சாட்டை (திரைப்படம்)

சாட்டை சமுத்திரக்கனி நடிப்பில் 2012 செப்டம்பரில் வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தை தயாரித்தவர் இயக்குனர் பிரபு சாலமன். பிரபு சாலமனிடம் 'மைனா' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய அன்பழகன் இயக்கியிருக்கும் முதல் படம் இதுவாகும்.

சாட்டை
இயக்கம்எம்.அன்பழகன்
தயாரிப்புபிரபு சாலமன்
டான் மேசு
கதைஎம்.அன்பழகன்
திரைக்கதைஎம்.அன்பழகன்
இசைஇமான்
நடிப்புசமுத்திரக்கனி
தம்பி இராமையா
ஜூனியர் பாலையா
ஒளிப்பதிவுஜீவன்
படத்தொகுப்புநிர்மல்
கலையகம்ஷாலோம் ஸ்டுடியோஸ்
வெளியீடுசெப்டம்பர் 21, 2012 (2012-09-21)
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

கதை சுருக்கம்

மாவட்டத்திலேயே ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் மிகவும் பின் தங்கிய அரசு பள்ளி ஒன்றுக்கு பணி மாற்றம் செய்யப்படும் இயற்பியல் ஆசிரியர் தயாளன் (சமுத்திரக்கனி), அந்த பள்ளியின் நிலையை மாற்ற தலைமை ஆசிரியர் (ஜூனியர் பாலையா) துணையோடு பல மாற்றங்களை செய்கிறார். துணை தலைமை ஆசிரியர் சிங்கபெருமாள் (தம்பி இராமைய்யா) உள்ளிட்ட மற்ற ஆசிரியர்கள் தயாளனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தயாளன் தன் அணுகுமுறையால் மாணவர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார். மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியராகவும் ஆகி விடுகிறார்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவனான பழனி (யுவன்), தனது சக வகுப்பு மாணவி அறிவழகியை (மகிமா) காதலிப்பதாகச் சொல்லி அவருக்கு தொந்தரவு கொடுக்க, ஒரு கட்டத்தில் அறிவழகி விசம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அறிவழகி விசம் குடித்ததற்குக் காரணம் ஆசிரியர் தயாளன் தான் என்று புரிந்துகொள்ளும் அறிவழகியின் குடும்பத்தார் தயாளனை அடித்து காவலர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

மாணவியின் தற்கொலை முயற்சிக்குத் தான் காரணம் அல்ல என்பதை தயாளன் நிரூபித்து பல தடைகளை முறியடித்து அந்தப் பள்ளியை நல்ல நிலைமைக்கு கொண்டுவருகிறார்.

நடிகர்கள்

இசை

சாட்டை
ஒலிச்சுவடு
வெளியீடு14 January 2012
இசைப் பாணிFeature film soundtrack
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக் இந்தியா
இசைத் தயாரிப்பாளர்டி. இமான்
டி. இமான் காலவரிசை
மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)
(2012)
சாட்டை
(2012)
கும்கி
(2012)

இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார்.[1]

விருதுகள்

விருது வகை பரிந்துரை தீர்வு
இரண்டாவது தென் இந்திய உள்நாட்டு திரைப்பட விருதுகள் துணை நடிகருக்கான சிறந்த நடிகர் விருது தம்பி ராமையா வார்ப்புரு:பரிந்துரை

வெளி இணைப்புகள்

  1. http://www.saattaimovie.com/

வார்ப்புரு:பிரபு சாலமனின் திரைப்படங்கள்

  1. "Audio Beat: Saattai". The Hindu. 8 September 2012. பார்க்கப்பட்ட நாள் 21 September 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/index.php?title=சாட்டை_(திரைப்படம்)&oldid=33160" இருந்து மீள்விக்கப்பட்டது