 2007-12-20. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. Sreenivasan, P. (2007-11-27). "Daughter to follow Kamal Haasan in his footsteps". ApunkaChoice. http://www.apunkachoice.com/scoop/downsouth/tamil/20071127-0.html. பார்த்த நாள்: 2007-12-21. 
  6. "Shruti's Debut". Behindwoods.com. 2008-06-24. http://www.behindwoods.com/tamil-movie-news-1/jun-08-04/shruti-haasan-26-06-08.html. பார்த்த நாள்: 2008-06-24. 
  7. Narayanan, Sharadha (2009-04-11). "At Home in Chennai". Expressbuzz.com. http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=At+home+only+in+Chennai&artid=W0Zl3gmqnZQ=&SectionID=sPqk7hE5Bqg=&MainSectionID=ngGbWGz5Z14=&SectionName=qREFy151z8Q5CNV7tjhyLw==&SEO=. பார்த்த நாள்: 2009-04-12. 
  8. "Shruthi sings for Imman". Filmysouth.com. Aug 2, 2013 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 13, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130913084630/http://www.filmysouth.com/Telugu/article_MovieNews/73/Shruthi-sings-for-Imman. பார்த்த நாள்: Aug 25, 2013. 
  9. "South Indian movie stars honoured in run-up to awards ceremony " பரணிடப்பட்டது 2012-11-10 at the வந்தவழி இயந்திரம். The Gulf Today. 23 October 2012. Retrieved 11 November 2012.

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/index.php?title=சுருதி_ஹாசன்&oldid=8027" இருந்து மீள்விக்கப்பட்டது