சிஜோய் வர்கீஸ்

சிஜோய் வர்கீஸ் (Sijoy Varghese, பிறப்பு 6 மார்ச் 1975) என்பவர் ஓர் இந்திய நடிகர் மற்றும் விளம்பரத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 20 ஆண்டுகளாக விளம்பரம் மற்றும் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு நடிகராக இவர் மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த குறிப்பிடத்தக்க சில படங்களாக பெங்களூர் டேய்ஸ், அவதாரம், ஜேம்ஸ் & ஆலிஸ், ஆதி, இட்டிமணி: மேட் இன் சீனா போன்றவை உள்ளன.[1][2]

சிஜோய் வர்கீஸ்
பிறப்புசிஜோய் வர்கீஸ்
6 மார்ச்சு 1975 (1975-03-06) (அகவை 49)
கேரளம், இடப்பள்ளி
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்சேக்ரட் ஹார்ட் கல்லூரி, தேவரா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1994 – தற்போது வரை
பெற்றோர்
  • சி. வர்கீஸ் கெலம்பரம்பில்
  • லீலாமா வர்கீஸ்
வாழ்க்கைத்
துணை
டெஸ்ஸி ரபேல் (தி. 1999)
பிள்ளைகள்4

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் கொச்சியின் எடப்பள்ளியில் (மறைந்த) சி. வர்கீஸ் கெலம்பரம்பில் (ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்) மற்றும் (மறைந்த) லீலாமா வர்கீஸ் (ஆசிரியர்) ஆகியோருக்குப் பிறந்தார். தேவராவின் சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் படித்தார். இவர் டெஸ்ஸி ரபேலை 1999 இல் மணந்தார். தம்பதியருக்கு ஆதித்யா, ஆமி, அன்னி, அந்தோணி ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

தொழில்

இளம் உதவி இயக்குநராகத் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இந்தியாவின் முன்னணி விளம்பரத் திரைப்பட நிறுவனங்களுடன் பணியாற்றிய அதிர்ஷ்டசாலி. 2005 ஆம் ஆண்டில் இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "டி.வி.சி பேக்டரி" என்ற ஒன்றை உருவாக்கினார்.[3][not in citation given] இது இப்போது இந்தியாவிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் மிகவும் நம்பகமான நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. மேலும் இவர் மலையாள படங்களான பேங்களூர் டேஸ், அவதாரம், ஜேம்ஸ் & ஆலிஸ், ஆதி, இட்டி மானி மேட் இன் சீனா போன்ற குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்திய விளம்பரப்பட தயாரிப்பாளர்களின் (ஐஏஎம்) கேரள பகுதியின் தற்போதைய பொதுச் செயலாளராக உள்ளார்.

திரைப்படவியல்

விசை
  இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு படம் பாத்திரம் இயக்குநர் மொழி குறிப்பு
2013 ஏபிசிடி ஆணையர் மார்ட்டின் பிரகாட் மலையாளம்
2013 திர[4] உள்துறை அமைச்சர் அலெக்ஸ் வினீத் சீனிவாசன் மலையாளம்
2013 5 சுந்தரிகள் சமீர் தாஹிர் மலையாளம் கதை & திரைக்கதை எழுத்தாளர் - இஷா
2014 பெங்களூர் டேய்ஸ் பயிற்சியாளர் சாக் அஞ்சலி மேனன் மலையாளம்
2014 அவதாரம்[5] ஏ.சி.பி கௌதம் விஸ்வநாத் ஜோஷி மலையாளம்
2014 ராஜாதிராஜா குண்டர் தலைவன் சந்த்ரு அஜய் வாசுதேவ் மலையாளம்
2015 அயல் நிஜனல்ல மனாஃப் வினீத் குமார் மலையாளம்
2015 ஜம்னா பியாரி வாசு தாமஸ் செபாஸ்டியன் மலையாளம்
2015 பெங்களூர் நாட்கள் பயிற்சியாளர் சாக் பாஸ்கர் தமிழ்
2016 ஜேம்ஸ் & ஆலிஸ் செயிண் பீட்டர் சுஜித் வாசுதேவ் மலையாளம் 19 வது ஆசியநெட் திரைப்பட விருதுகள் - சிறப்பு ஜூரி விருது
ஆசியாவிஷன் விருதுகள் - சிறந்த துணை நடிகர்
2016 முன்னோடி ஏ.சி.பி சௌந்தர்பாண்டியன் எஸ்.பி.டி.ஏ. குமார் தமிழ்
2016 ஜெமினி டாக்டர் விஜய்வர்மா பிகேபி மலையாளம்
2017 தரங்கம் கிறிஸ்டோபர் லூக்கா டொமினிக் அருண் மலையாளம்
2017 வேலையில்லா பட்டதாரி 2 வசுந்தராவின் தந்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழ்
விஐபி 2 தெலுங்கு
2017 புள்ளிக்கரன் ஸ்டாரா அந்தோணி ஷியாம்தர் மலையாளம்
2017 எ ஜெண்டில்மேன் ராமசந்திரவாவ் ஐ. பி. எஸ் ராஜ் & டி. கே இந்தி
2017 ஆடு 2 கேசவ் மாதவ் ஐ. பி. எஸ் மிதுன் மானுவர் தாமஸ் மலையாளம்
2018 திவான்ஜிமூலா கிராண்ட் பிரிக்ஸ் பைக் ரைடர் கிறிஸ்டோ அனில் ராதாகிருஷ்ணன் மேனன் மலையாளம்
2018 ஆதி சித்தார்த் ஜீது ஜோசப் மலையாளம்
2018 பரேல் வர்கி ஷரத் சந்தீத் மலையாளம்
2018 ஆபிரகாமிண்டே சந்ததிகள் ஜோசப் எஸ்தப்பன் ஷாஜி பதூர் மலையாளம்
2018 அமர் அக்பர் ஆண்டணி சஞ்சை ஸ்ரீனு விட்டலா தெலுங்கு
2019 மைக்கேல் ஆபிராம் ஹனீப் அடேனி மலையாளம்
2019 நீயும் நிஜனும் கிசான் ஏ. கே. சாஜன் மலையாளம்
2019 தி காம்பினோஸ் டி.எஸ்.பி பிரதீப் குமார் கிரிஷ் பானிகர் மட்டடா மலையாளம்
2019 லூசிபர் பி.ஆர் மேனேஜர் பிரித்விராஜ் சுகுமாரன் மலையாளம் விருந்தினர் தோற்றம்
2019 ஓர்மாயில் ஓரு சிசிரம் சாஹிப் விவேக் ஆர்யா மலையாளம்
2019 தி கேம்லர் கொச்சு லோனா டாம் எம்மாட்டி மலையாளம்
2019 இட்டிமானி: மேட் இன் சைனா அலெக்ஸ் பிளாமூட்டில் ஜிபி ஜோஜு மலையாளம்
2020 தெளிவு ஐசக் எம்.ஏ. நிஷாத் மலையாளம்
2020 கார்டியன் நந்தகுமார் ஐ.பி.எஸ் சதீஷ் பால் மலையாளம் ஒடிடி வெளியீடு
2021 கோலாம்பி சஞ்சய் தரகன் டி.கே.ராஜீவ் குமார் மலையாளம் விரைவில் வெளியாகவுள்ளது
2021 லால் பாக் டாம் பிரசாந்த் முரளி மலையாளம் விரைவில் வெளியாகவுள்ளது

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிஜோய்_வர்கீஸ்&oldid=21801" இருந்து மீள்விக்கப்பட்டது