சி3 (திரைப்படம்)
சிங்கம் 3 (Singam 3) ஹரி இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 9 அன்று வெளிவந்த ஒரு இந்திய அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும்.[3] இப்படம், 2013 ஆவது ஆண்டில் வெளியான சிங்கம் 2 திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும், சிங்கம் திரைப்பட வரிசையின் மூன்றாவது பகுதியாகவும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் சூர்யா, அனுசுக்கா செட்டி, சுருதி ஹாசன், ஹன்சிகா மோட்வானி, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[3] சிங்கம் வரிசையின் முதல் இரு பகுதிகளுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு பதிலாக ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 09 ஆம் திகதி வெளியானது.[4]
சிங்கம் 3 | |
---|---|
Theatricle release poster | |
இயக்கம் | ஹரி |
தயாரிப்பு | ஞானவேல் ராஜா |
கதை | ஹரி |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | சூர்யா அனுசுக்கா செட்டி ஹன்சிகா மோட்வானி |
ஒளிப்பதிவு | பிரியன் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | ஸ்டுடியோ கிரீன் ஆத்நாத் ஆர்ட்ஸ் |
விநியோகம் | ஈராஸ் இன்டர்நேசனல்[1], பென் மூவீஸ் |
வெளியீடு | 9 பெப்ரவரி 2017 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹ 85 கோடி |
மொத்த வருவாய் | ₹ 122.64 கோடி[2] |
நடிகர்கள்
- சூர்யா - துரை சிங்கம்
- அனுசுக்கா செட்டி - காவியா
- சுருதி ஹாசன் - அக்னி
- ராதாரவி - துரை சிங்கத்தின் தந்தை
- நாசர் - காவியாவின் தந்தை
- சுமித்ரா - துரை சிங்கத்தின் தாய்
- ஜானகி சபேஷ் - காவியாவின் தாய்
- டெல்லி குமார் - காவியாவின் தாத்தா
- யுவராணி - துரை சிங்கத்தின் சகோதரி
- ராதிகா சரத்குமார்[5]
- கிரிஷ்
- நிதின் சத்யா[6]
- சூரி
- ரோபோ சங்கர்
- சாம்ஸ்
பாடல்கள்
மேற்கோள்கள்
- ↑ "Eros’ 2016 line-up has over 65 films in multiple languages". The Indian Express. 25 January 2016. http://indianexpress.com/article/entertainment/bollywood/eross-2016-line-up-has-over-65-films-in-multiple-languages/. பார்த்த நாள்: 30 May 2016.
- ↑ "Singam 3 box-office Suriya's film Rs 250 crore boxoffice king in Tamil Singam join's 200 crore club". IBTimes. 14 February 2017. http://www.ibtimes.co.in/singam-3-si3-s3-3rd-day-box-office-collection-suriyas-movie-crosses-rs-50-crore-saturday-715761.
- ↑ 3.0 3.1 "Singam 3 is now officially called S3. Here are the new posters of the Suriya-starrer". India Today. 7 January 2016. http://indiatoday.intoday.in/story/singam-3-is-now-officially-called-s3-here-are-the-new-poster-of-the-suriya-starrer/1/564623.html.
- ↑ "சூர்யாவின் ‘சி 3’ அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!". RoyalTamilan. 25 January 2017 இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202023430/http://royaltamilan.net/tamil-cinema-news/surya-singam-3-movie-release-date-official.html.
- ↑ http://www.ibtimes.co.in/raadhika-sarath-kumar-joins-s3-singam-3-shoots-have-her-issues-suriyas-family-been-resolved-663620
- ↑ http://www.deccanchronicle.com/entertainment/kollywood/080616/choosing-roles-with-substance.html