மைக்கேல் (2019 திரைப்படம்)
மைக்கேல் (2019 திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | கனிப் அதானி |
தயாரிப்பு | ஆன்டோ சோசப் |
கதை | கனிப் அதானி |
இசை | கோபி சுந்தர் |
நடிப்பு | நிவின் பாலி உண்ணி முகுந்தன் மஞ்சிமா மோகன் சிஜோய் வர்கீஸ் |
வெளியீடு | 18 ஜனவரி 2019 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
மைக்கேல் (Mikhael (film)) இது 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த அதிரடித் திரைப்படம் [1] ஆகும். இதன் இயக்குனர் கனிப் அதானி என்பவர் ஆவார். கோபி சுந்தர் இசை அமைத்துள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நிவின் பாலி நடித்துள்ளார்.
கதை
அப்பாவின் செல்ல பிள்ளையான மைக்கேல் நிவின் பாலி சிறுவனாக இருக்கும்போது கார் விபத்தில் அப்பாவை இழக்கிறான். அம்மா வேறு ஒருவரை மணந்துகொள்ளுகிறார். அம்மாவின் மகளான தன் தங்கைக்கு ஊரில் பெரிய பணக்காரரின் மகன் மூலம் தொல்லை வருகிறது. அப்பையனை இப்பெண் தோற்கடிக்கிறாள். தோள்வியைத் தாங்கிக்கொள்ள துணிவில்லாத அப்பையன் பள்ளியின் மேல்கூரைமேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறான். அப்பையனின் அப்பாவும், சித்தப்பாவும் தன் மகனின் ஆத்மா சாந்தியடைய இந்த பெண்ணை தற்கொலை செய்துகொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்துகிறார்கள். அவர்களின் கோர பிடியிலிருந்து மேக்கேல் தன் தங்கையை காப்பாற்றினானா என்பதே கதை.