சுந்தர் சி

சுந்தர் சி (English: Sundar C, பிறப்பு: 3 சனவரி 1966) தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகருமாவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர், தமிழில் 24 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தலைநகரம் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.[1] ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த இவர் முறை மாமன் என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். இவருடைய பல படங்களில் கதாநாயகியின் பெயர் இந்து என்பதாகும். உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இவருடைய இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. மேட்டுக்குடி, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு போன்றவை இவர் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படங்கள் ஆகும்.

சுந்தர் சி
Sundar C at Muthina Kathirikai Audio Launch.jpg
சுந்தர் சி
பிறப்புசுந்தரவேல் சிதம்பரம் பிள்ளை
3 சனவரி 1966 (1966-01-03) (அகவை 58)
இந்தியா ஈரோடு, தமிழ்நாடு
பணிநடிகர்,
திரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1995 – தற்போது வரை
பெற்றோர்சிதம்பரம் பிள்ளை
தெய்வானை அம்மாள்
வாழ்க்கைத்
துணை
குஷ்பு

திரைப்படத்துறை

இயக்குநர்

1995-ம் ஆண்டு முறை மாமன் திரைப்படம் மூலமாக சுந்தர் சி. அறிமுகமானார், அதன்பிறகு முறை மாப்பிள்ளை, என்ற அருண் விஜய்யுடைய முதல் படத்தை இயக்கினார். ரஜினிகாந்த்டைய அருணாச்சலம், கமல்ஹாசனுடைய அன்பே சிவம் மட்டுமின்றி நடிகர்கள் கார்த்திக், பிரசாந்த், அர்ஜூன், சரத்குமார், மற்றும் அஜித்குமார் ஆகியோருடைய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

நடிகர்

2006-ம் ஆண்டு தன்னுடைய இயக்குநர் பணியை விடுத்து, தலை நகரம் திரைப்படம் மூலமாக நடிகரானார். ஆரம்பத்தில் சரியாக போகாவிட்டாலும், பின்னர் இத்திரைப்படம் மிகப் பெரும் வெற்றியடைந்தது. 2007-ம் ஆண்டு வெளிவந்த வீராப்பு திரைப்படமும் 2008-ம் ஆண்டு சக்தி சிதம்பரத்தின் நடிப்பில் வெளியான சண்டை திரைப்படமும் வெற்றி அடைந்தன. அயினும் அதனைத் தொடர்ந்து வெளியான திரைப்படங்களான ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ உள்ளிட்டவைகள் ஓரளவே ஓட ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, நகரம் உள்ளிட்டவை படுதோல்வியைத் தழுவின. தற்போது இவர் நடிக்கும் திரைப்படமான முரட்டுக் காளை ஏற்கனவே 1980-களில் வெளியான திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.[2]

சின்னத்திரை அறிமுகம்

2017-ம் ஆண்டில், தென்னிந்திய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் "நந்தினி" என்று தொடர் அவரின் மனைவி குஷ்பு அவர்களோடு இணைந்து தயாரித்தார்.[3]

திரைப்படங்கள்

நடிகராக

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம்
1995 முறை மாமன் பஞ்சாயத்து காட்சியில் சிறப்புத் தோற்றம்
1997 அருணாச்சலம் நிருபராக சிங்கமொன்று பாடலில்
2006 தலை நகரம் ரைட்டு
2007 வீராப்பு பாண்டி வேதக்கண்ணு
2008 சண்டை கதிரேசன்
2008 ஆயுதம் செய்வோம் சைதை சத்யா
2009 பெருமாள் பெருமாள்
2009 தீ சாரதி
2009 ஐந்தாம் படை பிரபாகரன்
2010 குரு சிஷ்யன் ஈட்டி
2010 வாடா வெற்றிவேல்
2010 நகரம் மறுபக்கம் செல்வம்
2011 முரட்டு காளை

இயக்குநராக

ஆண்டு திரைப்படம் நடிப்பு குறிப்புகள்
2014 அரண்மனை வினய், சந்தானம், சுந்தர் சி, ஹன்சிகா மோட்வானி, ஆண்ட்ரியா, லட்சுமி ராய்
2013 கலகலப்பு - 2 சிவா, விமல், அஞ்சலி, ஓவியா அறிவிப்பு வந்துள்ளது
2013 மத கஜ ராஜா விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், மணிவண்ணன்
2012 கலகலப்பு சிவா, விமல், அஞ்சலி, ஓவியா, சந்தானம்
2010 நகரம் மறுபக்கம் சுந்தர் சி., அனுயா
2006 ரெண்டு மாதவன், ரீமா சென், அனுஷ்கா செட்டி
2005 லண்டன் பிரசாந்த், வடிவேலு, மணிவண்ணன், அங்கிதா, மும்தாஜ்
2005 சின்னா அர்ஜூன், சினேகா, விக்ரமாதித்யா
2005 தக திமி தா யுவ கிருஷ்ணா, விவேக், அங்கிதா, தேஜா சிறீ
2004 கிரி அர்ஜூன், வடிவேலு, ரீமா சென், திவ்யா ஸ்பான்டா
2003 வின்னர் பிரசாந்த், வடிவேலு, கிரண்
2003 அன்பே சிவம் கமல்ஹாசன், மாதவன், கிரண்
2002 அழகான நாட்கள் கார்த்திக், ரம்பா, மும்தாஜ்
2001 ரிஷி சரத் குமார், மீனா, சங்கவி
2001 உள்ளம் கொள்ளை போகுதே பிரபு தேவா, விவேக், அஞ்சலா சாவேரி, கார்த்திக்
2000 கண்ணன் வருவான் கார்த்திக், திவ்யா உன்னி
2000 உன்னைக் கண் தேடுதே சத்யராஜ், குஷ்பூ, லிவிங்க்ஸ்டன்
2000 அழகர்சாமி சத்யராஜ், ரோஜா
1999 உனக்காக எல்லாம் உனக்காக கார்த்திக், கவுண்டமணி, விவேக், ரம்பா
1999 உன்னைத் தேடி அஜித் குமார், மாளவிகா, சுவாதி
1999 சுயம்வரம் சத்யராஜ், செந்தில், கார்த்திக், ரம்பா, பிரபு தேவா
1998 நாம் இருவர் நமக்கு இருவர் பிரபு தேவா, மணிவன்னன், செந்தில் மீனா, மகேஷ்வரி
1997 அருணாச்சலம் ரஜினிகாந்த், செந்தில், சௌந்தர்யா, ரம்பா
1997 ஜானகிராமன் சரத் குமார், நக்மா, கவுண்டமணி & செந்தில், மணிவன்னன், ரம்பா
1996 மேட்டுக்குடி கார்த்திக், கவுண்டமணி, செந்தில், நக்மா
1996 உள்ளத்தை அள்ளித்தா கார்த்திக், கவுண்டமணி, செந்தில், ரம்பா
1995 முறை மாமன் ஜெயராம், கவுண்டமணி, செந்தில், குஷ்பூ
1995 முறை மாப்பிள்ளை அருண் விஜய், கிருத்திகா

பாடகராக

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் குறிப்புகள்
2010 குரு சிஷ்யன் "சுப்பையா சுப்பையா" தீனா சத்யராஜ் உடன் இணைந்து பாடிய பாடல்
2008 சண்டை "வாடி என் கப்பக்கிழங்கு" தீனா

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:சுந்தர் சி

"https://tamilar.wiki/index.php?title=சுந்தர்_சி&oldid=21009" இருந்து மீள்விக்கப்பட்டது